2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

டயர் பராமரிப்பு சேவைகளைத் தொடங்கியுள்ள சியெட்

A.P.Mathan   / 2015 ஜூலை 17 , மு.ப. 05:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் மோட்டார் வாகனங்களைப் பாவிக்கின்றவர்கள் மத்தியில் சிறந்த டயர் பராமரிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் ஒரு புதிய முன்னோடி திட்டத்தை தொடங்கியுள்ளதாக இலங்கையின் டயர் தேவையில் அரைவாசியை பூர்த்தி செய்யும் சியெட் களனி ஹோல்டிங்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்தத் திட்டத்தின் முதற் கட்டமாக 50 வந்த்தக நிறுவனங்களில் நடமாடும் டயர் பராமரிப்பு சேவைகள் இடம்பெறவுள்ளன. இதன் போது டயர்களின் வாயு அழுத்த அளவு உட்பட ஏனைய பல அம்சங்களும் பரலிசீலிக்கப்படும். அத்தோடு டயர்கள் மூலம் கூடுதலான மைல்கள் தூரத்தை எவ்வாறு அடைய முடியும், நைதரசன் நிரப்பல், கூடிய பாதுகாப்பு, என்பன பற்றி ஆலோசனைகளும் வழங்கப்படும் என்று கம்பனி அறிவித்துள்ளது.

'மோட்டார் வாகனக்காரர்கள் டயர்களை பெரிதாகக் கவனத்தில் கொள்வதில்லை. பாதுகாப்பு, வசதி, மற்றும் வாகனத்தின் பொறியில் பண்பு என்பனவற்றில் அவை வழங்கும் பங்களிப்பை அவர்கள் குறைவாக மதிப்பிடுகின்றனர்' என்று கூறினார் சியெட் களனி ஹோல்டிங்ஸின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் பிரிவின் உப தலைவர் ரவி தத்லானி. 'இலங்கையில் ஆகக் கூடுதலாக விற்பனையாகும் டயர் என்ற வகையில் வாகன ஓட்டல் பற்றிய பாதுகாப்பு வழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும், ஏந்த வகையை சேர்ந்த டயர் ஆயினும் சரி அதில் ஆகக் கூடுதலான பலனை எவ்வாறு பெற்றுக் கொள்வது என்பது பற்றி அறிவூட்டுவதிலும் சியெட் தலைமை தாங்குகின்றது' என்று அவர் மேலும் கூறினார்.

'இந்த டயர் பராமரிப்பு சேவை மூலம் எமது சியெட் டயர்களை இதுவரை பாவித்திராத வாகன உரிமையாளர்களுக்கு சியெட் ரேடியல் டயர்களைப் பாவித்து அதன் தரத்தை தாமே உணர்ந்து கொள்வதற்கான ஒரு வாய்ப்பும் வழங்கப்படுகின்றது' என்று தத்லானி மேலும் கூறினார்.

இந்த புதிய திட்டத்தின் கீழ் விஷேடமாக உருவாக்கப்பட்ட டயர் பராமரிப்பு நடமாடும் பிரிவு தொழில்நுட்ப நிபுணர்கள் மற்றும் உபகரணங்கள் சகிதம்  ஒவ்வொரு வந்த்தக நிறுவனத்துக்கும் நேரடியாக விஜயம் செய்யும். இந்த விஜயங்கள் பற்றி குறிப்பிட்ட கம்பனிகளுக்கு முன் கூட்டியே அறிவிக்கப்படும்.

டயர்கள் பரிசீலிக்கப்படுவதற்கு மேலதிகமாக தேவைக்கு ஏற்ப ஏனைய சேவைகளும் வழங்கப்படும். அத்தோடு இலவசமாக நைதரசனும் நிறப்பி கொடுக்கப்படும். இது டயர்கள் மூலம் கூடிய மைல்தூரத்தை ஓடக் கூடிய நிலையை உருவாக்கும். அத்தோடு இதில் பங்கேற்கும் சகல வாடிக்கையாளர்களுக்கும் அடுத்த முறை சியெட் டயர்களை கொள்வனவு செய்கின்ற போது கழிவுகளைப் பெற்றுக் கொள்ளக் கூடிய வவுச்சர்களும் வழங்கப்படும்.

இலங்கையின் டயர் சந்தையில் ரேடியல் டயர் வகைகளில் தலைமை தாங்கும் வர்த்தக முத்திரை சியெட்டே ஆகும். அத்தோடு ஏனைய வகை வர்த்தக டயர்களிலும் தலைமைத்துவ நிலையை அது கொண்டுள்ளது. இவ்வாண்டு முற்பகுதியில் உள்ளுரில் தயாரிக்கப்பட்ட ஆறு அளவுகளிலான விஷேட வகை டயர்களை சந்தையில் அறிமுகம் செய்தது. இவை கனரக சேவைகளுக்கும் கைத்தொழில் பிரயோகத்துக்கும் உரியவையாகும்.

தற்போது இந்தியாவில் தலைமையகத்தைக் கொண்டுள்ள சியெட் உலகளாவிய ரீதியில் 110 நாடுகளில் நிலைகொண்டுள்ள ஒரு வர்த்தக முத்திரையாகும். 1924ம் ஆண்டு காலப்பகுதியில் இத்தாலியில் தோற்றம் பெற்ற Cavi Electrici Affini Torino, அல்லது Electrical Cables & Allied Products of Turin, என்பதன் சுருக்க வடிவமாக உள்ளது. 2010, 2011 மற்றும் 2012ம் ஆண்டுகளில் சிறந்த வர்த்தக செயற்பாட்டுக்காக தேசிய விருதை வென்றுள்ள சியெட் களனி ஹோல்டிங்ஸ் நிறுவனம் 2013ல் பாரிய அளவிலான உற்பத்திப் பிரிவில் தேசிய தர விருதையும் வென்றுள்ளது. சியெட் களனி ஹோல்டிங்ஸ் இந்தியாவின் RPG குழுமத்துக்கும் களனி டயர் நிறுவனத்துக்கும் இடையிலான ஒரு வெற்றிகரமான கூட்டு முயற்சியாகும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X