2021 ஓகஸ்ட் 04, புதன்கிழமை

23ஆவது ஆண்டாகவும் இடம்பெறவுள்ள 'FACETS Sri Lanka' நிகழ்வு

A.P.Mathan   / 2013 ஓகஸ்ட் 02 , மு.ப. 07:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

நூற்றுக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கண்காட்சியாளர்கள் தமது உற்பத்திகளை காட்சிப்படுத்தவுள்ள சர்வதேச இரத்தினக்கல் மற்றும் ஆபரணங்களின் காட்சியான FACETS Sri Lanka 2013 நிகழ்வு எதிர்வரும் ஓகஸ்ட் 29 முதல் செப்டெம்பர் 1ஆம் திகதி வரை ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க ஞாபகார்த்த கண்காட்சி நிலையத்தில் இடம்பெறவுள்ளது. இந்த ஆண்டு இடம்பெறவுள்ள கண்காட்சியில் விலைமதிப்பற்ற மற்றும் பெரும் விலைமதிப்புடைய இரத்தினக்கற்கள் அடங்கலாக பல்வேறுபட்ட இரத்தினக்கற்கள் மற்றும் ஆபரணங்களைக் கொண்டமைந்த 150 இற்கும் மேற்பட்ட காட்சிகூடங்கள் இடம்பெறவுள்ளன.
 
இலங்கை இரத்தினக்கல் மற்றும் ஆபரணங்கள் சங்கத்தால் ஏற்பாடு செய்யபட்டுள்ள FACETS Sri Lanka நிகழ்வு இரத்தினக்கல் மற்றும் ஆபரண வியாபாரிகள் அனைவரும் தமது உற்பத்திகளை சந்தையில் காட்சிப்படுத்துவதற்கு இடமளித்து, இலங்கையில் இரத்தினக்கல் மற்றும் ஆபரணத் தொழிற்துறையின் முக்கியத்துவம் தொடர்பில் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த உதவும். மேலும் 'இலங்கையில் இரத்தினக்கல் மற்றும் ஆபரணங்கள்' என்ற தலைப்பில் கருத்தரங்கு ஒன்றும் உள்நாட்டு மற்றும் சர்வதேசப் பேச்சாளர்களை உள்ளடக்கிய நிபுணர் குழு ஒன்றினால் நடாத்தப்படவுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .