2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

Ceyoka என்ஜினியரிங் Exterior HPL panelsகள் GREEN MARK GOLD விருது வழங்கி கௌரவிப்பு

A.P.Mathan   / 2015 ஓகஸ்ட் 04 , பி.ப. 02:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் புத்தாக்கமான நிலையான தீர்வுகளை அறிமுகம் செய்து வருகின்றமைக்காக Ceyoka பொறியியல் பிரிவு, தனது கட்டடக்கலை ஈடுபாடு, சிறந்த சூழல் நிலையாண்மை, பாவனையாளர் பாதுகாப்பு முறையிலமைந்த பிரத்தியேகமான வெளிப்புற உயர் அழுத்த laminate panelகளுக்காக CIOB Green Mark Gold விருதையும் சான்றிதழையும் வென்றிருந்தது. 

சிலோன் இன்ஸ்ரிடியுட் ஒஃவ் பில்டர்ஸ் (CIOB), தனது முதலாவது green mark விருதுகள் வழங்கும் நிகழ்வை அண்மையில் ஏற்பாடு செய்திருந்தது. இதன் மூலம் நிர்மாணத்துறையைச் சேர்ந்த சூழலுக்கு பாதுகாப்பு வாய்ந்த தயாரிப்புகளை கௌரவிப்பதை நோக்காக கொண்டிருந்தது. The Green Mark என்பது சிங்கப்பூர் நாட்டின் சர்வதேச தரம் பெற்ற இலச்சினையாகும். இதற்கு கட்டட நிர்மாண அதிகாரசபை (சிங்கப்பூர்), கிறீன் பில்டிங் கவுன்சில் (சிங்கப்பூர்), சார்ட்டட் இன்ஸ்ரிடியுட் ஒஃவ் பில்டர்ஸ் (பிரித்தானியா) மற்றும் உள்நாட்டில் சிலோன் இன்ஸ்ரிடியுட் ஒஃவ் பில்டர்ஸ், சூழல் அமைச்சு, நிர்மாண மற்றும் மத்திய சூழல் அதிகார அமைச்சு ஆகியவற்றின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

'Ceyoka வின் FunderMax உயர் அழுத்த laminate panelகள் நாம் முன்னெடுக்கும் வியாபார செயற்பாடுகளில் தொடர்ச்சியாக சிறப்புகளை முன்னெடுப்பதற்கான முன்மாதிரியாக திகழ்கின்றன' என Ceyoka என்ஜினியரிங், வெளியக திணைக்களத்தின் பொது முகாமையாளர் திருமதி. வசந்தா குணசேகர தெரிவித்தார்.

பல்துறை, நிலையாண்மை, அலங்காரம் மற்றும் நீண்டகால உள்ளடங்கலாக வேய்தல் (cladding) துறையில் காணப்படும் சவால்கள் நிறைந்த தேவைகளை நிவர்த்தி செய்யும் வகையில் Ceyokaவின் உயர் அழுத்தம் கொண்ட laminate panelகள், உலகப் புகழ்பெற்ற laminate உற்பத்தியாளரான FunderMax ஒஸ்ரியா நிறுவனத்தின் மூலமாக பல ஆண்டுகாலமாக முன்னெடுக்கப்பட்ட உற்பத்தி அபிவிருத்தி அனுபவத்தைக் கொண்டு உற்பத்தி செய்யப்படுகின்றன.

இந்த ஓரியல்பான உயர் நிலைத்திருக்கக்கூடிய மற்றும் திரும்பக்கூடிய கைக்கடக்கமான வெளிப்புற panelகள் வீடுகள் மற்றும் வியாபார தலங்களை அலங்கரிக்க பயன்படும் வகையில் அமைந்துள்ளன. வேய்தல் (cladding) துறையில் அதிகரித்துச் செல்லும் பிரத்தியேக அலங்காரங்களுக்கான கேள்விகள் நிவர்த்தி செய்யும் வகையில் அமைந்துள்ளது. விசேட பிசின்கள், செலுலோஸ் ஃபைபர் மற்றும் கடதாசி அடிப்படையிலான panelகள் போன்றன கடுமையான காலநிலை சூழல்களுக்கு ஈடுகொடுக்கக்கூடிய சிறந்த insulating பொருளாக அமைந்துள்ளது.

