2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

புதிய கூந்தல் சாதன தெரிவுகளை அறிமுகம் செய்துள்ள BASICARE

A.P.Mathan   / 2015 ஜூலை 02 , மு.ப. 10:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச அழகுசாதன வர்த்தகநாமமான Basicare ஆனது இந்த திருமண காலப்பகுதியில் ஆச்சரியமூட்டும் வகையிலான கூந்தல் சாதன தெரிவுகளை அறிமுகம் செய்துள்ளது. இந்த நவீன தெரிவுகளில் பரிபூரணமான திருமண தோற்றத்தை உருவாக்கக்கூடிய இலாஸ்டிக் கூந்தல் பாண்ட்கள், வர்ணயமயமான Bobby பின்கள், ஹெயார் பேண்ட்ஸ், snap clips மற்றும் self-holding rollers போன்றன உள்ளடங்குகின்றன.

நீங்கள் விரைவில் மணப்பெண்ணாகவோ, மணப்பெண் தோழியாகவோ அல்லது திருமண விருந்தினராக கலந்து கொள்ள வேண்டியிருப்பின், Basicare ஆனது உங்கள் அழகுக்கு அழகு சேர்க்கும் வகையில் முழுமையான கூந்தல் சாதன தெரிவுகளை வழங்கி வருகிறது. புதுப்பாணியிலமைந்த நகர்ப்புற திருமணங்களுக்கு செல்கையில் ultra-straight hair மூலம் sleek low ponytail சிகையலங்காரத்தை முயற்சிக்கலாம். உங்கள் கூந்தலுக்கு அதிக சேதத்தை ஏற்படுத்தாததும், இலகுவில் அகற்றக்கூடியதுமான snag-free hair இலாஸ்டிக் பாண்ட் வகைகளை பயன்படுத்தலாம்.

இந்த காலப்பகுதியில் Basicare இன் அழகிய chic ஹெட்பேண்ட்கள் மூலம் அதிசயத்தக்க அழகினை உடனடியாக உருவாக்கிக் கொள்ளுங்கள். மிகவும் எளிதான, கிளாமர் தோற்றத்தை வழங்கும் ஹெட்பேண்ட் கிளாசிக் தெரிவுகள் என்பன பேஷன் மீது ஆர்வம் கொண்ட ஒவ்வொரு பெண்ணிற்கும் மிகவும் பொருத்தமானதாகும்.

Basicare இன் Bobby பின்கள் உங்கள் கூந்தலை தாங்கிப் பிடித்து சிகையலங்காரத்தின் அழகினை அதிகரிப்பதுடன், உங்கள் திருமண ஆடையையும் மெருகேற்;றுகிறது. ஒரே நேரத்தில் வெவ்வேறு நிறங்களிலோ அல்லது பொருத்தமான ஒரே நிறத்திலோ தேர்ந்தெடுத்து அணியவும். Basicare இன் Bobby பின்கள் எந்தவொரு திருமண சிகையலங்காரத்திற்கும் ஏற்றது. 

கூந்தலை பின்னோக்கி உயர்த்திச் சீவுதல் (bangs back) மற்றும் curly messy bun போன்ற சிகையலங்காரங்களை தாங்கக்கூடிய வகையில் Basicare இன் Snap கிளிப்கள் உள்ளன. இவை பல்வேறு வர்ணத்தெரிவுகளிலும், அளவுகளிலும் கிடைக்கின்றன. Basicare இன் Self-Holding Rollers மூலம் மென்மை, bouncy, ரொமாண்டிக்கான சுருட்டையான கூந்தலை பெறலாம். Basicare இன் உற்பத்தி தெரிவுகளில் ஹெயார் பிரஷ் வகைகள், styling eyelashes, மேக்கப் ஸ்பொன்ஜ், மேக்கப் பிரஷ்கள் மற்றும் மெனிகியூர் உற்பத்திகள் போன்றன காணப்படுகின்றன.

இந்த புதிய கூந்தல் சாதன தெரிவுகள் குறித்து இந் நிறுவனத்தின் பணிப்பாளர் சரத் ஜயசேகர கருத்து தெரிவிக்கையில், 'Basicare இன் நவீன கூந்தல் சாதன தெரிவுகள் உங்கள் திருமண ஆடைக்கு புதுப்பொலிவை வழங்குகிறது. எமது புதிய கூந்தல் சாதன தெரிவுகள் அனைவரது பிரத்தியேக பாணி மற்றும் தோற்றத்திற்கு பொருத்தமானதாக அமைந்துள்ளது' என்றார்.

சருமம் மற்றும் அழகு பராமரிப்பு துறையில் இலங்கையில் பரந்தளவிலான அழகுசாதன பொருட்களை வழங்கிவரும் முன்னோடியான DermaCare லிமிடெட் நிறுவனத்தின் மூலம் Basicare சந்தைப்படுத்தப்பட்டு வருகிறது. Basicare தெரிவுகள் Odel – Backstage, ஆர்பிகோ சுப்பர் சென்டர்கள் மற்றும் நாடுமுழுவதும் உள்ள அழகுசாதன கடைத்தொகுதிகளில் கிடைக்கின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X