2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

இரு வெள்ளி விருதுகளை தனதாக்கிய பீபள்ஸ் லீசிங்

A.P.Mathan   / 2015 ஜூன் 18 , பி.ப. 02:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் வங்கி சாரா நிதிசார் சேவைகளை வழங்கும் துறைசார் முன்னோடியான பீபள்ஸ் லீசிங் அன்ட் ஃபினான்ஸ் பிஎல்சி, SLIBFI (இலங்கை இஸ்லாமிய வங்கி மற்றும் நிதித்துறை) விருதுகள் வழங்கும் நிகழ்வில் இரு வெள்ளி விருதுகளை தனதாக்கியிருந்தது. தொடர்ச்சியாக நான்காவது வருடமாக இந்நிகழ்வு கொழும்பு கலதாரி ஹோட்டலில் இடம்பெற்றது.

இஸ்லாமிய வங்கியியல் மற்றும் நிதிச் சேவைகளை இலங்கையில் வழங்கும் தாபனங்களின் அர்ப்பணிப்பான செயற்பாடுகளை கௌரவிக்கும் வகையில் ஆறு பிரிவுகளில் இந்த SLIBFI விருதுகள் வழங்கப்படுகின்றன.  'ஆண்டின் சிறந்த சமூக மேம்பாட்டு இஸ்லாமிய நிதி தாபனம்' என்பதற்கான வெள்ளி விருதை பெற்றுக் கொண்டதுடன், பீபள்ஸ் லீசிங் நிறுவனத்தின் யூனியன் பிளேஸ் கிளை முகாமையாளர் அஸ்லம் பதுர்தீன் 'ஆண்டின் வளர்ந்து வரும் இஸ்லாமிய வங்கியியல் சேவை வழங்குநர்' எனும் வெள்ளி விருதையும் பெற்றிருந்தார். 

இந்த இரு விருதுகளையும் பெற்றுக் கொண்டது தொடர்பில் பீபள்ஸ் லீசிங் தாபனத்தின் வணிக அபிவிருத்தி மற்றும் சந்தைப்படுத்தல் பிரிவின் பதில் பொது முகாமையாளர் ரொஹான் தென்னகோன் கருத்து தெரிவிக்கையில், 'இந்த வெள்ளி விருதுகளை பெற்றுக் கொண்டமை தொடர்பில் பீபள்ஸ் லீசிங் பெருமையடைகிறது. SLIBFI விருதுகளை பெற்றுக் கொண்ட இரண்டாவது தடவையாக இது அமைந்துள்ளது. பீபள்ஸ் லீசிங் தாபனத்தின் 'Al-Safa' இஸ்லாமிய நிதியியல் பிரிவு தற்போது படிப்படியாக வலிமையடைந்து வருகிறது' என்றார்.

'எமது Al-Safa இஸ்லாமிய நிதிச் சேவை பிரிவை நாம் 2005 இல் ஆரம்பித்திருந்தோம். இந்த பிரிவின் சகல செயற்பாடுகளும் ஷரிஆ விதிமுறைகளுக்கமைய முன்னெடுக்கப்படுகின்றன. இதனை ஷரிஆ ஆலோசனை சபை மேற்பார்வை செய்கின்றது. இந்த செயற்பாடுகள் சிறப்பான வளர்ச்சியை பதிவு செய்துள்ளன. Al-Safa அலகின் கீழ் ஏழு கிளைகளை ஆரம்பித்து நாம் நடத்திவருகிறோம், எனவே, இஸ்லாமிய நிதிச் சேவைகளை எந்தவொரு பீபள்ஸ் லீசிங் கிளையிலிருந்தும் வாடிக்கையாளர்கள் பெற்றுக் கொள்ள முடியும்' என்றார்.

