Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2015 ஜூலை 21 , பி.ப. 04:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையில் சோப் மற்றும் மூலிகை பிரத்தியேக பராமரிப்பு தயாரிப்புகளை உற்பத்தி செய்வதில் முன்னோடியாக திகழும் சுவதேஷி இன்டஸ்ரியல் வேர்க்ஸ் பிஎல்சி, புதிய சோப் மற்றும் லோஷன் வகைகளை சிறுவர்களுக்காக தனது 'லிட்டில் பிரின்சஸ்' ரகத்தினூடாக அறிமுகம் செய்துள்ளது. 'லிட்டில் பிரின்சஸ்' சோப், லோஷன், கொலோன், ஷாம்பு மற்றும் ஷவர்-ஜெல் போன்றன தற்போது நாட்டின் தெரிவு செய்யப்பட்ட சுப்பர் மார்க்கெட்கள், பார்மசிகள் மற்றும் விற்பனை நிலையங்களிலிருந்து கொள்வனவு செய்ய முடியும். மூன்று புதிய தெரிவுகளில், ‘Jade Garden’, ‘Rose Petal’ மற்றும் ‘Sea Spray’ போன்றன உள்ளடங்கியுள்ளன.
கவர்ச்சிகரமான விதத்தில் பொதி செய்யப்பட்டுள்ள இந்த தயாரிப்புகள், உயர் தரங்களுக்கமையவும், சாதாரண விலைகளில் அமைந்துள்ளன. மேலும் 3 பிரத்தியேகமான வாசனை பொருட்கள், பிள்ளைகள் மத்தியில் புத்துணர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளன. மேலும் சருமத்துக்கு மென்மையானதாகவும் மிருதுவானதாகவும் அமைந்துள்ளன.
சுவதேஷி நிறுவனத்தின் பேச்சாளர் கருத்து தெரிவிக்கையில், 'எமது இலக்கு என்பது, பிள்ளைகளுக்கு விசேடமாக அமைந்த பிரத்தியேக பராமரிப்புகளை உயர் தரத்தில் உற்பத்தி செய்து வழங்குவதாகும். ஆவை குழந்தைகளின் சருமத்துக்கு மென்மையாக அமைந்திருப்பதுடன், உயர் தரம் வாய்ந்த மூலப்பொருட்களை கொண்டு உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த தெரிவுகளுக்கு நாம் விசேட தொனிப்பொருளையும் கொண்டுள்ளோம். 'நீங்கள் எப்போதும் பிரின்சஸ் என்பதை ஒருபோதும் மறக்க வேண்டாம்' என்பது அந்த தொனிப்பொருளாகும். எனவே, சிறுமிக்கு எப்போதும் நம்பிக்கையை வழங்கி, அவளின் தோற்றத்தை விசேடமாக்கி காண்பிக்கிறது' என்றார்.
'பிள்ளைகளுக்கென விசேடமாக அமைந்த தயாரிப்புகளை சிறுவர்கள் அனுபவிக்க முடியும். கடுமையான ஆய்வுகள் மற்றும் கவனமான பொருட்கள் அபிவிருத்தி செயற்பாடுகளை தொடர்ந்து, நாம் இந்த பெறுமதி வாய்ந்த தயாரிப்பு தெரிவுகளை உற்பத்தி செய்து, பெருமளவான இலங்கையர்களின் மனங்களை கவர்ந்துள்ளது. குழந்தைகளின் குளியல் அனுபவத்தை மிகவும் மகிழ்ச்சிகரமானதாகவும், விறுவிறுப்பானதாகவும் மாற்ற முடிந்ததையிட்டு மகிழ்ச்சியடைகிறோம்' என மேலும் குறிப்பிட்டார்.
1941ஆம் ஆண்டு கந்தானையில் தாபிக்கப்பட்டு ஆரம்பமான சுவதேஷி நிறுவனம், இந்நாட்டு வளங்களை பேணிப்பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அர்ப்பணித்தது. நூற்றுக்கு நூறு வீதம் உள்நாட்டு மூலப்பொருட்களை கொண்டு தனது தயாரிப்புகளை மேற்கொள்வதன் மூலம் தேசிய பொருளாதாரத்துக்கும் பங்களிப்பை வழங்கி வருகிறது. இந்நிறுவனத்தின் தயாரிப்புகளில் சேஃப்பிளஸ், கொஹோம்ப ஆயுர்வேத சோப், கொஹோம்ப பேபி, ராணி சந்தன சோப், பிளாக் ஈகள் பர்ஃவியும், லேடி மற்றும் சுவதேஷி ஷவர் ஜெல் ஆகியன சந்தையில் பிரபல்யமடைந்துள்ளன. உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட உயர் தரம் வாய்ந்த பிரத்தியேக தயாரிப்புகளை அறிமுகம் செய்வதன் மூலமாக நாட்டின் பொருளாதாரத்தில் பங்களிப்பு வழங்க முடியும் என்பதில் கம்பனி நம்பிக்கை கொண்டுள்ளது.
1 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
4 hours ago
5 hours ago