Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
Editorial / 2018 ஜூன் 14 , பி.ப. 08:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
Forbes சஞ்சிகையால் தொகுக்கப்பட்டுள்ள 2018 ஆம் ஆண்டுக்கான உலகின் பெறுமதிவாய்ந்த வர்த்தகநாமங்கள் என்ற வருடாந்தத் தரப்படுத்தலில் இடம்பிடித்துள்ள ஒரேயொரு சீன நிறுவனமாக HUAWEI திகழ்கிறது. தொடர்ந்து இரண்டாவது ஆண்டாகவும் இப்பட்டியலில் இடம்பிடித்துள்ள HUAWEI, 8.4 பில்லியன் அமெரிக்க டொலர் வர்த்தகநாமப் பெறுமானத்துடன், 79 ஆவது ஸ்தானத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது.
2017 ஆம் ஆண்டில் முதன்முறையாக இப்பட்டியலில் இடம்பெற்ற HUAWEI, 7.3 பில்லியன் அமெரிக்க டொலர் வர்த்தகநாமப் பெறுமானத்துடன் 88 ஆவது ஸ்தானத்தில் தரப்படுத்தப்பட்டிருந்தது. தொடர்ந்து ஒரு வருடத்தில் வேகமான வளர்ச்சியுடன், கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் HUAWEI இன் வர்த்தகநாமப் பெறுமானம் 15% இனால் அதிகரித்துள்ளதுடன், தரப்படுத்தலிலும், 88 ஆவது ஸ்தானத்திலிருந்து 79 ஆவது ஸ்தானத்துக்கு முன்னேற்றம் கண்டுள்ளது.
தொழில்நுட்ப நிறுவனங்கள் இப்பட்டியலில் தொடர்ந்தும் ஆதிக்கம் செலுத்துவதுடன், முதல் ஐந்து ஸ்தானங்களைக் கைப்பற்றியுள்ள அவை முதல் 100 இடங்களில் 20% வரையான ஸ்தானங்களை தமதாக்கியுள்ளன. தொடர்ந்து எட்டாவது ஆண்டாகவும் முதலாவது ஸ்தானத்தைத் தனதாக்கியுள்ள Apple இனைத் தொடர்ந்து Google, Microsoft, Facebook மற்றும் Amazon ஆகிய நிறுவனங்கள் பட்டியலில் உச்ச ஸ்தானங்களைத் தமதாக்கியுள்ளன.
முதல் 100 ஸ்தானங்களிலுள்ள வர்த்தகநாமங்கள் உலகில் 16 நாடுகள் மற்றும் பிராந்தியங்களைச் சார்ந்தவையாக உள்ளதுடன், அதிகூடிய எண்ணிக்கையாக அமெரிக்க வர்த்தகநாமங்கள் 54 ஸ்தானங்களையும் அதைத் தொடர்ந்து ஜேர்மனிய வர்த்தகநாமங்கள் 12 ஸ்தானங்களையும் ஜப்பானிய மற்றும் பிரெஞ்சு வர்த்தகநாமங்கள் முறையே ஏழு ஸ்தானங்களையும் தமதாக்கியுள்ளன. HUAWEI மட்டுமே இப்பட்டியலில் இடம்பிடித்துள்ள ஒரேயொரு வர்த்தகநாமமாகத் திகழ்கின்றது.
2017 ஆம் ஆண்டில் Mate, P மற்றும் Nova உற்பத்தி வரிசைகளுடன் தனது முழுமையான உற்பத்திகளால் வழிநடாத்தப்பட்ட வேகமான சர்வதேச வளர்ச்சியை HUAWEI அடையப்பெற்றுள்ளது. HUAWEI P10 மற்றும் HUAWEI Mate10 ஆகிய உற்பத்தி வரிசைகளின் அறிமுகம் அதன் உயர்தர உற்பத்தி வரிசையை மேம்படுத்த உதவியுள்ளதுடன், உயர் தொழில்நுட்ப உற்பத்தி வரிசை சந்தையில் HUAWEI இன் ஆதிக்கத்தை அதிகரிக்க உதவியுள்ளது. இதற்கிடையில் HUAWEI nova 2i ஆனது நவீன நவநாகரிக நுகர்வோரின் போக்குகள் மீது கவனம் செலுத்தியுள்ளதுடன், இளம் தலைமுறை மத்தியில் அபிமானத்தைச் சம்பாதித்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
19 minute ago
1 hours ago
1 hours ago