2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

சமபோஷவின் 'கொவி சுவய'

A.P.Mathan   / 2015 ஓகஸ்ட் 23 , பி.ப. 03:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

வரையறுக்கப்பட்ட சிலோன் பிஸ்கட்ஸ் நிறுவனத்தின் (CBL) கிளை நிறுவனமான, வரையறுக்கப்பட்ட பிளன்ட்டி புஃட்ஸ் (தனியார்) நிறுவனம் (PFL), 'சமபோஷ' போஷாக்கு தானிய உணவை உற்பத்தி செய்யும் ஒரு நிறுவனமாகும். இலங்கையில் உள்ள இலட்சக் கணக்கான சிறுவர்களும், வளர்ந்தவர்களும் இதனை விரும்பி உண்ணுகின்றனர். இந்த நிறை போஷாக்கு உணவானது, சோளம், அரிசி, சோயா மற்றும் பாசிப்பயறு என்பனவற்றுடன் இயற்கை உள்ளீடுகளையும் இணைத்து, நூறு சதவீதம் உள்நாட்டில் தயாரிக்கப்படுகின்ற ஒரு உற்பத்தியாகும். இது, சிறுவர்களின் ஆரோக்கிய வளர்ச்சிக்கு பூரண பங்களிப்பு வழங்குகின்றது. 'சமபோஷ' உற்பத்திக்குத் தேவையான மேற்படி மூலப் பொருள்களை உற்பத்தி செய்யும் சுமார் 8,000 விவசாயிகளுடன் வரையறுக்கப்பட்ட பிளன்ட்டி புஃட்ஸ் (தனியார்) நிறுவனம் தொடர்புபட்டுள்ளது.

இந்தக் கம்பனி ஆரம்பிக்கப்பட்டது முதல், தன்னுடன் தொடர்புபட்டுள்ள விவசாயிகளின் நிரந்தர நலனுக்காக, நீண்ட நேசக்கரங்களை நீட்டி வருகின்றது. CBL இன் 'கொவி பவுல' (விவசாயிகள் கிளப்) எண்ணக்கருவின் கீழ், குறிப்பிட்ட பிரதேசங்களில் விவசாயிகளின் நன்மைகளைக் கருத்திற் கொண்டு, அவர்களுக்கு உதவி, நேசக் கரம் நீட்டும் வகையில் 'கொவி தெனும', 'கொவி சரண', 'கொவி சதுட' ஆகிய தனது கூட்டாண்மை சமூகப் பொறுப்புத் திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றது. இந்த உன்னதமான நான்கு CSR திட்டங்கள் மூலம், விவசாயிகள் கல்வி, கஷ்டநிலைகளுக்கு முகம் கொடுத்தல், உட்கட்டமைப்பு அபிவிருத்தி, குடும்ப நலன் போன்ற விடயங்களில் கவனம் செலுத்தப்படுகின்றது.

நிறுவனம் அண்மையில் தனது புதிய CSR திட்டமாக 'கொவி சுவய' (விவசாய சமூகங்களின் ஆரோக்கியத்தை உறுதி செய்தல்) திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. முதற்கட்டமாக கலென்பிந்துணுவௌ கெட்டலவ பிரதேசத்தில் தண்ணீர் சுத்திகரிப்புத் திட்டம் தொடக்கி வைக்கப்பட்டது. இதற்கான உபகரணத்தை 'சமபோஷ' வழங்கியுள்ளது. பாதிக்கப்பட்ட விவசாயக் குடும்பங்களுக்கு இதன் மூலம் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் விநியோகிக்கப்படுகின்றது.

இந்தப் பிரதேசத்தில் பல விவசாயிகள் சிறுநீரக நோய்க்கு தொடர்ந்து ஆளாகி வருவதை அடுத்து, இந்தப் பகுதியில் குடி தண்ணீர் சுத்திகரிப்புத் திட்டம் ஒன்றின் தேவையை நிறுவனம் நன்கு உணர்ந்து கொண்டது. விவசாயிகள் தங்களை அறியாமலேயே மிக மோசமான நிலைக்குத் தள்ளப்படும்; ஒரு பயங்கர நிலைமையை இந்தப் பிரச்சினை ஏற்படுத்தி இருந்தது. விவசாயிகள் இவ்வாறு நோய்வாய்ப்படுகின்ற போது, அது உற்பத்தியில் வீழ்ச்சியை ஏற்படுத்தும். இது சமபோஷ உற்பத்திக்கான தரமான மூலப் பொருளைப் பெற்றுக் கொள்வதில் சவால்களை உருவாக்கும். கடைசியில் இது உற்பத்தியின் விலைகளை அதிகரிக்கும்.

