2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

5ஆவது வருடமாக SLIIT இனால் மனித வளங்கள் செயலமர்வு ஏற்பாடு

A.P.Mathan   / 2015 ஜூலை 02 , மு.ப. 10:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒரு தசாப்த காலப்பகுதிக்கு மேலாக கல்வியகத்தின் மூலமாக SLIIT மாணவர்களுக்கு பரந்தளவு கல்வி மற்றும் துறைசார் வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. தொடர்ச்சியான 5ஆவது வருடமாக தனது வருடாந்த மனித வளங்கள் செயலமர்வை துறைசார்ந்த பங்காளர்களுடன் இணைந்து SLIIT ஏற்பாடு செய்திருந்தது. இந்த பங்காளர்களில் IFS, Univel, ZILLIONe, Volume, Vocanic, Virtusa, SimCentric Technologies, Tetran, B Connected, MIT, Zone 24x7, Ever Jobs, 99x Technology, Proavos, SLT, MAS, Metatechno Lanka, Logiwiz, Jagath Robotics, Mobitel, Jobs4u, Ceylon Biscuits Limited, Affno, Rezgateway மற்றும் Pearson ஆகியன உள்ளடங்கியுள்ளன. 

துறைசார்ந்த பங்காளர்களுடன் கணினிப்பீடத்தின் பீடாதிபதி கலாநிதி. மலித விஜேசுந்தர, வணிக பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் சந்தன பெரேரா, பொறியியல் பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் சமன் திலகசிரி, பட்டப்படிப்பு பிரிவின் பீடாதிபதி கலாநிதி சுலந்த குலசேகர, சர்வதேச கற்கைகளுக்கான பீடாதிபதி கலாநிதி. மஹேஷ கப்புருபண்டார மற்றும் கணினி பீடத்தின் தகவல் தொழில்நுட்ப பிரிவின் தலைமை அதிகாரி கலாநிதி பிரதீப சமரசிங்க  மற்றும் கணினி பீடத்தின் மென்பொருள் பொறியியல் பிரிவின் தலைமை அதிகாரி கலாநிதி. கோசல யாபா பண்டார ஆகியோர் பங்குபற்றியிருந்தனர்.

இந்த செயலமர்வின் நோக்கம் என்பது துறையைச் சேர்ந்த SLIIT பட்டதாரிகளின் அறிவுமட்டத்தை பரிசோதிக்கும் வகையில் அமைந்துள்ளதுடன், நிபுணர்களின் ஆலோசனைகளைப் பெற்று, எமது மாணவர்களை துறைசார்ந்த தேவைகளுக்கமைய தயார்ப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடிய வகையில் அமைந்துள்ளது' என சர்வதேச பீடத்தின் பீடாதிபதி கலாநிதி மஹேஷ கப்புருபண்டார தெரிவித்தார்.

மாணவர்களின் பெறுபேறுகள் தொடர்பில் Zillione சிஸ்டம்ஸ் சொலுஷன்ஸ் பொது முகாமையாளர் துசித குலரட்ன கருத்து தெரிவிக்கையில், 'கடந்த நான்கு ஆண்டுகளாக மாணவர்களை நாம் SLIIT இல் மாணவர்களை இணைத்து வருகிறோம். கடந்த ஆண்டுகளில் SLIITஇல் பட்டப்படிப்பை பூர்த்தி செய்தவர்கள் பெருமளவு மேம்படுத்தல்களை மேற்கொண்டிருந்தனர். SLIIT ஊழியர்களின் மூலமாக வெளிப்படுத்தப்படும் அர்ப்பணிப்பான செயற்பாட்டை நாம் வரவேற்கிறோம். உள்ளக பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்களில் மேம்படுத்தல்களுக்கமைவாக SLIIT இலிருந்து மாணவர்களை இணைத்துக் கொள்ள அதிகளவு ஊக்குவிக்கப்படுகிறோம்' என்றார்.

'இது போன்ற வருடாந்த செயலாமர்வுகளை முன்னெடுப்பதை நாம் எமது பொறுப்பாக கொண்டுள்ளோம். இதன் மூலம் வௌ;வேறு துறைசார்ந்த நிறுவனங்களுடன் நாம் உறவுகளை மேம்படுத்தி வருகிறோம். சிறந்த கல்வி அறிவுடனான ஆளுமை படைத்த சிறந்த ஒழுக்கமான மாணவர்களை தயார்ப்படுத்துவது எமது நோக்கமாகும்' என கலாநிதி கபுருபண்டார தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X