Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2015 ஜூன் 25 , பி.ப. 01:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
தேசத்தின் முன்னணி சுகாதார பராமரிப்பு நிறுவனமாக திகழும் சன்ஷைன் ஹெல்த்கெயார் நிறுவனம் அண்மையில் முன்னெடுத்திருந்த வருடாந்த விருதுகள் வழங்கும் நிகழ்வில் சிறப்பாக செயலாற்றிய தமது ஊழியர்களின் சாதனைகளை கௌரவித்திருந்தது. 'Passion to Win' எனும் தொனிப்பொருளின் கீழ் இடம்பெற்ற SHL 2015 விருதுகள் விழாவில் இந் நிறுவனம் அதன் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் குழு அங்கத்தவர்களை கௌரவித்து நிறுவனத்தின் சாதனைகளை கொண்டாடியது.
'எமது ஊழியர்களே SHL இனை மிகச்சிறந்த நிறுவனமாக உருவாக்கியுள்ளதுடன், சிறப்பாக செயலாற்றிய எமது ஊழியர்களின் முயற்சிகளை பாராட்டுவதோடு, நாம் மிகவும் மகிழ்ச்சியடைகின்றோம். இந்த விருதுகள் அவர்களது கடின உழைப்பு, உடன்பாடு மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றை சான்று பகர்வதாக அமைந்துள்ளது' என SHL இன் முகாமைத்துவ பணிப்பாளர் ஷியாம் சதாசிவம் தெரிவித்தார்.
இந் நிகழ்வில் SHL மற்றும் சன்ஷைன் ஹோல்டிங்ஸ் பிஎல்சி நிறுவனங்களைச் சேர்ந்த சிரேஷ்ட நிர்வாகிகளும், அனைத்து பிரிவுகளையும் சேர்ந்த சுமார் 550 இற்கும் மேற்பட்டவர்கள் பங்குபற்றியிருந்தனர். இந் நிகழ்வில்; பிரதம விருந்தினராக சன்ஷைன் ஹோல்டிங்ஸ் பிஎல்சி நிறுவனத்தின் தற்போதைய பணிப்பாளர் ஏர் சீப் மார்ஷல் (ஓய்வுபெற்ற) ஹர்ஷ அபேவிக்ரம கலந்து கொண்டிருந்தார்.
'இந் நிகழ்வின் முக்கிய அங்கமாக ஊழியர்களின் ஈடுபாடு அமைந்திருந்தது. அனைத்து செயல்பாடுகளுக்கும் அங்கீகாரம் மற்றும் பராட்டுகள் கிடைக்கக்கூடிய நிகழ்வாக இதுவமைந்துள்ளது. எமது மிகப் பெரிய சொத்து மக்கள் ஆகும். எமது மூலோபாயங்கள் மற்றும் பணிகளுக்கு ஊழியர்களை அடையாளப்படுத்த வேண்டியமை மிக அத்தியாவசியமாகும்' என SHL இன் செயல்பாட்டு பிரிவின் பொது முகாமையாளர் ஷாந்த பண்டார தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் 4 பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்பட்டிருந்ததுடன், இந்த நிறுவனத்தின் வளர்ச்சிக்கு 10,15 மற்றும் 20 வருடங்கள் என அர்ப்பணிப்புடன் பணியாற்றிய ஊழியர்களுக்கு SHL சேவை விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தன.
மனிதவளங்கள், IT, நிதி உள்ளடங்கலாக சேவைகளுக்கு ஆதரவுகளை வழங்குவதனூடாக பங்களிப்பு செலுத்திய மிகச்சிறந்த நிறைவேற்றுநர்களுக்கு SHL மேன்மை விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தன. மேலும்; கவர்ச்சிகரமான பெறுபேறுகள் மற்றும் இலக்குகளை எய்திய விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகளுக்கும் விருதுகள் வழங்கப்பட்டிருந்தன.
இந்த நிகழ்வில் சிறந்த முகாமையாளர்-சேவை உதவிகள், தரங்க டி சில்வா, உதவி முகாமையாளர் HR, சிறந்த முகாமையாளர் விநியோக சங்கிலி, வருண்; விஷ்வலிங்கம், உதவி மத்திய முகாமையாளர், சிறந்த நிறைவேற்று வர்த்தக செயற்பாடுகள் - சகில ரொமேஷ், சிரேஷ்ட நிறைவேற்றுநர், சிறந்த நிறைவேற்று Healthguard, எம்.விஷ்வநாதன், உதவி மருந்தாளர், சிறந்த சிரேஷ்ட சந்தைப்படுத்தல் முகாமையாளர், டி.ரமணன், வர்த்தக அபிவிருத்தி முகாமையாளர், சிறந்த சிரேஷ்ட முகாமையாளர் விற்பனை, ரமேஷ் குருப்பாரச்சி, சிரேஷ்ட ASM, சிறந்த முகாமையாளர் போன்ற ஆறு சிரேஷ்ட சாதனையாளர்களுக்கு 'முகாமைத்துவ பணிப்பாளர் விருதுகள' வழங்கி கௌரவிக்கப்பட்டன.
