2025 செப்டெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

தலைமைத்துவ சிறப்புத்தேர்ச்சியை எய்தியுள்ள 99X Technologyஇன் ஷெஹானி

A.P.Mathan   / 2015 ஜூலை 19 , பி.ப. 02:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

99X Technologyஇன் செயற்பாடுகள் மற்றும் விநியோக செயற்பாடுகளுக்கான முகாமையாளர் ஷெஹானி செனவிரட்ன, இலங்கையின் தகவல் தொழில்நுட்ப துறைக்கு வழங்கியிருந்த பங்களிப்புகளுக்காக, Women in Management அமைப்பின் மூலமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த, பெண் மேலாண்மை நிபுணர் மற்றும் பெண்கள் தொழில் எதிர்காலம் 2014/2015 இல் 'தகவல் தொழில்நுட்பத்துறையில் தலைமைத்துவச் சிறப்புகள்' வெள்ளி விருதை பெற்றிருந்தார். 

தொடர்ச்சியான ஐந்தாவது வருடமாக, ஏற்பாடு செய்யப்பட்டிருந்த Women in Management விருதுகள் வழங்கும் நிகழ்வின் மூலமாக, நிபுணத்துவம் வாய்ந்த துறையில் அல்லது தொழில் முயற்சியாண்மை தொடர்பில் பெண்கள் படைக்கும் சாதனைகளை கௌரவிக்கும் வகையில் அமைந்துள்ளது. தமது துறைகளில் சிறந்த தலைமைத்துவம் மற்றும் முகாமைத்துவ தரங்கள் ஆகியவற்றை வெளிப்படுத்துவோரை கௌரவிக்கும் வகையிலும் இந்த விருதுகள் வழங்கல் அமைந்துள்ளது. தேசத்துக்கும், நாட்டின் அபிவிருத்திக்கும் பங்களிப்பு வழங்குவது பற்றி இந்த விருதின் மூலமாக அதிகளவு கவனம் செலுத்தப்படுகிறது. இந்த விருதுகள் வழங்கும் வைபவம் கிங்ஸ்பரி ஹோட்டலில் ஜுன் 26 ஆம் திகதி இடம்பெற்றது.

99X Technology இன் சிரேஷ்ட முகாமைத்தவ அணியின் பிரதான அங்கத்தவரான ஷெஹானி, கடந்த தசாப்த காலப்பகுதியில் கம்பனியின் வளர்ச்சியில் முக்கிய பங்களிப்பை வழங்கியிருந்தார். செயற்பாடுகள் மற்றும் விநியோக முகாமையாளர் எனும் வகையில், இவர்கள் நிறுவனத்தின் செயற்பாட்டு கட்டமைப்பில் முக்கிய பங்கை வகித்திருந்தார். குறிப்பாக CMMi, ISO 9001:2000, Agile, Kanban போன்ற செயற்பாடுகளை அறிமுகம் செய்வதில் முக்கிய பங்கை வகித்திருந்தார்.

இவரினால் முன்னெடுக்கப்பட்டிருந்த செயற்பாடுகளில் இவரின் ஈடுபாடுகளின் மூலமாக துறையில் முன்னோடி எனும் நிலைக்கு உயர்வதற்கு 99X Technology க்கு வாய்ப்பு கிடைத்திருந்தது. இவரால் முன்னெடுக்கப்பட்ட சில செயற்பாடுகள், மாற்றமடைந்து வரும் சர்வதேச தகவல் தொழில்நுட்ப கட்டமைப்புகளுக்கமைய கம்பனியை நிலைத்திருக்க உதவியாக அமைந்திருந்தன. இந்த பிரிவில் இவர் கொண்டுள்ள சிறந்த அனுபவத்தையடுத்து, ஏனைய நிறுவனங்களின் செயற்பாடுகள் மேம்படுத்தல்களுக்கான ஆலோசனைகளை இவர் வழங்கி வருகிறார்.

இவரின் ஈடுபாடு என்பது கம்பனியில் மட்டும் மட்டுப்படுத்தப்படவில்லை. முழு தகவல் தொழில்நுட்பத்துறையில் பெண்கள் தலைமைத்துவத்தை மேல் நோக்கி கொண்டு செல்வது தொடர்பில் இவர் செல்வாக்கு செலுத்தி வருகிறார். SLASSCOM இன் மனித வளங்கள் மற்றும் தர செயலமர்வுகளில் ஷெஹானி ஆர்வத்துடன் பங்கேற்று வருகிறார். கொழும்பு பல்கலைக்கழக சமூகத்தின் தாபக அங்கத்தவரும், பணிப்பாளராகவும் செயற்படுகிறார். அத்துடன், Informatics Institute of Technology (IIT) இன் விஜயம் செய்யும் விரிவுரையாளராக ஐந்து ஆண்டுகளாக பணியாற்றுகிறார்.

இளம் வயதைச் சேர்ந்தவர்களுக்கு தொழில் எதிர்கால வழிகாட்டல்களை வழங்கும் செயற்பாடுகளையும் இவர் முன்னெடுக்கிறார். இவர் பயின்ற பிஷப்ஸ் கல்லூரியில் தகவல் தொழில்நுட்பம் தொடர்பான விழிப்புணர்வூட்டும் நடவடிக்கைகளை இவர் முன்னெடுத்திருந்தார். சமூகத்துக்கு மீள வழங்குவதன் முக்கியத்துவத்தை அறிந்து கொண்ட ஷெஹானி, பல்வேறு சமூக பொறுப்புணர்வு செயற்பாடுகளில் பங்கேற்கிறார். 

99X Technology என்பது மென்பொருள் வடிவமைப்பு நிறுவனமாகும். உலகளாவிய ரீதியில், குறிப்பாக ஐரோப்பாவில் காணப்படும் சுயாதீன மென்பொருள் சேவை வழங்குநர்களுக்கு (ISVs) அவசியமான மென்பொருள் தீர்வுகளை வழங்கும் நிறுவனமாக இயங்கி வருகிறது. இலங்கையில் தலைமையகத்தை கொண்டுள்ளதுடன், நோர்வே நாட்டின், ஒஸ்லோ நகரை மையமாக கொண்டு இயங்கும்  இந்நிறுவனம், இதுவரையில் 150க்கும் மேற்பட்ட மென்பொருள் தீர்வுகளை வெற்றிகரமாக வடிவமைத்து வழங்கியுள்ளது. இந்நிறுவனம் ஆசியாவில் பணியாற்றுவதற்கு சிறந்த நிறுவனங்களில் ஒன்றாக 2015 இல் தெரிவு செய்யப்பட்டிருந்ததுடன், இலங்கையில் பணிபுரிவதற்கு சிறந்த 20 நிறுவனங்களில் ஒன்றாகவும் Great Place To Work Institute இனால் தொடர்ச்சியான மூன்று ஆண்டுகளாக தெரிவு செய்யப்பட்டிருந்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X