2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

தற்போது 20 ரூபாய்க்கு மஹாபொல லொட்டோ

A.P.Mathan   / 2015 ஜூலை 19 , பி.ப. 01:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒவ்வொரு இலங்கையரையும் உள்வாங்கும் வகையில், அதிர்ஷ்டலாப லொத்தர் சீட்டு விற்பனையில் முன்னோடியாக திகழும் மஹாபொல லொட்டோ அண்மையில் தனது M லொட்டோ டிக்கட்டுக்கான புதிய விலையை நிர்ணயித்திருந்தது. தற்போது ரூ. 20.00 க்கு மட்டுமே விற்பனை செய்யப்படும் M லொட்டோ டிக்கட், தற்போது இலங்கையில் கஷ்டப்பட்டு உழைக்கும் பலரால் இலகுவில் கொள்வனவு செய்து கொள்ளக்கூடியதாக இருக்கும். 

முக்கியமாக, லொத்தர் சீட்டுக்கள் விற்பனையில் புத்தாக்கங்களை படைத்து வரும் மஹாபொல லொட்டோ, புதிய வாடிக்கையாளர்கள் பலரை உள்வாங்கும் வகையில், 'உங்கள் இலக்கங்களை நீங்களே தெரிவு செய்யுங்கள்' எனும் லொட்டோவின் கொள்கைக்கமைய, பல வாய்ப்புகளை வழங்கியுள்ளது. நான்கு இலக்கங்களையும் பொருந்தச் செய்வதன் மூலமாக மாபெரும் இறுதிப் பரிசை வாடிக்கையாளர்கள் வெல்ல முடியும். 

மேலும், இந்த புதிய குறைந்த விலையிலமைந்த M லொட்டோ டிக்கட், மூன்று இலக்கங்கள் பொருந்தும் சந்தர்ப்பத்தில் 2000 ரூபாய் பெறுமதியான பரிசை பெற்றுக் கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது. இரு இலக்கங்களுக்கு 200 ரூபாயும், ஒற்றை இலக்கத்துக்கு 20 ரூபாயும் வெல்லக்கூடிய வாய்ப்பை வழங்குகிறது.

வாடிக்கையாளர்களின் பெருமளவான வரவேற்பு காரணமாக, மஹாபொல லொட்டோ, 20 ரூபாய்க்கு புதிய M லொட்டோ லொத்தர் சீட்டை அறிமுகம் செய்யும் தீர்மானத்தை மேற்கொண்டிருந்தது. மேலும், 'உங்கள் இலக்கங்களை நீங்களே தெரிவு செய்யுங்கள்' ஆர்வலர்களுக்கு மாபெரும் இறுதிப்பரிசை வெல்வதற்கு மேலும் வாய்ப்புகளை பெற்றுக் கொள்ளக்கூடிய வகையில் அமைந்துள்ளது என கம்பனி அறிவித்துள்ளது.

டிக்கட் விற்பனையாளர்கள் மற்றும் கொள்வனவாளர்கள் ஆகியோரின் கோரிக்கைக்கு செவிமடுக்கும் வகையில் மஹாபொல லொட்டோ, இலங்கையின் லொட்டோ கலாசாரத்தில் புதிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. இது வாடிக்கையாளர் மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டமைந்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X