
வாகன பராமரிப்பு உற்பத்திகளை விநியோகிப்பதில் பிரபல்யம் பெற்ற 3M லங்கா மூலம், வாடிக்கையாளர்களுக்கு சுயமாக தமது வாகனங்களை பராமரித்துக் கொள்வது தொடர்பான செய்முறை விளக்கங்களை வழங்கும் வகையில் நேரடி நிகழ்வொன்று அண்மையில் நிறுவனத்தின் தலைமைக்காரியாலயத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வாகனத்தின் தோற்றத்தை மெருகேற்றிக் கொள்வது மற்றும் வாகனத்துக்கு புதுப்பொலிவான தோற்றத்தை வழங்குவது தொடர்பான மிகவும் எளிமையான விளக்கங்களை வழங்கி இலங்கையில் வாகனப் பிரியர்கள் மத்தியில் 3M தயாரிப்புகள் குறித்து விழிப்பூட்டும் நோக்கில் இந் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இலங்கையில் வாகன உரிமையாளர் ஒருவருக்கு தமது வாகனம் மிகப்பெரிய சொத்தாகும். வாகனம் ஒன்றை கொள்வனவு செய்வது என்பது வாடிக்கையாளர் ஒருவர் மேற்கொள்ளும் இரண்டாவது மிகப்பெரிய முதலீடாக அமைந்திருக்கும். தற்போது வாகனங்களின் தொடர்ச்சியான விலையேற்றத்தின் காரணமாக பல மக்கள் தங்கள் வாகனத்தை நல்ல நிலைமையிலும், புதுப்பொலிவான தோற்றத்துடனும் பேண முனைகின்றனர். இதன் காரணமாக அவர்கள் புதிய வகையான வாகனத்தை கொள்வனவு செய்ய தீர்மானிக்கும் போது மறு விற்பனை மதிப்பு கருத்தில் கொள்ளப்படுகிறது.
நம்மில் பலர் நமது வாகனத்தை நேசிக்கிறோம். அதன் ஆரம்ப நிலைமையை தக்க வைத்துக் கொள்வதற்கு அதிகப்படியான பணத்தை செலவிடவும் தயாராக இருக்கிறோம். இருப்பினும், காலநிலை மாற்றங்கள், கீரல்கள்;, கறைகள், துருப்பிடித்தல், பறவை எச்சங்கள், மரங்கள், சூரியக்கதிர், அமில மழை, மணல், பசை போன்றவற்றினாலும் விசேடமாக தீய கார் ஷம்போ வகைகள் போன்றவற்றாலும் வாகனத்தின் பெயிண்ட் வேலை/நேர்த்தியான தொழிற்சாலை பெயிண்ட் வேலைப்பாடுகள் போன்றன சேதமாகும். வாகனங்களை கால இடைவெளிகளில் பராமரித்தல் மற்றும் பேணுதல் நன்மையாகும். இருப்பினும், வாகனத்தின் மீது பிரத்தியேக கவனம் செலுத்துவதன் மூலமாகவும் சிறந்த தரத்தில் அமைந்த ஷம்போ மற்றும் வெக்ஸ் வகைகளை பயன்படுத்துவதன் மூலமாகவும் வாகனத்திற்கு புதிய தோற்றத்தை வழங்க முடியும்.
நிறுவனத்தின் தொழில்நுட்ப அணியினர், 3M தயாரிப்புகள் மற்றும் வாகனத்துக்கு புதுப்பொலிவான தோற்றத்தை வழங்குவது குறித்தும் வாகன பராமரிப்புகள் தொடர்பான விளக்கங்களை வழங்கியிருந்தனர். மேலும் அவர்கள் வாகனத்தை கழுவுதல், வெக்ஸிங், வெக்கியூம் கிளினிங் மற்றும் திரவ அளவினை சரிபார்த்தல், டயர் வாயு அழுத்தம், பற்றரி, வாகன விளக்குகள், போக்குவரத்து குறியீடுகள், காற்று சுத்தமாக்கி மற்றும் A/C filter போன்றவற்றை பராமரிப்பதற்கான அவசியம் குறித்து விளக்கமளித்தனர். இந்த அணியினர் நிபுணர்கள் பயன்படுத்தும் தமது உற்பத்தி வரிசையில் உள்ள கார் வொஷ் ஷம்போ, வெக்ஸ், leather & vinyl restorer, tire restorer, கண்ணாடி துடைப்பான் மற்றும் microfiber துணி போன்ற முன்னணி தயாரிப்புகளை கொண்டு வாகனத்தை சுத்தப்படுத்துவது தொடர்பில் படிப்படியாக விளக்கமளித்தனர். தற்போது இத் தயாரிப்புகளை வீட்டிலேயே ஒருவர் பயன்படுத்த முடியும்.