SHL நிறுவனத்தின் பெறுமதிகளை வெளிப்படுத்திய மற்றும் வாடிக்கையாளர் மற்றும் சமூகத்தின் மீது சிறப்பான சேவை மற்றும் பங்களிப்பினை வழங்கிய ஊழியர்களை அடையாளப்படுத்தும் வகையில் நிறுவனத்தினால் வழங்கப்படும் மிக கௌரவத்துக்குரிய விருதான 'தலைவர் விருதுகள்' இந் நிகழ்வின் அதியுயர் விருதாக கருதப்படுகிறது. மேலும் சிறந்த சந்தைப்படுத்தல் முகாமையாளர்(10மில்லியனை விட குறைவான இலக்கு குழுக்கள்) - ஜெரல்ட் நுகரா, சிரேஷ்ட கள முகாமையாளர், சிறந்த முகாமையாளர் சந்தைப்படுத்தல் (10மில்லியனை விட மேலான இலக்கு குழுக்கள்) - பாலமுருகன் எஸ், வர்த்தக முகாமையாளர், சிறந்த விற்பனை முகாமையாளர், எஸ்.லோகேஸ்வரன், பிரதேச விற்பனை மேற்பார்வையாளர் N&E, சிறந்த பிரதேச முகாமையாளர், (2.5மில்லியனை விட குறைவான இலக்கு குழுக்கள்) - ஹஸ்தக ஹெரந்த, சிறந்த பிரசே முகாமையாளர்(2.5மில்லியனை விட மேலான இலக்கு குழுக்கள்) - தர்ஷிகா தியாகேஸ்வரன், சிறந்த விற்பனை பிரதிநிதி – அசங்க நந்தன குமார என எட்டு விருதுகள் வழங்கப்பட்டன. மேலும் சிறந்த சந்தைப்படுத்தல் குழுவாக ஹில்டன் குழுவிற்கும், சிறந்த விற்பனை குழுவாக குருநாகல் விற்பனை குழுவினருக்கும் 'தலைவர் விருதுகள்' வழங்கப்பட்டிருந்தன.
SHL விருதுகள் 2015 நிகழ்வில் நிறுவன விருதுகள் மற்றும் சான்றிதழ்கள் ஆகியவற்றை மொத்தமாக 120 ஊழியர்கள் பெற்றுக்கொண்டிருந்ததுடன், அவர்களுக்கு சான்றிதழ்கள், கேடயங்கள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாக்கள் போன்றன வெகுமதிகளாக வழங்கப்பட்டிருந்தன.
இந் நிகழ்வின் தொனிப்பொருளான 'Passion to Win' என்பது வர்த்தகத்தில் சிறந்த இலக்குகளை செயல்பாட்டு செயல்திறனுடன் எய்துவதற்காக ஊக்குவிப்பினை கட்டியெழுப்பும் வகையில் SHL இன் உள்ளக முயற்சியாக ஆண்டுமுழுவதும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
'நாம் ஆண்டுமுழுவதும் ஒரே தொனிப்பொருள், ஒரே கருத்துடன் ஒன்றிணைந்துள்ளோம். எமது இணைப்பு மேலும் வலுப்பெற்றுள்ளது' என பண்டார தெரிவித்தார்.
SHL விருதுகள் 2015 நிகழ்வானது நிறுவனத்தினால் ஊழியர்களின் ஈடுபாட்டினை ஊக்குவிக்கும் நோக்கில் ஒழுங்கு செய்யப்படும் ஓர் பயணமாக அமைந்துள்ளது. மேலும் வர்த்தகத்தில் செயற்திறன் மற்றும் தன்னம்பிக்கையை கட்டியெழுப்பும் வகையில் ஊழியர் தினம் மற்றும் வெளிகள பயிற்சிகள் போன்றவையும் நிறுவனத்தின் நாட்காட்டியில் காணப்படுகின்றன.
1 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
4 hours ago
5 hours ago