Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2015 ஜூன் 11 , மு.ப. 05:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையின் முதல் தர பாதுகாப்பான இலத்திரனியல் மற்றும் தொடர்பாடல் கேபிள் வகைகளுக்கான வர்த்தக நாமமான களனி கேபிள்ஸ், இரத்தினபுரி சீவலி மத்திய பாடசாலையைச் சேர்ந்த தஷ்மில சமரசேகர அவர்களுக்கு கல்வி புலமைப்பரிசிலை வழங்கியிருந்தது. 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் உயர்ந்த புள்ளிகளை பெற்ற தஷ்மிலாவுக்கு, களனி கேபிள்ஸ் பிஎல்சி பிரதம நிறைவேற்று அதிகாரி மஹிந்த சரணபால வழங்கியிருந்தார்.
களனி கேபிள்ஸ் மூலமாக 'களனி விசுர' இலத்திரனியலாளர்கள் கழகத்தை சேர்ந்த சிறுவர்களுக்கு வருடாந்தம் இந்த புலமைப்பரிசில் வழங்கப்படுகிறது. பல்கலைக்கழக அனுமதியை பெற்றுக் கொள்ளும் வரை நிதி உதவிகளை இந்த புலமைப்பரிசிலை பெற்றுக் கொள்ளும் மாணவர்கள் பெறுவார்கள். இந்த ஆண்டின் புலமைப்பரிசில் வெற்றியாளரான தஷ்மில, களனி விசுர இரத்தினபுரி வலயத்தைச் சேர்ந்த உபுல் ரஜீவ சமரசேகரவின் பிள்ளை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பங்களிப்புக்காக இலத்திரனியல் தொழில்நுட்பவியலாளரான உபுல் ரஜீவ சமரசேகர களனி கேபிள்ஸ் ஸ்தாபனத்துக்கு தனது நன்றியை தெரிவித்திருந்ததுடன், கருத்து தெரிவிக்கையில், 'நான் இலத்திரனியல் தொழில்நுட்பவியலாளராக 20 வருடங்களாக பணியாற்றுகிறேன். களனி விசுர இலத்திரனியலாளர்கள் கழகத்தில் நான் 10 வருடங்களுக்கு மேலாக அங்கத்துவத்தை கொண்டுள்ளேன். இந்த கழகம் எமக்கு உலகத்தரம் வாய்ந்த அறிவை பெற்றுக் கொடுப்பதுடன், ஆயுள் காப்புறுதிக்கான வாய்ப்பையும் மேலும் பல அனுகூலங்களையும் வழங்குகிறது. குறிப்பாக, நிதிசார் உதவிகள் இலத்திரனியல் தொழில்நுட்பவியலாளர்களின் பிள்ளைகளுக்கு கல்விசார் தேவைகளுக்காக வழங்கப்படுகின்றன' என்றார்.
உபுல் ரஜீவ சமரசேகரவின் புதல்வர் தஷ்மில, கருத்து வெளியிடுகையில், 'களனி கேபிள்ஸ் நாமம் என்பது, எனது வாழ்நாளில் மறக்க முடியாது. களனி கேபிள்ஸ் மூலமாக வழங்கப்படும் இந்த நிதி உதவி என்பது, எனக்கு மட்டுமல்லாமல், எனது குடும்பத்துக்கு சிறந்த நிவாரணமாக அமைந்துள்ளது' என்றார்.
களனி கேபிள்ஸ் பிஎல்சி பிரதம நிறைவேற்று அதிகாரி மஹிந்த சரணபால |களனி விசுர' தொடர்பில் கருத்து தெரிவிக்கையில், 'களனி கேபிள்ஸ் நிறுவனத்தின் பிரதான சமூக பொறுப்புணர்வு செயற்திட்டங்களில் ஒன்றாக களனி விசுர அமைந்துள்ளது. இதன் மூலமாக நாட்டின் பெருமளவான இலத்திரனியல் தொழில்நுட்பவியலாளர்களுக்கு உதவிகள் வழங்கப்படுகின்றன. 'களனி விசுர' வை பொறுத்தமட்டில் நாட்டின் வேறெந்தவொரு இலத்திரனியல் தொழில்நுட்பவியலாளர் கழகங்களை விட அதிகளவு அங்கத்துவம் காணப்படுகின்றது. களனி விசுர மூலமாக வழங்கப்படும் உதவிகள், அறிவு மற்றும் அனுகூலங்கள் என்பன ஒப்பிடப்பட முடியாதவையாகும். இலத்திரனியல் தொழில்நுட்பவியலாளர்களின் அறிவை மேம்படுத்துவதுடன், அவர்களின் குடும்பத்தாருக்கு பெறுமதி சேர்ப்பது என்பது எமது பிரதான நோக்கமாகும். இந்த கல்விசார் புலமைப்பரிசில் என்பது அந்த திட்டத்தின் ஒரு அங்கமாகும். எதிர்வரும் ஆண்டுகளில் இந்த சமூக பொறுப்புணர்வு திட்டத்துக்கு மேலும் பெறுமதியை சேர்க்க களனி கேபிள்ஸ் திட்டமிட்டுள்ளது' என்றார்.
