2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

'NATUZZI Italia' பிரத்தியேக காட்சியறை கொழும்பில்

A.P.Mathan   / 2015 ஓகஸ்ட் 02 , மு.ப. 06:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

'NATUZZI' இத்தாலியின் ஆடம்பரத் தளபாட உற்பத்தியாகும். இந்நிறுவனம், இலங்கையில் சொப்ட்லொஜிக் ஹோல்டிங்ஸ் (தனியார்) வரையறுக்கப்பட்ட நிறுவனத்தின் கிளை நிறுவனமான வரையறுக்கப்பட்ட சொப்ட்லொஜிக் (தனியார்) நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளது. இலங்கையில் இந்த உற்பத்திகளுக்கான அங்கீகரிக்கப்பட்ட பிரத்தியேக முகவர்களாக வரையறுக்கப்பட்ட சொப்ட்லொஜிக் (தனியார்) நிறுவனம் நியமிக்கப்பட்டுள்ளது. இதற்கான இலங்கையின் முதலாவது காட்சியறை இலக்கம் 100, காலி வீதி, கொழும்பு - 04 என்ற முகவரியில் அண்மையில் திறந்து வைக்கப்பட்டது. நான்கு மாடிகளைக் கொண்ட இந்தக் காட்சி அறையில் Natuzziயின் பிரத்தியேக ஆடம்பர வீட்டுத் தளபாடங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. உன்னதமான உற்பத்தி முத்திரையுடன் கூடிய தளபாடங்களின் அனுபவத்தை உணர வைக்கும் வகையில் இந்தக் காட்சியறை பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

1959ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது முதல், Natuzziஉலகளாவிய ரீதியில் ஆடம்பர வாடிக்கையாளர்கள் மத்தியில் தனக்கென தனியானதோர் இடத்தைப் பிடித்து விட்டது. Ipsos Lagardere 2013 இல் நடத்திய ஆய்வின் பிரகாரம், புத்தாக்கம் மற்றும் நவநாகரிகம் என்பனவற்றின் அடையாளச் சின்னமாக இது திகழ்கின்றது. சிறந்த நாகரிகம், வசதி மற்றும் இணக்கம் ஆகியவற்றுக்கான தீர்வில் அதிக கவனம் செலுத்தப்படுகின்றது. இந்த நிறுவனம் மற்றும் அதன் உற்பத்திகளின் வரலாறு நெடுகிலும் மிகச் சரியானதும், அங்கீகாரம் கொண்டதுமான, காலத்துக்கேற்ற நாகரிக உற்பத்திகளைக் காண முடிகின்றது. இன்றைய சூழலில் பல்வேறு வகை வீட்டுத் தேவைகளை ஈடு செய்யக் கூடிய விதவிதமான உற்பத்திகள் இங்குள்ளன. தளப்பரப்பு மற்றும் சுற்றாடல் என்பனவற்றை மையப்படுத்தியே அவற்றுக்கு இசைவாக வாடிக்கையாளரின் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் இந்த நிறுவனத்தின் ஒவ்வொரு  உற்பத்திகளும் அதிக அக்கறை கொண்டுள்ளன.

Re-Vive சாய்வு நாற்காலிகள் அந்த வகை சார்ந்த உலகின் ஒரே உற்பத்தியாகக் காணப்படுகின்றது. உடலின் வசதி, அசைவுகள் என்பனவற்றுக்கு ஏற்ப ஈடுகொடுக்கும் வகையில் இதற்கு முன் இந்த வகை நாற்காலிகளில் முன்னொருபோதும் இல்லாத அளவு வசதிகளுடன் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

வர்ணங்கள், துணிகள், சோபாக்கள், சாய்வுக் கதிரைகள், படுக்கைகள், உணவு அறை மேசைகள் மற்றும் தளபாட உதிரிகள் என எல்லாமே முழுமையான வடிவமைப்புடன் உணர்வுபூர்வமான தீர்வுகளை வழங்கும் வகையில் அமைந்துள்ளன. இவை நாம் வசதியாக வாழ வழிவகுப்பதோடு, மிகச்சிறந்த இரசனையுடன் கூடிய தரத்தையும் எமக்கு அளிக்கின்றது. வடிவமைப்பும், செயற்பாடும் ஆகக் கூடிய பலனை அளிக்கத்தக்கதாக இணைந்துள்ளன. தளபாட வடிவங்கள் இலகுவானவை, நேர்த்தியானவை மற்றும் அழகானவை. பார்க்கின்ற போதே மகிழ்ச்சியை ஏற்படுத்துகின்ற தரம் மற்றும் சர்வதேச ரீதியான சமநிலை வர்ணம் என்பன இவற்றின் சிறப்புக்களில் ஒன்றாகும். இந்த ஒட்டுமொத்த உற்பத்திகளிலும் காணப்படும் இந்த விஷேட வர்ணம் மன ஆறுதலை ஏற்படுத்தக் கூடிய வகையில் அமைந்துள்ளது. Natuzzi இன் தரத்திலும், அதன் கலை அமைப்பிலும் சிறப்பிடம் பிடிக்கும் இன்னொரு அம்சம் தேரினால் ஆன அதன் போர்வைகளாகும். கடந்த 50 வருடங்களாக, கம்பனியின் உற்பத்திகளில் இந்தத் தரம் மிகக் கவனமாகப் பேணப்பட்டு வருகின்றது.

கொழும்பில் உள்ள Natuzzi காட்சியறையில் வீட்டு வரவேற்புப் பகுதி மற்றும் இரவு பகல் வலயங்களுக்கான தளபாடங்கள் என பல தெரிவுகள் காணப்படுகின்றன. புதிய Re-Vive சாய்வு நாற்காலிகள் உட்பட இன்னும் பல வகை தளபாடங்களும் உள்ளன. Tempo மற்றும் Dorian சோபாக்கள் Piuma படுக்கைகள் என்பனவும் இவற்றில் அடங்கும்.

இத்தாலிய வடிவமைப்பாளர்களான மன்ஸோனி மற்றும் டபினாஸி ஆகியோரின் கைவண்ணத்தில் உருவான டெம்போ சோபா மிக நவீனமான, காலத்தை வென்ற ஒரு வடிவமைப்பாகும். இது எந்தவொரு சூழலுக்கும் உகந்தது. டெம்போ மேசைகளுடன் பொருந்தக் கூடியவாறு பிரத்தியேகமான வடிவமைப்பினைக் கொண்டது. Memory foam வகை மேற்பரப்பகளை கொண்ட டோரியன் சோபாக்களும் இதே கலைஞர்களின் கைவண்ணத்தில் உருவாக்கப்பட்டுள்ளன. கீழைத்தேய தாக்கத்தையும் அதி உச்ச வசதியையும் இது தன்னகத்தே கொண்டுள்ளது. இதன் இருக்கை வசதிகள் மிகவும் தாராளமானவை. கிளவ்டியோ பெலினி என்ற வடிவமைப்பாளரால் உருவாக்கப்பட்டுள்ள பியுமியா படுக்கை, முதல் பார்வையிலேயே உணரக் கூடிய மிக இதமான மென்மையையும் கொண்டுள்ளது. நேர்த்தியான, ஆடம்பரமான இதன் வடிவமைப்பு முழு அளவிலான வசதிகளை வழங்குகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X