Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2015 ஜூலை 10 , மு.ப. 06:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
வென்ச்சர் என்ஜின் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி நிகழ்ச்சி OZO கொழும்பில் ஜுன் 23 ஆம் திகதி நிறைவு கட்டத்தை எய்தியிருந்தது. இதன் மூலம் தொடர்ச்சியாக நான்கு ஆண்டுகளாக இந்த நிகழ்ச்சி முன்னெடுக்கப்பட்டிருந்தது. உயர்ந்த தரப்படுத்தலை பெற்ற 11 செயற்திட்டங்கள் இறுதி சுற்றுக்காக தெரிவு செய்யப்பட்டிருந்தது. லங்கன் ஏஞ்சல் நெட்வேர்க் மற்றும் லங்கன் ஏஞ்சல் நெட்வேர்க் ஆகியவற்றைச் சேர்ந்த சர்வதேச ரீதியிலிருந்து இந்நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த நடுவர்களுக்கு தமது வியாபார திட்டங்கள் குறித்த விளக்கங்களை சமர்ப்பிப்பதற்கான வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டிருந்தது. இந்த இறுதி விளக்கங்கள் வழங்கலை தொடர்ந்து இந்த ஆண்டின் முதல் மூன்று இடங்களை Stripes & Checks, Yamu மற்றும் Audio Book ஆகியன வெற்றியீட்டியிருந்தன.
ப்ளு ஓசியன் வென்ச்சர்ஸ் இன் இணைத் தாபகரான பிரஜீத் பாலசுப்ரமணியம் திறமை வாய்ந்த முதலீட்டாளர்களின் மதிப்பீட்டு முறை தொடர்பில் கருத்து வெளியிடுகையில், 'இந்த ஆண்டின் திறமை குழாமில் பல்வேறு துறைகளை சேர்ந்தவர்கள் விண்ணப்பித்திருந்தனர். புத்தமைவான சிந்தனை மற்றும் ஆர்வத்தையும் எம்மால் பங்குபற்றுநர்கள் மத்தியில் காணக்கூடியதாக இருந்தது. அவர்கள் விளக்கமளித்திருந்த வியாபார திட்டங்களில் உள்ளடங்கியிருந்த தூர நோக்கு சிந்தனை மற்றும் நடைமுறைச்சாத்தியமான தீர்வுகள் தொடர்பில் முதலீட்டாளர்கள் அதிகளவு ஆர்வத்தை வெளிப்படுத்தியிருந்தனர். இந்த திட்டங்கள் வருடா வருடம் முன்னேற்றமடைந்த நிலையில் காணப்படுகின்றன. இதன் மூலம் தொழில் முயற்சியாளர்கள் அதிகளவு நம்பிக்கையுடன் தமது வியாபார திட்டங்களை முன்னெடுக்கின்றனர் என்பது புலப்படுகிறது. இலங்கையில் இந்த கட்டமைப்பை உருவாக்க முடிந்தமையையிட்டு வென்ச்சர் என்ஜின் பெருமை கொள்கிறது' என்றார்.
வென்ச்சர் என்ஜின் 2015 இல், 150 விண்ணப்பங்கள் கிடைத்திருந்தன. இதில் உணவு தொழில்நுட்பம் மற்றும் பதப்படுத்தல், ஆயுர்வேதம் மற்றும் சுகாதாரத்துறை, கல்வி, அலங்காரம், விளையாட்டு, இரசாயனம் மற்றும் உர வகைகள், தகவல் தொழில்நுட்பம் மற்றும் ந-வணிகம், சமூக ஊடக வலையமைப்பு, சுற்றுலாத்துறை மற்றும் விருந்தோம்பல், உயிரியல் தொழில்நுட்பம் மற்றும் சரக்கு கையாள்கை போன்ற துறைகளிலிருந்து இந்த விண்ணப்பங்கள் கிடைத்திருந்தன. இலங்கை, இந்திய, சீன மற்றும் அமெரிக்க வியாபார சமூகங்களைச் சேர்ந்த முதலீட்டாளர்கள் இந்த இறுதி சுற்றில் பங்கேற்றிருந்தனர்.
