Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2015 ஜூலை 02 , மு.ப. 10:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடந்த மே மாதம் 14ஆம் திகதி இலங்கை காப்புறுதி நிறுவகத்தின் ஆரம்ப வினா-விடை போட்டியில் ஜனசக்தி காப்புறுதி நிறுவனத்தின் பொது அணியினர் இரண்டாம் இடத்தினை வென்றெடுத்துள்ளனர். காப்புறுதி சம்பந்தமான பரீட்சைகள் மற்றும் கற்கைநெறிகள் அனைத்தையும் கையாண்டு வரும் முன்னணி தொழில்முறை நிறுவனமான இலங்கை காப்புறுதி நிறுவகமானது வலுவான காப்புறுதி சமூகத்தினை கட்டியெழுப்பும் குறிக்கோளுடன் அதன் ஆரம்ப வினா-விடை போட்டியை ஒழுங்கு செய்து வருகிறது. நாடுமுழுவதும் உள்ள புகழ்பெற்ற காப்புறுதி நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தி 25 அணிகள் இப் போட்டியில் கலந்து கொண்டிருந்தன.
ஜனசக்தி நிறுவனத்தின் சார்பாக இரு அணிகள் பங்குபற்றியிருந்தன. ஜனசக்தியின் பொது அணியினருக்கும், வெற்றியீட்டிய அணியினருக்குமிடையே கடுமையான போட்டி நிலவிய போதும் ஜனசக்தி அணியினர் இரண்டாம் இடத்தினை வென்றெடுத்ததுடன், ஜனசக்தியின் ஆயுள் அணியினர் 9ஆவது இடத்தினை தனதாக்கிக் கொண்டனர்.
'இந்த அங்கீகாரத்தை பெற்றதையிட்டு நாம் மிகவும் பெருமையடைகிறோம். ஜனசக்திக்கு இந்த வெற்றியை பெற்றுக்கொடுத்ததன் பின்னணியில் எமது அணியினரின் கடுமையான உழைப்பு மிக முக்கியமாக அமைந்திருந்தது. இந்த வெற்றியை நோக்கி எமது அணியினரை வழிநடத்திய முக்கிய நபரான எமது பயிற்றுவிப்பாளர் உதாரா தர்மவிமல குறித்து நாம் மிகவும் மகிழ்ச்சியடைகின்றோம்' என பொதுக் காப்புறுதி பிரிவின் பிரதம செயற்பாட்டு அதிகாரி தயாளினி அபேகுணவர்தன தெரிவித்தார்.
இந்த நட்புறவு அடிப்படையிலான போட்டியில் பங்குபற்றுநர்களிடம் காப்புறுதி சம்பந்தப்பட்டதும், அதன் வரலாறு, புவியியல், நடப்பு விவகாரங்கள், IQ, logic, இலக்கியம், விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு சம்பந்தப்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன.
'இந்த அணியினர் தமக்கு வழங்கப்பட்ட சவாலினை எதிர்கொள்வதற்கு ஆர்வத்துடன் இருந்தனர். அவர்கள் தமக்கு ஆர்வமான பிரிவுகளில் கடுமையாக உழைத்ததுடன், அணியினரின் வெற்றிக்கும் வழிவகுத்தனர். சிரேஷ்ட முகாமைத்துவம் மூலம் பங்குபற்றுநர்களுக்கு தொடர்ச்சியான ஆதரவு மற்றும் வழிகாட்டல்கள் வழங்கப்பட்டன' என வெற்றியீட்டிய அணியினரின் பயிற்றுவிப்பாளரும், தொழில்நுட்ப பிரிவின் முகாமையாளருமான உதார தர்மவிமல தெரிவித்தார்.
ஜனசக்தி நிறுவனமானது பயிற்சிகள் மற்றும் அபிவிருத்தி ஊடாக அதன் ஊழியர்கள் மீது முதலீடு செய்வதில் நம்பிக்கை கொண்டுள்ளது. வருடாந்தம் அதன் ஊழியர்களுக்காக 50 மில்லியன் ரூபாவினை முதலீடு செய்து வருவதன் விளைவாகவும், அர்ப்பணிப்பு காரணமாகவும் அதன் HR நடைமுறைகள் மற்றும் கட்டமைக்கப்பட்ட பயிற்சி திட்டங்களின் சிறப்புத்தன்மைக்காக SLITAD மக்கள் அபிவிருத்தி விருதுகள் வழங்கும் நிகழ்வில் வெள்ளி விருதை வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
55 minute ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
55 minute ago
4 hours ago
5 hours ago