2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

Carmudi அறிமுகம் செய்யும் 'Toyota Corolla Index'

A.P.Mathan   / 2015 ஓகஸ்ட் 12 , பி.ப. 03:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகின் மிகவும் பிரபல்யமான கார் என அழைக்கப்படும் Toyota Corolla, சராசரியாக ஒவ்வொரு 40 செக்கன்களுக்கு ஒரு கார் எனும் வீதம் உலகளாவிய ரீதியில் விற்பனையாகிறது. இந்த நிலை கடந்த 40 வருடங்களாக தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் முதல் தர வாகன சந்தையான Carmudi, ஆபிரிக்கா, ஆசியா, மத்திய கிழக்கு மற்றும் லத்தீன் அமெரிக்கா போன்ற Carmudi பிரசன்னம் காணப்படும் இருபது நாடுகளில் நிலவும் கார்களின் விலைகளை கவனத்தில் கொண்டு, அவற்றை Toyota Corolla Index எனும் தரவில் உள்ளடக்கி வழங்கியுள்ளது. 

எமது தரவு மூலம் பற்றிய குறிப்பு: கடந்த ஆறு மாதங்களாக நாம் எமது தரவுகளை ஆராய்ந்திருந்ததுடன், இதில் 17000 Toyota Corolla listings உள்ளடங்கியிருந்தன. விசேடமாக 2010 முதல் உலகளாவிய ரீதியில் பாவித்த Corolla கார்கள் பட்டியலிடப்பட்டிருந்தன. ஆனாலும், Carmudi இயங்கும் சில நாடுகளில் பெருமளவு பழைய கார்கள் காணப்படுகின்றன. உதாரணமாக, டான்சேனியாவை எடுத்துக் கொண்டால், அந்நாட்டில் காணப்படும் புதிய மாதிரி 2008 ஆம் ஆண்டுக்குரியதாகும். அதாவது அதன் உற்பத்தி ஆண்டு 2005 ஆக அமைந்துள்ளது. எனவே பயன்படுத்திய கார்களுக்கு பிரசித்தி பெற்ற Carmudi க்கு பொருத்தமானதாக அமைந்துள்ளது. 

விலைகளை ஒப்பிட்டு பார்க்கும் போது, தெரிவு செய்யப்பட்ட Corolla கார்களின் விலைகளை ஒவ்வொரு நாடுகளிலும் Carmudi ஒப்பிட்டிருந்தது. 2005 மற்றும் 2011 ஆம் ஆண்டுகளுக்கிடையில் உற்பத்தி செய்யப்பட்ட கார்கள் இதற்காக உள்வாங்கப்பட்டிருந்தன. கிலோமீற்றர்களை எடுத்துக்கொண்டால், 45,000 முதல் 110,000 கிலோமீற்றர்கள் வரை கவனம் செலுத்தப்பட்டிருந்தன. சகல நாடுகளிலும் அணுகக்கூடிய Corolla களின் தரவுகளை அடிப்படையாக கொண்டு இந்த இலக்கு கவனத்தில் கொள்ளப்பட்டிருந்தது. குதூகலிப்பை வழங்கும் விடயம்: Carmudi இல் பட்டியலிடப்பட்டுள்ள Corolla க்களின் சராசரி கிலோமீற்றர் பயணித்த அளவு என்பது 98500 ஆக 2005 மாதிரியில் அமைந்துள்ளது. 2011 ஆம் ஆண்டுக்குரியதில் இந்த பெறுமதி 67000 கிலோமீற்றர்களாக அமைந்துள்ளது. இந்த மதிப்பீட்டுக்கான சராசரி பெறுமதி 75000 கிலோமீற்றர்களாகும். 

Economist இன் light-hearted Big Mac சுட்டிக்கமைவாக Carmudi Corolla Index என்பது வளர்ந்து வரும் சந்தைகளில் விலை வித்தியாசங்களை ஒப்பிட்டு பார்ப்பதற்கு உதவும் வகையில் அமைந்துள்ளது. வளர்ந்து வரும் சந்தைகளில் பரந்தளவு விலை வித்தியாசங்களை இலகுவாக கண்டறியும் வகையில் அமைந்துள்ளது. இறக்குமதி வரிகள் முதல், உள்நாட்டு உற்பத்தி வரை மற்றும் வளர்ந்து வரும் சந்தைகளில் நிலவும் கேள்விகளை நிவர்த்தி செய்ய முடியாமை, உலகின் மிகவும் பிரபல்யமான காரின் விலை என்பது நியமமாக அமைந்துள்ளது. 

ஓவ்வொரு நாட்டினதும் பெறுமதி என்பதில் கார்களின் விலைகள் தங்கியிருப்பதில்லை என்பது ஆச்சரியமூட்டும் கணிப்பாக அமைந்துள்ளது. குறிப்பாக பாவித்த Toyota Corolla என்பது வியட்நாமின் மொத்த தேசிய உற்பத்தி பெறுமதியான 1910 அமெரிக்க டொலர்கள் என்பதில் மூன்று மடங்காக அமைந்துள்ளது. இலங்கையில் சராசரி பாவித்த Toyota Corolla கார் ஒன்றின் விலை 3,271,399 ரூபாவாக அமைந்துள்ளது. 

நீங்கள் இந்த செய்தியை வாசித்துக் கொண்டிருக்கும் போது கூட, ஆகக்குறைந்தது மூன்று Corolla கார்கள் உலகின் எங்காவது விற்பனை செய்யப்பட்டிருக்கும். உலகின் அதிகளவு விற்பனையாகும் கார் வகையான Corolla என்பதை பற்றி நீங்கள் சிந்திப்பீர்களாயின், www.carmudi.lk எனும் இணையத்தளம் அல்லது Carmudi ஆப்ளிகேஷனை தரவிறக்கம் செய்து பார்வையிடலாம்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X