களனி கேபிள்ஸ் சந்தைப்படுத்தல் பிரிவின் பொது முகாமையாளர் அனில் முனசிங்க கருத்து தெரிவிக்கையில், 'சமூக பொறுப்பு வாய்ந்த கம்பனி எனும் வகையில், களனி கேபிள்ஸ் எப்போதும் மக்களின் நலன் குறித்து கவனம் செலுத்துகிறது. கம்பனி இலாபமீட்டுவதை மட்டும் நோக்காக கொள்ளாமல், இலங்கையர்களின் நலன் தொடர்பிலும் கவனம் செலுத்துகிறது. எனவே, நாம் பல்வேறு சமூக பொறுப்புணர்வு செயற்பாடுகளில் ஆண்டு முழுவதிலும் ஈடுபடுகிறோம். களனி கேபிள்ஸ் வர்த்தக நாமத்தை வரவேற்கும் எமது வாடிக்கையாளர்களும் இந்த திட்டம் தொடர்பில் பெருமை கொள்ளலாம். அவர்களும் இந்த திட்டத்தில் பங்களிப்பை வழங்குகின்றனர்' என்றார்.
களனி கேபிள்ஸ் பிஎல்சி வர்த்தக நாம அபிவிருத்தி முகாமையாளர் சன்ன ஜயசிங்க கருத்து தெரிவிக்கையில், 'வர்த்தக நாமத்தின் வெற்றிகரமான செயற்பாடு என்பது பங்காளர்களின் பெறுமதியில் அதிகளவு தங்கியுள்ளது. இவர்கள் வர்த்தக நாமத்துக்கு வௌ;வேறு வழிகளில் பெறுமதி சேர்க்கின்றனர். களனி கேபிள்ஸ் வர்த்தக நாமம் இதை நன்கு உணர்ந்து கொண்டு, அனைவரின் நலனிலும் கவனம் செலுத்துகிறுது' என்றார்.
நூற்றுக்கு நூறு வீதம் இலங்கையின் கம்பனியாக கடந்த நான்கு தசாப்த காலமாக களனி கேபிள்ஸ் திகழ்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கம்பனி 'Super Brands' தரத்தை இலத்திரனியல் மற்றும் தொலைத்தொடர்பாடல் துறையில் 2008 ஆம் ஆண்டில் எய்தியிருந்ததுடன், துறையில் நிபுணத்துவத்தை வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
2012 இல், களனி கேபிள்ஸ் பிஎல்சி 2012 இல், களனி கேபிள்ஸ் பிஎல்சி நிறுவனத்துக்கு சிறந்த வர்த்தக நாமத்துக்கான வெண்கல விருது வழங்கப்பட்டிருந்தது.
SLITAD மக்கள் அபிவிருத்தி விருதுகள் வழங்கலின் போது, பயிற்சிகள் மற்றும் அபிவிருத்தி செயற்பாடுகளுக்காக களனி கேபிள்ஸ் பிஎல்சி 2013 ஆம் ஆண்டில் தங்க விருதையும் பெற்றுக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
களனி கேபிள்ஸ் நிறுவனத்துக்கு தரச்சிறப்புக்கான ISO 9000:2008 சான்று, சிறந்த சூழல் முகாமைத்துவத்துக்கான ISO 14001:2004 தரச்சான்றும் வழங்கப்பட்டுள்ளன. தய்கி அகிமொடோ 5S விருதுகளின் தங்க விருதும் களனி கேபிள்ஸ் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.
1 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
4 hours ago
5 hours ago