2025 செப்டெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

வத்தேகம மற்றும் கட்டுகஸ்தொட்டையில் கொமர்ஷல் வங்கி கிளை

A.P.Mathan   / 2015 ஜூலை 02 , மு.ப. 11:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

கண்டி மாவட்டத்தில் கொமர்ஷல் வங்கி மேலும் இரண்டு கிளைகளைத் திறந்துள்ளது. இது மத்திய மாகாணத்தில் வங்கியின் நிலையை மேலும் ஸ்திரப்படுத்தியுள்தோடு  நாடளாவிய ரீதியில் அதன் கிளைகளின் எண்ணிக்கையை 243 ஆகவும் அதிகரித்துள்ளது.

கொமர்ஷல் வங்கியின் வத்தேகம கிளை 73B கண்டி வீதி வத்தேகம என்ற முகவரியில் அமைந்துள்ளது. வங்கியின் தனியார் வங்கி சேவைக்கு பொறுப்பான பிரதி பொது முகாமையாளர் சந்தன குணசேகர இந்தக் கிளையை திறந்து வைத்தார். இங்கு ATM இயந்திரம் ஒன்றும் நிறுவப்பட்டுள்ளது. நாட்டிலுள்ள ஏனைய கொமர்ஷல் வங்கி கிளைகளில் கிடைக்கின்ற சகல சேவைகளையும் இங்கும் பெற்றுக் கொள்ள முடியும்.

இரண்டாவது கிளை இலக்கம் 187 கட்டுகஸ்தொட்டை வீதியில் உள்ள செரண்டிப் பினான்ஸ்  'மினிகொம்' நிலையமாகத் திறக்கப்பட்டுள்ளது. கொமர்ஷல் வங்கியின் திட்ட அமுலாக்கல் பிரிவு உதவி பொது முகாமையாளர் றிச்சர்ட் ரொட்ரிகோ இதனை திறந்து வைத்தார். ஏனைய 'மினிகொம்' நிலையங்களில் கிடைக்கும் சகல வசதிகளையும் இங்கும் பெற்றுக் கொள்ளலாம். பணப் பரிமாற்றம், காசோலை சேவைகள், சேமிப்புக் கணக்குகளைத் திறத்தல், நிலையான வைப்புக்கள், வெளிநாட்டு நாணய கணக்கு, வெளிநாட்டு காசோலைகள், பயண காசோலைகள் மற்றும் வெளிநாட்டு நாணய சேவைகள் என்பன இதில் அடங்கும்.

மேலே உள்ள படத்தில் வங்கியின் தனியார் வங்கி சேவைக்கு பொறுப்பான பிரதி பொது முகாமையாளர் சந்தன குணசேகர வத்தேகம கிளையில் முதலாவது வைப்பைப் பெற்றுக் கொள்வதையும், கீழே கொமர்ஷல் வங்கியின் திட்ட அமுலாக்கல் பிரிவு உதவி பொது முகாமையாளர் றிச்சர்ட் ரொட்ரிகோ கட்டுகஸ்தொட்ட 'மினிகொம்' கிளையை மங்கள விளக்கேற்றி திறந்து வைப்பதையும் காணலாம்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X