3M லங்கா நிறுவனத்தின் தொழில்நுட்ப சேவைகள் பிரிவின் பொறியியலாளர் ரொமி பெரேரா கருத்து தெரிவிக்கையில், 'ஒருபோதும் சலவைத்தூள், சவர்க்காரம், ஷம்போ, மண்ணெண்ணெய், கரைப்பான்கள் போன்றவற்றை கொண்டு வாகனக் கண்ணாடிகளை சுத்தப்படுத்த வேண்டாம். மேலும் பத்திரிகைகள் போன்றவற்றால் கண்ணாடிகளை துடைப்பதை தவிர்க்க வேண்டும். இது வாகனத்தின் வெளித்தோற்றத்தை மிக கடுமையாக சேதப்படுத்தும்;' என்றார். 3M தயாரிப்புகள் நாடு முழுவதுமுள்ள சுப்பர் மார்க்கெட்களில் விற்பனை செய்யப்படுவதுடன், வாகன உரிமையாளர்கள் எவ்வித நிபுணத்துவமும் இன்றி சுயமாகவும், மிக எளிதாகவும் இத் தயாரிப்புகளை பயன்படுத்த முடியும். தமது வாகனங்களில் பயன்படுத்தும் தயாரிப்புகளின் தரம் குறித்து அதிகளவு அக்கறை செலுத்தும் வாகன உரிமையாளர்கள் தாம் சுயமாக இந்த தெரிவுகளை பயன்படுத்தி தன்னிறைவடைய முடியும். தாம் செலவிடும் பணத்துக்கு சிறந்த ஜொலிப்பையும், சிறந்த பொலிவையும் எதிர்பார்க்கும் வாகன உரிமையாளர்களுக்கு சிறந்த தீர்வாக பல தெரிவுகள் காணப்படுகின்றன.
இந்த நிகழ்வில் 3M லங்கா நிறுவனத்தின் தொழிற்துறை மற்றும் போக்குவரத்து வர்த்தக பிரிவின் முகாமையாளர் ரசித் செனரத் கருத்து தெரிவிக்கையில், 'உரிமையாளர் ஒருவருக்கு தமது வாகனத்தின் பெறுமதி எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை 3M நன்கறியும். வாகனம் ஒன்றை கொள்வனவு செய்வது என்பது வாடிக்கையாளர் ஒருவர் மேற்கொள்ளும் இரண்டாவது மிகப்பெரிய முதலீடாக அமைந்திருக்கும். பெரும்பாலும் அநேகமானோருக்கு வீடொன்று மிகப்பெரிய முதலீடாக அமைந்துள்ளது. எனவே வாகனமொன்றை கொள்வனவு செய்ய அதிகளவு சேமிப்பு தேவைப்படுகிறது' என தெரிவித்தார். ஆகவே, வாகனங்களின் உரிமையாளர்கள் தாம் சேமிக்கும் பணத்தை வாகன பராமரிப்பு நிலையங்களிலும், திருத்தும் நிலையங்களிலும் செலவிடுவதை குறைந்துக் கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது. 3M தயாரிப்புகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலமும், அவற்றின் பாவனை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலமும் வாடிக்கையாளர்களுக்கு வாகனங்களை சிறந்த நிலையில் பேண உதவும்' என மேலும் அவர் தெரிவித்தார்.