S.Sekar / 2021 மே 03 , மு.ப. 08:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
AIA உங்களுடைய காப்புறுதித் திட்டங்களை எந்தவொரு நேரத்திலும், எங்கிருந்தவாறும் அணுகி நிர்வகிப்பதற்கான ஒரே குடையின் கீழான டிஜிட்டல் தீர்வுகளை வழங்கும் புத்தம் புதிய AIA வாடிக்கையாளர் போர்டலை (இணைய முகப்பு) ஆரம்பித்துள்ளதாக அறிவித்துள்ளது. முந்தைய போர்;டலின் புதுப்பிக்கப்பட்ட மற்றும் மேம்படுத்தப்பட்ட தற்போதைய பதிப்பானது வாடிக்கையாளர்கள் தங்களது காப்புறுதித் திட்டங்கள், கொடுப்பனவு விவரங்கள் மற்றும் இழப்பீட்டுக் கோரிக்கை பற்றிய தகவல்கள் போன்ற மேலும் பல விடயங்களை முற்று முழுதாக ஒன்லைனில் அணுகும் வசதியை வழங்குகின்றது.

இப்புதிய வாடிக்கையாளர் போர்டலானது மிகவும் பாதுகாப்பானதாக புதிய தொழில்நுட்பத்துடன் மும்மொழிகளிலும் அணுகக்கூடியவாறு வடிவமைக்கப்பட்டுள்ளதோடு, வாடிக்கையாளர்கள் தங்களது காப்புறுதிகளை மிகவும் கட்டுப்பாட்டுடன் அணுகுவதையும் அனுமதிக்கின்றது. இது வாடிக்கையாளர்கள் AIA உடன் மிகவும் இலகுவான முறையில் தொடர்புகளை ஏற்படுத்துவதை அனுமதிக்கின்ற மிகவும் வேகமான மற்றும் சௌகரியமான நிகழ்நேரத் தளமாகவும் திகழ்கின்றது. வாடிக்கையாளர்கள் தங்கள் வீடுகளில் மிகவும் சௌகரியமாகவும், பாதுகாப்பாகவும் இருந்தவாறே அவர்களது அனைத்து விதமான சேவைக் கோரிக்கைகளையும் மேற்கொள்வதற்கு உதவும் விதமாக இது இருப்பதோடு, கட்டுப்பணங்களைச் செலுத்துதல், காப்புறுதியின் நிலையினைப் பரிசோதித்தல், மற்றும் காப்புறுதி விபரங்களை அணுகுதல் போன்றவற்றிற்காகவும் இத்தளத்தைப் பயன்படுத்த முடியும். எனவே வாடிக்கையாளர்கள் தற்போது AIA காரியாலயங்களுக்கு விஜயம் செய்யவோ அல்லது AIA வாடிக்கையாளர் சேவை மையத்தின் தொலைபேசியில் நேரத்தைச் செலவிடவோ அவசியமிருக்காது. ஏனெனின், அவர்களின் அனைத்துக் காப்புறுதி விவரங்களும் அவர்களின் விரல்நுனியிலேயே தற்போது உள்ளது. இப்புதிய போர்டலானது திறன் கைபேசிகள், டெப்லெட் கணினிகள் மற்றும் தனிநபர் கணினிகள் போன்றவற்றின் ஊடாக எவ்விதத் தடையுமின்றி இலகுவாக அணுகும் விதமாகவே வடிவமைக்கப்பட்டுள்ளது.
புதிய வாடிக்கையாளர் போர்டலானது மிகவும் இலகுவான ஈடுபாட்டிற்கான தளத்தினை உருவாக்குவதுடன் வாடிக்கையாளர்களுடனான மிகவும் வினைத்திறனான முறையில் முகவர் இடைவினையினை ஏற்படுத்துவதற்கும் உதவுகின்றது. AIA உடனான வாடிக்கையாளர் தொடர்பாடல் சேவையின் காத்திருப்பு நேரத்தை இது முற்றிலும் குறைப்பதோடு, மிகவும் வேகமான செயலாக்கத்தின் துரிதப்படுத்தலையும், வாடிக்கையாளர் தகவலுக்கான இலகுவான அணுகலையும் இயலுமாக்குகின்றது. மேலும் இது நிச்சயமாக நேரத்தைச் சேமிப்பதுடன், சௌகரியத்தினையும் அதிகரிக்கின்றது. அத்துடன் வாடிக்கையாளர் சேவையினை அவர்கள் பயனடையும் விதமாக அவர்களுக்கான நேர்த்தியான அனுபவத்தினை உறுதிப்படுத்தும் விதமாக மிகவும் வினைத்திறனானதும், துல்லியமானதுமான சேவையினையும் உருவாக்குகின்றது.
9 minute ago
12 minute ago
22 minute ago
24 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
12 minute ago
22 minute ago
24 minute ago