PFL நிறுவனத்தின் பணிப்பாளரும், பிரதம நிறைவேற்று அதிகாரியுமான ஷம்மி கருணாரத்ன, விவசாயிகள் அபிவிருத்தியில் தாங்கள் செலுத்தி வரும் கவனம் பற்றி விளக்குகையில் 'எமது வாடிக்கையாளர்களைக் காப்பாற்றுவது போலவே, எமது விவசாய சமூகத்தைக் பாதுகாப்பதும் அவசியமாகும் என்று நாம் நம்புகின்றோம். நாங்கள் விவசாயிகளிடம் இருந்து எந்த விதமான பிரதி பலன்களையும் எதிர்ப்பார்க்காமலேயே இந்த சுகாதார சேவைகளையும் ஏனைய சகல நடவடிக்கைகளையும் வழங்குகின்றோம். PFL குடும்பத்தின் ஓர் அங்கமாக அவர்களைப் பராமரிப்பதே எமது பிரதான இலக்காகும். அதனாலேயே, அவர்களுக்கு தேவைப்படும் போது நாம் அங்கு நிற்கின்றோம். இது 'கொவி சுவய' திட்டத்தின் ஆரம்பம் மட்டுமே. தொடரான மருத்துவ முகாம்கள், நோய்களைக் கண்டறிவதற்கான பரிசோதனைகள், மருத்துவ ஆலோசனைச் சேவைகள் என்பனவற்றையும் விவசாயிகளுக்காக காலப் போக்கில் நாம் நடத்த திட்டமிட்டுள்ளோம்' என்றார்.

கலென்பிந்துணுவௌவைச் சேர்ந்த ஜயசுந்தர என்ற PFL விவசாயி ஒருவர் கருத்து வெளியிடுகையில், 'கடந்த பல மாதங்களில் எமது விவசாயிகள் பலர் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். எமக்கு மிகவும் தேவைப்படும் ஒரு குடி நீர் விநியோக முறையை இன்று சமபோஷ நிறுவனம் எமக்கு வழங்கியுள்ளது. அரச அதிகாரிகளும், ஏனைய நிறுவனங்களின் பிரதிநிதிகளும் வெறுமனே எங்களை வந்து பார்த்துவிட்டுச் செல்கின்றார்களே தவிர, அவர்களால் வேறு எவ்வித பலன்கள் எதுவும் இல்லை' என்றார்.

PFL நிறுவனமானது, விவசாயிகளின் உற்பத்திகளுக்கு, சந்தைகளில் காணப்படும் உத்தரவாத விலையை விட அதிக விலையை வழங்குகின்றது. விவசாயிகளுடன் நீண்ட கால உறவுகளைக் கட்டி எழுப்புவதும், அதன் மூலம் நீடித்து நிலைக்கும் வர்த்தகச் செயற்பாடுகளை உருவாக்குவதுமே கம்பனியின் இலக்காகும்.

PFL இன் உன்னதமான கூட்டாண்மை சமூகப் பொறுப்புத் திட்டங்களின் ஒரு புதிய இணைப்பாக 'கொவி சுவய' அமைந்துள்ளது. கொவி பவுல விவசாயிகளை ஒன்றிணைப்பதற்காக உருவாக்கப்பட்ட ஒரு அற்புதமான வேலைத் திட்டமாகும். தற்போது இதில் 8000த்துக்கும் அதிகமான பதிவு செய்யப்பட்ட விவசாயக் குடும்பங்கள் இணைந்துள்ளன. விவசாயச் செயற்பாடுகள் பற்றிய புதிய தகவல்களையும், அறிவுகளையும் பரிமாறிக் கொள்ள (கொவி தெனும அறிவுப் பகிர்வு அமர்வுகள்) செயலமர்வுகள் தொடராக நடத்தப்பட்டு வருகின்றன. சமய வழிபாட்டு இடங்கள் நிர்மாணிக்கப்பட்டும், திருத்தி அமைக்கப்பட்டும் வருகின்றன (கொவி அரண) ஆன்மிக அபிவிருத்தித் திட்டங்கள், இடர் உதவிச் சேவைகள் (கொவி சரண), சமூக பொழுது போக்குத் திட்டங்கள் (கொவி சதுட) போன்ற திட்டங்கள் இதனூடாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

'சமபோஷ' உற்பத்தியின் தரத்தை தொடர்ந்தும் பேண PFL நிறுவனம் கண்டிப்பான நடவடிக்கைகளை எப்போதுமே பேணி வருகின்றது. விவசாய சமூகத்தைப் பாதுகாக்கும் மற்றும் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் இந்த அனைத்துவிதமான திட்டங்களோடும் சேர்த்து வாடிக்கையாளர் தான் இறுதியாக இதன் நன்மைகளை அடைந்து கொள்கின்றனர் என்பதே PFL இன் நம்பிக்கையாகும். மனித உறவுகளை தூண்களாகக் கொண்டு, கட்டி எழுப்பப்பட்டுள்ள ஒரு நிறுவனம் என்ற வகையில், உள்ளுர் விநியோக வலையமைப்பின் அனைத்து அம்சங்களையும் அது கவனமாகத் தொட்டுச் செல்கின்றது. சகல இலங்கையர்களுக்கும் அதி உயர் தரம் மிக்க போஷாக்கு உணவை வழங்க வேண்டும் என்பதே இதன் இறுதி குறிக்கோளாகும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X