2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

டீனேஜ் பெண்களுக்கான டிரையம்பின் அறிமுகம்

A.P.Mathan   / 2015 ஜூலை 02 , மு.ப. 10:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகின் முன்னணி உள்ளாடை தெரிவுகள் உற்பத்தியாளரான டிரையம்ப் இன்டர்நெஷனல் நிறுவனம், இலங்கையில் முதல் முறையாக டீனேஜ் பெண்களுக்காக விசேடமான உள்ளாடைத் தெரிவுகளை அறிமுகம் செய்துள்ளது. டிரையம்ப் நிறுவனம் உள்ளாடை சந்தையில் புரட்சியை ஏற்படுத்தும் வகையில் beginner பிரா வகைகளை அறிமுகம் செய்துள்ளது. 

மெஜஸ்டிக் சிட்டியில் அமைந்துள்ள டிரையம்ப் புட்டிக்கில் பிரபல தொலைக்காட்சி நாடக நடிகையும், டீனேஜ் மகளரொருவருக்கு தாயாருமான மீனா குமாரி அவர்களினால் இந்த புதிய தெரிவுகள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டன. 

'புதுமையான உள்ளாடைத் தெரிவுகளை உருவாக்குவதில் 128 வருடங்களுக்கும் மேலான அனுபவத்தை கொண்டுள்ள டிரையம்ப் நிறுவனமானது முதல் முறையாக அணிபவர்களுக்காக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட பிரா தெரிவுகளை அறிமுகம் செய்துள்ள முதல் வர்த்தகநாமமாக விளங்குகிறது. ஒவ்வொரு பெண்ணும் டிரையம்பின் beginner பிரா வகைளை அனுபவிக்க வேண்டும். வயதுக்கு பொருத்தமான வடிவமைப்புகள் இளம் பெண்களுக்கு சரியான ஆதரவை வழங்குகிறது. இத்தெரிவுகள் நடுத்தர மற்றும் குறைந்த ஆதரவு தேவைப்படும் பாடசாலை பெண்கள் மற்றும் டீனேஜ் பெண்களுக்கு மிகவும் ஏற்றது' என டிரையம்ப் இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா நிறுவனத்தின் தலைமை செயற்பாட்டு அதிகாரி அமல் பெர்னாண்டோ தெரிவித்தார்.

இலங்கைச் சந்தையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் பல்வேறு அளவுகளில் beginner பிரா வகைகளை டிரையம்ப் உருவாக்கியுள்ளது. பத்து வீதம் இழுபடக்கூடிய இலாஸ்டிக்கும், தொண்ணூறு வீதமான பருத்தியும் கொண்டுள்ள இந்த பிரா வகைகள் இளம் டீனேஜ் பெண்களின் உற்சாகமான வாழ்க்கைமுறைக்கு பொருத்தமானதாகவும், இலங்கையின் ஈரப்பதன் நிலைமைக்கு ஏற்றதாகவும் அமைந்துள்ளது.

இந்த பிரா வகைகள் ஆரோக்கியமான மார்பக வளர்ச்சிக்கு உதவுவதுடன், விளையாட்டுக்களில் ஈடுபடும் போது மார்பக திசுக்கள் காயமடைவதும் தடுக்கப்படுகிறது. இயற்கையான பருத்தியினால் உருவாக்கப்பட்டுள்ள இந்த தெரிவுகள் அணிபவருக்கு சௌகரியம் மற்றும் இயற்கையான உணர்வை வழங்குகிறது. இந்த தெரிவுகள் கஷுவல் தோற்றத்திற்கு மிகப் பொருத்தமானதாகும்.

இந்த தெரிவுகள் முழுமையான கப் பாதுகாப்புடன், 3 வகைகளில் கிடைக்கின்றன. மூன்று தெரிவுகளுமே இலாஸ்டிக் பாண்ட் உடன் high neck பிரா வகைகளாக உள்ளதுடன், அணிபவருக்கு சிறந்த ஆதாரத்தையும் வழங்குகிறது. இரண்டாவது பிரா வகையானது மென்மையாக வடிவம் மற்றும் தோற்றத்தை வழங்குவதுடன், வெளிப்படைத்தன்மையை குறைக்கும் வகையில் டபள் லேயர்களால் உருவாக்கப்பட்டுள்ளது. மூன்றாவது பிரா வகையானது மற்றைய இரு ஸ்டைகளுக்கும் ஒத்ததாக lower band மற்றும் bandeau அம்சங்களுடன் உள்ளதுடன், முழுமையான கப் ஆதாரம், நிலைத்தன்மை மற்றும் ஆதரவை வழங்குகிறது.

இலங்கையில் இந்த புதிய பிரா வகைகளின் அறிமுகத்தோடு, உலகின் முன்னணி உள்ளாடைத் தெரிவுகளை வடிவமைக்கும் முதல்தர உற்பத்தியாளரும், தன்னம்பிக்கையை உருவாக்குவதில் முன்னோடியும் தாம் என்பதை டிரையம்ப் மீண்டுமொருமுறை நிரூபித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X