Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2016 ஏப்ரல் 07 , மு.ப. 04:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
AIA இன்ஷூவரன்ஸ் லங்கா பிஎல்சி,ரஸல் டிமெலை தமது அதியுயர் பணிப்பாளர் சபைக்கு சுயாதீன நிறைவேற்றதிகாரமற்ற பணிப்பாளராக நியமனம் செய்துள்ளது. இவர் தீபால் சூரியாரச்சியுடன், அதியுயர் பணிப்பாளர் சபைக்கு சுயாதீன நிறைவேற்றதிகாரமற்ற பணிப்பாளராக நியமனம் பெற்ற இரண்டாவது இலங்கையராவார். தீபால் மற்றும் ரஸல் சுயாதீன நிறைவேற்றதிகாரமற்ற பணிப்பாளர்களாக நிறுவனத்தில் பங்குதாரர்களின் நலன்காப்பில் முக்கிய பங்காற்றுவார்கள். இவர்கள் இலங்கை நிதிச் சேவைகள் துறையில் பெற்றுள்ள பாரிய அனுபவம் மற்றும் புரிந்துணர்வு இதற்கு துணையாக இருக்கும் என நிறுவனம் அறிவித்துள்ளது.
ரஸல் டிமெல் NDB குழுமத்தில் கடந்த 30 ஆண்டுகள் சேவையாற்றியுள்ளார். அதன் பணிப்பாளர்ஃ குழும பிரதான நிறைவேற்றதிகாரி பதவியில் இருந்து 2013இல் ஓய்வு பெற்றார். NDB குழுமத்தில் பணியாற்றிய நீண்ட காலத்தில் பல்வேறு முக்கிய உயர் பதவிகளை வகித்தார். தோட்டத்துறையை தனியார் மயப்படுத்துவதில் முக்கிய பங்கை ஆற்றினார்.
தற்போது வீடமைப்பு அபிவிருத்தி நிதிக் கூட்டுத்தாபனம் மாலைதீவு, TAL ஹோட்டல்ஸ் லங்கா PLC (தாஜ் சமுத்திரா) EAP ஹோல்டிங்ஸ் பிறை லிமி மற்றும் சிங்கர் ஃபைனான்ஸ் பிஎல்சி ஆகிய நிறுவனங்களின் பணிப்பாளர் சபை அங்கத்தவராக உள்ளார். மேலும் உலக வங்கிக் குழும, சர்வதேச நிதி கூட்டுத்தாபனத்தின் (IFC) ஆலோசகராகவும் உள்ளார். இங்கிலாந்து பட்டய முகாமைத்துவ கணக்காளர் நிறுவனம் (FCMA), குளோபல் பட்டய முகாமைத்துவ கணக்காளர் (CGMA) மற்றும் இலங்கையின் சான்றளிக்கப்பட்ட முகாமைத்துவ கணக்காளர் நிறுவனம் (FCMA), ஆகியவற்றின் அங்கத்தவராவார்.
12 minute ago
19 minute ago
24 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
19 minute ago
24 minute ago