2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

3M மற்றும் CSSL இணைந்து நடத்திய SEARCC சர்வதேச மாநாடு 2013

A.P.Mathan   / 2013 செப்டெம்பர் 09 , பி.ப. 02:39 - 0     - {{hitsCtrl.values.hits}}


புத்தாக்கங்களை உருவாக்குவதில் சர்வதேச முன்னோடியான 3M இன் The 3M VolitionTM என்டர்பிரைஸ் நெட்வொர்க் தீர்வுகள் குழுவானது IT துறைக்கான தமது அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் வகையில் அண்மையில் கொழும்பில் நடைபெற்ற SEARCC சர்வதேச மாநாட்டிற்கு வெள்ளி அனுசரணையை வழங்கியிருந்தது. இந் நிகழ்வினை வருடாந்த தேசிய IT மாநாட்டுடன் (NIIT) இணைந்து இலங்கையின் கணினி சமூகம் (CSSL) ஏற்பாடு செய்திருந்தது.  
 
அங்கத்துவ நாடுகளில் சர்வதேச மாநாடுகள், கருத்தரங்குகள் மற்றும் போட்டிகள் ஆகியவற்றை நடத்தி அங்கத்துவ அமைப்புகள் மற்றும் IT துறையில் எதிர்கால அபிவிருத்திகளுக்கான தகவல் பரிமாற்றம் மற்றும் அனுபவங்களை பகிர்ந்து கொண்டு அதனூடாக ஒத்துழைப்பினை மேம்படுத்தும் ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் தேசிய ICT நிபுணத்துவ சங்கத்தின் மன்றமே தென் கிழக்காசிய பிராந்திய கணினி கூட்டமைப்பு (SEARCC) ஆகும். தற்போதைய தொழில்நுட்ப நடைமுறைகள், துறைசார் நிபுணர்கள் மற்றும் சக வலையமைப்பாளர்களுடனான தொடர்பின் ஊடாக தொழில் முனைவோர் மற்றும் கல்வியாளர்களுக்கு களம் அமைத்துக் கொடுப்பதே 2013 SEARCC சர்வதேச மாநாட்டின் குறிக்கோளாகும். 
 
'ICT: தாக்கத்திற்கான புத்துருவாக்கம், ஒருங்கிணைப்பு' என்பது இவ்வருட மாநாட்டின் தொனிப்பொருளாகும். இதன் போது ICT புத்துருவாக்கம் மற்றும் சிறந்த தீர்வுகளை உருவாக்குவதற்கான ஒருங்கிணைவு தொடர்பான பயன்பாடுகள் மற்றும் மக்களின் வாழ்க்கை மற்றும் பெருநிறுவனங்களின் நடைமுறை மாற்றங்கள் தொடர்பாக சாதகமான படையை கட்டியெழுப்புதல் குறித்து கலந்துரையாடப்பட்டன. 
 
இம் மாநாட்டில் 500 க்கும் அதிகமான IT நிபுணர்கள் மற்றும் துறைசார் நிபுணர்கள் கலந்து கொண்டனர். இந் நிகழ்வில் பல வெளிநாட்டு பிரதிநிதிகள் மற்றும் பேச்சாளர்கள் பல்வேறு பிரிவுகளில் தமது அனுபவங்களையும், தகவல்களையும் பகிர்ந்து கொண்டிருந்தனர். 36 பேர் கொண்ட உள்நாட்டு மற்றும் சர்வதேச பேச்சாளர்கள் ICT புத்துருவாக்கம், மொபைல் மற்றும் கிளவுட் கம்ப்யூட்டிங், நிர்வாகம் மற்றும் பாதுகாப்பிற்கான ICT எனும் தலைப்புகளின் கீழ் கலந்துரையாடினர். இந் நிகழ்வின் பேச்சாளர்களில் ஒருவரான 3M லங்கா நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் தலைவர் சுரேஷ் ஆனந்தப்பா புத்துருவாக்கத்தின் ஊடாக எவ்வாறு வளர்ச்சியை இயக்குவது என்பது தொடர்பில் கலந்துரையாடினார்.
 
இந் நிகழ்வில் 3M லங்கா நிறுவனத்தின் விற்பனை முகாமையாளர் டெரிக் ஃபெர்டினான்டஸ் கருத்து தெரிவிக்கையில், 'IT துறை சார்ந்தவர்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் இவ்வருடம் பல நிகழ்வுகளை ஏற்பாடு செய்ய 3M தீர்மானித்துள்ளது. ஆயிரக்கணக்கான ICT நிபுணத்துவர்களிடையே சர்வதேச தொடர்பாடல் தகவல் தொடர்பான எமது இலக்கினை அடைவதற்கான மிக முக்கிய நிகழ்வாக SEARCC மாநாடு அமைந்துள்ளது' என தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .