2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

போதைப்பொருட்களை ஒழிப்பது தொடர்பில் தொழில்நுட்ப அமுலாக்கம்

A.P.Mathan   / 2015 ஜூன் 12 , பி.ப. 12:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

போதைப்பொருட்கள் கடத்துவதற்கு இலங்கையை பிரதான மார்க்கமாக சர்வதேச போதைப்பொருள் கடத்துநர்கள் பயன்படுத்துவதாக அண்மையில் வெளியாகியிருந்த ஊடக அறிக்கைகளிலிருந்து அறிந்து கொள்ள முடிந்தது.

இந்த அறிக்கைகளின் பிரகாரம், இலங்கையின் சுங்க போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் மூலமாக, தொடர்ச்சியாக பெருமளவு போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதை அறிந்து கொள்ள முடிந்தது. இவ்வாறான பெருமளவு முற்றுகைகள் இடம்பெற்ற போதிலும், போதைப்பொருட்கள் கடத்தப்படும் பிரதான கடத்தல் பாதையில் கேந்திர நிலையமாக இலங்கை அமைந்துள்ளதாக அறிந்து கொள்ள முடிகிறது.

ஊடக அறிக்கைகளின் பிரகாரம், உத்தியோப்பற்றற்ற தகவல்களின் மூலமாக நாட்டினுள் வருடாந்தம் 900 கிலோகிராம் ஹெரோயின் கொண்டு வரப்படுவதாக அறிந்து கொள்ள முடிகிறது. மேலும், விமான நிலையங்களின் மூலமாக தனிநபர்கள் போதைப்பொருட்களை கடத்துவது தொடர்பில் பெருமளவு கவனம் செலுத்தப்பட்ட போதிலும், துறைமுகங்களினூடாக கொள்கலன்களில் மறைத்து கொண்டு வரப்படும் போதைப்பொருட்கள் தொடர்பில் அதிகளவு கவனம் தற்போது செலுத்தப்படுகிறது.

விமான நிலையங்களினூடாக பயணிக்கும் பயணிகள் மீது சந்தேகங்கள் எழும் பட்சத்தில், அவர்கள் கடுமையான பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படுகின்றனர். ஆனாலும், 24,000க்கும் அதிகமான கொள்கலன்களில் கொழும்பு துறைமுகத்துக்கு கொண்டு வரப்படும் போதைப்பொருட்கள் தொடர்பில் பிரத்தியேகமான வகையில் ஆய்வுகளை மேற்கொள்ள முடியாத நிலை காணப்படுகிறது. இதற்கு பெருமளவு ஊழியர் படையணியும், நிபுணத்துவமும் அவசியமாகிறது.

இந்த குறைபாட்டின் காரணமாக, இலங்கை போதைப்பொருட்கள் கடத்தலுக்கு முக்கிய கேந்திர நிலையமாக மாற்றமடைவதற்கு காரணமாக அமைந்துள்ளது. எனவே, மேம்படுத்தப்பட்ட மற்றும் புத்தமைவான தொழில்நுட்பம் போன்றன நாட்டினுள் போதைப்பொருட்கள் கடத்தப்படுவதை கட்டுப்படுத்துவதற்கு அத்தியாவசியமானதாக அமைந்துள்ளன.

இந்த போதைப்பொருட்கள் நாட்டினுள் வருவதை தவிர்க்கும் வகையில் சட்ட விதிமுறைகளை அமுலாக்குவதற்கு, உயர் தரம் வாய்ந்த தொழில்நுட்பம் தற்போது காணப்படுகின்றன, அதில் கைக்கடக்கமான இனங்காணல் சாதனம் மூலமாக விரைவாகவும், மிகத்துல்லியமான முறையில் பரந்தளவிலான போதைப்பொருட்கள் இனங்காணல்களை மேற்கொள்ளக்கூடியதாக இருக்கும்.

வெடிபொருட்கள், இரசாயன பொருட்கள் மற்றும் உயிரியல் பொருட்கள், கதிரியக்க மற்றும் அணு சாதனங்கள், போதைப்பொருட்கள், ஆயுதங்கள் மற்றும் கள்ளக்கடத்தல் பொருட்கள் போன்றவற்றை இனங்காணும் தீர்வுகளை வழங்கும் சர்வதேச ரீதியில் முன்னணியில் திகழும் ஸ்மித்ஸ் டிடெக்ஷன், 'Target-ID' எனும் தீர்வை அறிமுகப்படுத்தியுள்ளது. முதலாவது Fourier-Transform Infrared (FTIR) spectroscopy கட்டமைப்பு என்பதன் மூலமாக வேகமாக, துல்லியமாக மற்றும் செலவீனம் குறைந்த முறையில் போதைப்பொருட்களை இனங்கண்டு கொள்ளக்கூடியதாக இருக்கும்.