இது சூழலுக்கு நட்புறவானதாக அமைந்துள்ளதுடன், கட்டுக்கோப்பான மற்றும் கவனமான உற்பத்தி தொழில்நுட்பங்கள் பின்பற்றப்படுகின்றமையால், இதில் அஸ்பெஸ்டஸ், மரச் சேர்மானங்கள் மற்றும் PVC இல் காணப்படும் உள்ளடக்கங்கள் போன்றன தவிர்க்கப்பட்டுள்ளன. FunderMax panelகள் நீரை தாங்கிக் கொள்ளும் தன்மை வாய்ந்தனவாகவும், saline தாங்கிக் கொள்ளும் வகையிலும், கீறல் மற்றும் UV கதிர் தாங்கும் வகையிலும் அமைந்துள்ளது, optimal light fastnessஐ வழங்குகின்றது.
 
திருமதி குணசேகர தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், 'கடுமையான காலநிலை மாற்றங்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில் உயர் அழுத்த laminate panelகள் அமைந்துள்ளன. Panel மற்றும் சுவர்களுக்கிடையில் காணப்படும் சிறிய வளி இடைவெளி காரணமாக காலநிலை மாற்றங்களுக்கு எதிரான insulationஐ உருவாக்கும் வகையில் அமைந்துள்ளது. இதன் மூலம் 30 சதவீதம் வரையிலான வலுச் சேமிப்பு ஏற்படுத்தப்படுகிறது. சுவர்களை மழைநீர் பாதிப்பதையும் குறைக்கும் வகையில் அமைந்துள்ளது. முக்கியமாக ஏனைய வேய்தல் (cladding) முறைகளுடன் ஒப்பிடுகையில் உயர் அழுத்தம் கொண்ட laminates தீப்பற்றாதவையாக அமைந்துள்ளன. வழமையான பராமரிப்பு அவசியமில்லாததாகவும், இலகுவில் கழுவி பராமரித்துக் கொள்ளக்கூடிய வகையிலும் இவை அமைந்துள்ளன' என்றார்.

வெளிப்புற வேய்தல் (cladding) முறைகளுக்கு காணப்படும் வரையறைகளற்ற வாய்ப்புகள் பற்றி கருதும் போது, இந்த panelகளை உள்ளக மற்றும் வெளிப்புற சுவர்கள், கொலம்கள், பகுதிகள், bulk head, வாசல் படலைகள், பல்கனிகள், வேலிகள், வெளிப்புற தளபாடங்களுக்கும் வேய்தல் (cladding) முறையை பயன்படுத்த முடியும். 
 
FunderMax panelகள் களியாட்ட பூங்காக்கள், பாடசாலைக் கட்டடங்கள் மற்றும் பொது இடங்களுக்கு சிறந்த வேய்தல் (cladding) முறையாக அமைந்துள்ளது. அலங்காரம் மற்றும் அழகியல் கோட்பாடு ஆகியவற்றுக்குரிய செயற்படுதன்மை பற்றி கருதும் போது, இந்த panelகள் பல்வேறு வர்ணங்களில் மற்றும் வெவ்வேறு அலங்காரங்களில் அமைந்துள்ளன.  

வெவ்வேறு அலங்காரங்களிலமைந்த Ceyoka’வின் FunderMax panelகள் மூலமாக புத்தமைவான அலங்கார வடிவமைப்பு உருவாக்கப்படுவதுடன், நீண்ட காலம் நிலைத்திருக்கும் உயர்தரம் வாய்ந்த வகையில் அவை அமைந்திருக்கும். இதன் பரந்த தெரிவுகள் மூலமாக, பாரம்பரிய வேய்தல் (cladding) முறையில் காணப்படும் குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்பட்டுள்ளன.

Ceyoka வின் சான்றளிக்கப்பட்ட பொருத்தும் அணியினர் வாடிக்கையாளர்களுடனும், விநியோகத்தர்களுடனும் சிறந்த தொழில் உறவுகளை கட்டியெழுப்புவதில் புகழ் பெற்றுள்ளனர்' என திருமதி. குணசேகர மேலும் தெரிவித்தார்.

வீதி அபிவிருத்தி அதிகார சபையின் புதிய கட்டடத்திலும், புதிதாக புனருத்தாரணம் செய்யப்பட்ட 'Union Chemist' மூலமாக Ceyokaவின் உயர் அழுத்த laminate panelகள் தாபிப்புகளின் அனுகூலங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X