அதிகளவு போட்டிகரத்தன்மை வாய்ந்த உயர் மட்ட நிகழ்வு எனும் வகையில், இந்த ஆண்டின் வெற்றியாளர்களில் உள்ளடங்கியிருந்த அளவான சட்டைகளை உற்பத்தி செய்யும் Stripes & Checks, இலங்கையில் உணவகங்கள் மற்றும் ஓய்வுநேர விருந்தோம்பல் பகுதிகளை காண்பிக்கும் இணையத்தளமான Yamu மற்றும் ஓடியோ வடிவமைப்பில் புத்தகங்களை விற்பனை செய்யும் நிறுவனமான Audio Book ஆகியன உள்ளடங்கியுள்ளன. இந்த வியாபாரங்களுக்கான அடுத்த கட்டம், மற்றும் இறுதி சுற்றுக்கு தெரிவாகியிருந்த இதர 8 நிறுவனங்களுடன் முதலீட்டாளர்கள் உரையாடல்களை மேற்கொண்டு, நடைமுறைச் சாத்தியமான தீர்மானங்களை மேற்கொள்ளவுள்ளனர்.
இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் பிரதான உள்ளம்சங்களில், பங்குபற்றுநர்கள் ஒவ்வொருவருக்கும் உரிய வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது. போட்டி முழுவதும், விளக்கங்கள் சமர்ப்பிப்பு, பயிற்சிப்பட்டறைகள் மற்றும் விளக்கமளிப்பு போன்ற சகல செயற்பாடுகளிலும் பங்குபற்றுநர்கள் மற்றும் லங்கன் ஏஞ்சல் நெட்வேர்க முதலீட்டாளர்கள் நெருக்கமாக செயலாற்றியிருந்தனர். இதன் மூலமாக இறுதி சுற்றுக்கு தெரிவாகியவர்களுக்கு மேலதிகமாக பல நிறுவனங்களுக்கு முதலீடுகளை மேற்கொள்வதற்கான வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டிருந்தது.
எக்ஸ்போலங்கா குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஹனீஃவ் யூசுஃவ் கருத்து தெரிவிக்கையில், 'தொழில் முயற்சியாண்மை என்பதை தனது அடிப்படையாக கொண்ட நிறுவனம் எனும் வகையில், எக்ஸ்போலங்கா, வென்ச்சர் என்ஜின் கட்டமைப்பின் ஒவ்வொரு செயற்பாட்டிலும் அதிக நம்பிக்கை கொண்டுள்ளது. புதிய வியாபாரங்களின் வளர்ச்சியில் நாம் காண்பிக்கும் தொடர்ச்சியான ஊக்குவிப்பாக இந்த ஒன்றிணைவு அமைந்துள்ளது. அத்துடன், கனவுகளை நனவாக்கும் வகையிலும் திறமை வாய்ந்த நபர்களை ஊக்குவிக்கும் வகையிலும் எமது ஆதரவு இந்த திட்டத்துக்கு அமைந்துள்ளது' என்றார்.
இந்த ஆண்டின் போட்டி தொடர்பில் ஒரயன் சிற்றி பிரதம நிறைவேற்று அதிகாரி ஜீவன் ஞானம் கருத்து தெரிவிக்கையில், 'SA குழுமம் மற்றும் தற்போதைய ஒரயன் ஆகியன உறுதியான தொழில் முயற்சியாண்மையில் தாபிக்கப்பட்டவை. ஒவ்வொரு வருடமும் நாம் இந்த திட்டத்தில் பங்கேற்று வருகிறோம். புதிதாக ஆரம்பிக்கும் நிலையிலுள்ள நிறுவனங்களுக்கு உதவிகளை வழங்குவது எனும் எமது செயற்பாட்டின் மூலம், சமூகத்துக்கு மீள வழங்குவது என்பதற்கமைய அமைந்துள்ளது' என்றார்.
டயலொக் அக்சியாடா பிஎல்சி நிறுவனத்தின் குழும பிரதான தகவல் அதிகாரி அந்தனி ரொட்ரிகோ கருத்து தெரிவிக்கையில், 'வென்ச்சர் என்ஜின் திட்டத்துடன், தொடர்ச்சியான நான்காவது ஆண்டாக இணைந்து கொள்வதற்கு எமக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது தொடர்பில் நாம் நாம் மகிழ்ச்சியடைகிறோம். இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் மூலமாக வழங்கப்படும் வழிகாட்டல்கள் மற்றும் முதலீடுகள் மூலமாக குறித்த வழிகாட்டல்களையும், முதலீடுகளையும் பெறும் நிறுவனங்களுக்கு சிறந்த நிலையை எய்த முடியும் என்பதுடன், உள்நாட்டில் மட்டுமல்லாமல், சர்வதேச மட்டத்திலும் புகழ்பெறக்கூடிய வாய்ப்பை பெறும்' என்றார்.