குறைந்த எடையை கொண்டதுடன், கைக்கடக்கமான மற்றும் துல்லியமான அளவுகளை வழங்கும் ஆற்றல்படைத்த இந்த சாதனம், ஆய்வு கூடங்களின் மூலம் பெற்றுக் கொள்ளக்கூடிய தரவுகளுக்கு நிகரான தரவுகளை பெற்றுக் கொள்ள உதவியாக அமைந்திருக்கும். Target-ID மூலமாக பாவனையாளர்களுக்கு கடத்தப்படும் வளையங்களை இனங்காணும் பகுதிகளை கண்டறிவதற்கு உதவும் வகையிலுள்ளது. இதன் மூலம் கண்டறிதல் செயற்பாடுகளை இலகுவாக மேற்கொள்ளக்கூடியதாக இருக்கும் என்பதுடன், குறைந்தளவு பயிற்சிகள் மட்டுமே தேவையானதாக அமைந்திருக்கும்.

இலங்கையில் போதைப்பொருட்கள் கடத்தப்படுவதை குறைக்கும் வகையில், பெருமளவு நிதியை ஒதுக்க வேண்டிய தேவை காணப்படும் நிலையில், ஸ்மித்ஸ் டிடெக்ட்ஷனின் 'Sabre 5000' என்பது செலவீனம் குறைந்த கைகளுக்கு அடக்கமான கண்டறிதல் சாதனமாக அமைந்துள்ளது. இதன் மூலமாக வெடிபொருட்கள், இரசாயன பொருட்கள், நச்சு இரசாயனங்கள் மற்றும் போதைப்பொருட்கள் போன்றன இனங்காணல்களை மேற்கொள்ள முடியும். சட்ட செயற்படுத்தல் அமைப்புகளுக்கு சிறந்த சாதனமாக இது அமைந்துள்ளதுடன், இந்த அமைப்புகளின் அதிகாரிகளுக்கு தமது செயற்பாடுகளை சிறப்பாக முன்னெடுக்க உதவியாக அமைந்துள்ளன.

2 மணித்தியாலங்கள் இயங்கக்கூடிய பற்றரி மூலமாக, உள்ளக வெடிபொருட்களை இனங்காணக்கூடிய வாய்ப்புகள் காணப்படுகின்றன. மேலும், பாவனையாளர்கள் சந்தேகிக்கும் இடர்கள் மீது, சிறந்த ஆய்வுகளை மேற்கொள்ள உதவும் வகையில் அமைந்துள்ளது.

தேசத்தில் ஆகாய போக்குவரத்து பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், உயர்ந்த தொழில்நுட்பங்கள் முக்கியமானவையாக அமைந்துள்ளன. ஸ்மித்ஸ் டிடெக்ட்ஷனின் IONSCAN 600 என்பது விமான நிலைய அதிகாரிகளுக்கு எளிமையான முறையில், இலகு எடை கொண்ட, கைக்கடக்கமான மற்றும் செலவீனம் குறைந்த இந்த சாதனம் மூலமாக எளிமையான முறையில் இனங்காணல் செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன.  

இலகுவில் பயன்படுத்தக்கூடிய கட்டமைப்பின் காரணமாக, குறைந்தளவு பயிற்சிகள் போதுமானதாகும். கடுமையான வெப்பநிலைகளிலும் ஒப்பற்ற வகையில் இயங்கக்கூடியன. இந்த அலகின் வெப்பமான-மாற்றியமைத்துக் கொள்ளக்கூடிய பற்றரி மூலமாக தொடர்ச்சியாக செலவீனம் குறைந்த முறையாக இனங்காணல் செயற்பாடுகளுக்கு அமைந்துள்ளது.
 
சட்ட அமுலாக்க அதிகாரிகளுக்கு போதைப்பொருட்கள் இனங்காணல் செயற்பாடுகளை பொது இடங்களிலும் உயர் பாதுகாப்பு வலயங்களிலும் மேற்கொள்வதற்கு ஸ்மித்ஸ் டிடெக்ட்ஷனின் Ionscan Sentinel II சாதனம் உதவியாக அமைந்துள்ளது. இந்த சாதனத்தின் மூலமாக வெடிபொருட்கள் மற்றும் போதைப்பொருட்கள் ஆகியவற்றை இலகுவாக தலை முதல் பாதம் வரை இனங்காண்பதற்கு பயன்படுத்தப்படுகிறது. தொடு திரைகள் மூலமாக வர்ண திரையையும் கொண்டமைந்துள்ளது. இந்த இயந்திரம்; மூலமாக, RDX, PETN, TNT, Semtex, NG போன்றன இனங்காணப்படுவதுடன், Cocaine, Heroin, PCP, THC, Methamphetamine, Ecstasy மற்றும் பல போதைப்பொருட்களை இனங்காணும் வகையில் அமைந்துள்ளது.

ஸ்மித்ஸ் டிடெக்ட்ஷனின் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பம் என்பது, சர்வதேச மட்டத்தில் போதைப்பொருட்களை இனங்காண்பதற்காக செயற்படுத்தப்பட்டுள்ளது. இலங்கையிலும் போதைப்பொருள் கடத்தலை தவிர்க்கும் வகையிலான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு இது போன்ற உயர்ந்த மட்ட நவீன சாதனங்கள் பயன்படுத்தப்பட வேண்டிய தேவை காணப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X