Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2015 ஓகஸ்ட் 16 , மு.ப. 07:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
பத்தரமுல்ல வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலில் இடம்பெற்ற SLIM-NASCO 2015 விருதுகள் வழங்கலில், பாதுகாப்பான இலத்திரனியல் மற்றும் தொடர்பாடல் கேபிள்களை விநியோகிக்கும் களனி கேபிள்ஸ் மூன்று வெண்கல விருதுகளை வென்றிருந்தது.
துறைசார் மற்றும் விவசாய பொருட்கள் மற்றுமு; சேவைகள் பிரிவில் ஆண்டின் சிறந்த விற்பனை பிரதிகளுக்கான விருதை களனி கேபிள்ஸ் பிஎல்சி நிறுவனத்தின் திலீப மதுசங்க மற்றும் வேல்ரட்னம் அரவிந்தநாதன் ஆகியோர் சுவீகரித்திருந்தனர். முன்னிலையாளருக்கான வெள்ளி விருதை சாமிகா சிரிசேன வென்றிருந்தார்.
முற்றிலும் இலங்கையைச் சேர்ந்த நிறுவனம் என்பதால், SLIM-NASCO விருதுகள் வழங்கலில் விருதுகளை வென்றமை என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது. இலங்கையில் சந்தைப்படுத்தல் செயற்பாடுகளுக்கான தேசிய அமைப்பாக SLIM திகழ்கிறது. சந்தைப்படுத்தல் என்பது வளர்ந்து வரும் துறையாக அமைந்துள்ளதுடன், இந்தத் துறையில் சிறப்பாக தமது திறமைகளை வெளிப்படுத்துவோரை கௌரவிக்கும் வகையில் SLIM-NASCO விருதுகள் வழங்கல் ஏற்பாடு செய்யப்படுகிறது.
இந்த விருதுகளை பெற்றுக் கொண்டமை தொடர்பில் களனி கேபிள்ஸ் பிஎல்சியின் சந்தைப்படுத்தல் பிரிவில் பதில் பொது முகாமையாளர் அனில் முனசிங்க கருத்துத் தெரிவிக்கையில், 'ஊழியர்களின் அர்ப்பணிப்பான செயற்பாட்டின் காரணமாக கம்பனிக்கு கௌரவம் கிடைத்துள்ளது. பாதுகாப்பான இலத்திரனியல் மற்றும் தொடர்பாடல் கேபிள்கள் உற்பத்தில் களனி கேபிள்ஸ் சந்தை முன்னோடியாக திகழ்கிறது. எப்போதும் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவைகளை வழங்குவது பற்றி கவனம் செலுத்தி வருகிறது. கம்பனியின் சிறந்த பின்புலமாக எமது ஊழியர் குழாம் அமைந்துள்ளது. இந்த SLIM-NASCO விருதுகள் அவர்களின் அரப்பணிப்பான செயற்பாடுகளுக்கு சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. கம்பனியின் சார்பாக இந்த ஊழியர்களுக்கு நான் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்' என்றார்.
2008இல் களனி கேபிள்ஸ் பிஎல்சி சுப்பர் பிரான்ட் நிலையை எய்தியிருந்தது. குறிப்பாக நிபுணத்துவம் வாய்ந்த சிறப்பாண்மைச் செயற்பாடுகளுக்காக கம்பனி இந்த நிலையை எய்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.களனி கேபிள்ஸ் என்பது 100 வீதம் இலங்கையை சேர்ந்த கம்பனியாகும். சுமார் 44 வருட காலமாக இலத்திரனியல் மற்றும் தொடர்பாடல் கேபிள்களை உற்பத்தி செய்வதில் இந்நிறுவனம் ஈடுபட்டுள்ளது.
SLIM வர்த்தக நாம சிறப்பு விருதுகள் 2012 இல், களனி கேபிள்ஸ் பிஎல்சி நிறுவனத்துக்கு சிறந்த வர்த்தக நாமத்துக்கான வெண்கல விருது வழங்கப்பட்டிருந்தது. 2013இல் இடம்பெற்ற SLIM வர்த்தக நாமச் சிறப்புகள் விருதுகள் வழங்கலிலும் தங்க விருதை இந்நிறுவனம் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
களனி கேபிள்ஸ் நிறுவனத்துக்கு தரச்சிறப்புக்கான ISO 9000:2008 சான்று, சிறந்த சூழல் முகாமைத்துவத்துக்கான ISO 14001:2004 தரச்சான்றும் வழங்கப்பட்டுள்ளன. தய்கி அகிமொடோ 5S விருதுகளின் தங்க விருதும் களனி கேபிள்ஸ் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.
SLITAD மக்கள் அபிவிருத்தி விருதுகள் 2013 இல் கம்பனி தங்க விருதை வென்றிருந்தது. பயிற்சிகள் மற்றும் அபிவிருத்தி தொடர்பான செயற்பாடுகளை கௌரவிக்கும் வகையில் இந்த விருதுகள் வழங்கும் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
1 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
4 hours ago
5 hours ago