கடந்த ஆண்டு போட்டியில் பங்குபற்றியிருந்தவரான ஒமெக் டெக்னொலஜிஸ் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் எஹந்த சிரிசேன கருத்து தெரவிக்கையில், 'வென்ச்சர் என்ஜின் என்பது, உண்மையில் சிறந்த அனுபவமாகும். எமது வளர்ச்சியில் பங்களிப்பு வழங்குவது மட்டுமல்லாமல், அதிகளவு முதலீடுகளை பெற்றுக் கொள்ளவும் உதவியாக அமைந்துள்ளது. குறுகிய காலப்பகுதியில் அதிகளவு இடைவெளிகளை நிரப்பிக் கொள்ளவும், ஆலோசனைகளை வழங்கவும் உதவியாக அமைந்துள்ளது. இந்த ஆண்டின் வெற்றியாளர்களுக்கு நான் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்வதுடன், தொடர்ந்த அவர்களின் வியாபார நடவடிக்கைகள் சிறப்பாக இடம்பெற வாழ்த்துகிறேன்' என்றார்.
இந்தியன் ஏஞ்சல் நெட்வேர்க் தலைமை அதிகாரி பத்மஜா ருபரெல் கருத்து தெரிவிக்கையில், 'வென்ச்சர் என்ஜின் ஒவ்வொரு வருடமும் பெருமளவு வளர்ச்சியடைந்த வண்ணமுள்ளது. அதிகளவு ஆரம்ப நிலையிலுள்ள நிறுவனங்களின் வளர்ச்சிக்கு ஏதுவாக அமைந்திருந்தது. இலங்கையில் தொழில் முயற்சியாண்மை என்பது நிலைத்திருக்கும் நோக்கில் வென்ச்சர் என்ஜின் முன்னெடுக்கப்படுவதுடன், இந்த அமைப்பின் தாபிப்பு பங்காளராக இந்தியன் ஏஞ்சல் நெட்வேர்க் திகழ்வதையிட்டு பெருமை கொள்கிறது' என்றார்.
இந்த செயற்திட்டத்தின் நிலைவரம் தொடர்பில் லங்கன் ஏஞ்சல் நெட்வேர்க் தலைமை அதிகாரி எரிக் விக்ரமநாயக்க கருத்து தெரிவிக்கையில், 'இலங்கையின் தொழில் முயற்சி தொடர்பான கட்டமைப்பில் பெறுமதி வாய்ந்த நிகழ்ச்சித்திட்டமாக வென்ச்சர் என்ஜின் அமைந்துள்ளது. இலங்கையின் பல நிறுவனங்களுக்கு விஸ்தரிப்புகளை மேற்கொள்வதற்கு அவசியமான நிதிகளை பெற்றுக் கொடுக்கும் வகையில் அமைந்திருந்தது. வென்ச்சர் என்ஜினின் கொள்கை அளவிலான பங்காளர் எனும் வகையில் லங்கன் ஏஞ்சல் நெட்வேர்க், ஆரம்ப நிலையிலுள்ள நிறுவனங்களுக்கு உதவிகளை வழங்குகிறது' என்றார்.
இந்த நிகழ்ச்சித்திட்டம் ஆரம்பித்து இரு மாதங்கள் கடந்துள்ள நிலையில், மிகவும் விறுவிறுப்பான நிலையை எய்தியுள்ளது. வியாபார திட்டங்களை பூர்த்தி செய்வது தொடர்பில் தொழில் முயற்சியாளர்களும் முதலீட்டாளர்களும் இணைந்து செயலாற்றிய வண்ணமுள்ளனர். இந்த நிகழ்ச்சித்திட்டத்தில் கடந்த ஆண்டுகளில் நிதி முதலீடுகளை பெற்றுக் கொண்டவர்களின் மூலமாக வழிகாட்டல்களும் வழங்கப்பட்டிருந்தன.
கடந்த நான்கு ஆண்டுகளாக வென்ச்சர் என்ஜின் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டிருந்ததுடன், 2016 ஆம் ஆண்டிலும் பெருமளவு முதலீட்டாளர்கள் மற்றும் ஆலோசகர்களுடன் தொழில் முயற்சியாளர்களை சந்திக்கவுள்ளது. மேலும், இந்த திட்டம் தொடர்பான விவரங்களை www.ventureengine.lk எனும் இணையத்தளத்திலிருந்து பெற்றுக் கொள்ளலாம்.
24 minute ago
1 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
1 hours ago
4 hours ago