பீபள்ஸ் லீசிங் தாபனம், நாடு முழுவதும் பரந்த Al-Safa சேவை வலையமைப்பை உருவாக்க திட்டமிட்டுள்ளது, இதன் மூலமாக பரந்தளவு நிதிச் சேவைகளை சர்வதேச இஸ்லாமிய நிதியியல் விதிமுறைகளுக்கமைய வழங்க எதிர்பார்த்துள்ளது. 'எமது நிறுவனத்தின் சார்பாக ஆண்டின் சிறந்த வளர்ந்து வரும் இஸ்லாமிய நிதிச் சேவை வழங்கும் நபர்' எனும் விருதை வென்ற அஸ்லம் பதுர்தீன் மற்றும் பீபள்ஸ் லீசிங் தாபனத்தின் 'Al-Safa' இஸ்லாமிய நிதியியல் பிரிவுக்கும் பாராட்டுக்களை தெரிவிக்கிறேன்' என தென்னகோன் மேலும் குறிப்பிட்டார்.

1995ஆம் ஆண்டு பீபள்ஸ் லீசிங் கம்பனி, இலங்கையின் மாபெரும் அரச வங்கியான மக்கள் வங்கியின் அங்கத்துவ தாபனமாக தாபிக்கப்பட்டது, கடந்த 13 வருடங்களாக சந்தை முன்னோடி எனும் ஸ்தானத்தை பீபள்ஸ் லீசிங் கம்பனி தன்னகத்தே கொண்டுள்ளது. நாட்டில் காணப்படும் வங்கி சாராத தாபனங்களில் பாரிய லீசிங் சேவை வழங்குநர் எனும் பெருமையையும் கொண்டுள்ளது.

கம்பனியின் கடன் தரத்தை முன்னிட்டு, Fitch ரேட்டிங் லங்காவினால் AA-(lka) கடன் தரப்படுத்தல் பீபள்ஸ் லீசிங் தாபனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. நிதிச் சேவை வழங்குநர் எனும் வகையில், உயர்ந்த மட்டத்தில் பேணுகிறது. இலங்கையில் இரு சர்வதேச தரப்படுத்தல்களை பெற்ற ஒரே உள்நாட்டு நிதித் தாபனமாக பீபள்ஸ் லீசிங் கம்பனி திகழ்கிறது. தனது பொறுப்பு வாய்ந்த லீசிங் வர்த்தக நாம தெரிவுகளின் மூலமாக ஆசிய சந்தைகளில் பிரவேசிக்க பீபள்ஸ் லீசிங் திட்டமிட்டுள்ளது. ibrands 360 - World Consulting & Research Corporation இனால் 2012/ 13 காலப்பகுதியில் ஆசியாவின் மிகவும் நம்பத்தகுந்த வர்த்தக நாமங்களில் ஒன்றாக கௌரவிக்கப்பட்டுள்ளது.

குறுகிய காலப்பகுதியில் பீப்பல்ஸ் லீசிங் கம்பனி என்பது, தனது செயற்பாடுகளை விஸ்தரித்து, காப்புறுதி, நுண்நிதியியல், சொத்து அபிவிருத்தி மற்றும் வாகன பெறுமதி மதிப்பீடு மற்றும் நிர்வாக சேவைகளை முன்னெடுக்கும் வகையில் மேலும் ஐந்து அங்கத்துவ நிறுவனங்களான People’s Insurance Ltd, People’s Microfinance Ltd,  People’s Leasing property Development Ltd, People’s Leasing Fleet Management Ltd மற்றும் People’s Leasing Havelock Properties Ltd ஆகியவற்றை நிறுவியுள்ளது.

ஒரே கூரையின் கீழ் வாடிக்கையாளர்களுக்கு அவசியமான நிதிச் சேவைகளை பெற்றுக் கொள்ளக்கூடிய வசதிகளை வழங்குவதுடன், வாடிக்கையாளர்களின் பெறுமதி வாய்ந்த நேரத்தையும், பணத்தையும் சேமிக்கும் வகையில் பீபிள்ஸ் லீசிங் கம்பனி தனது சேவைகளை வழங்கி வருகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X