2025 மே 21, புதன்கிழமை

ASUS - சிங்கர் ஸ்ரீ லங்கா உடன்படிக்கை

Editorial   / 2018 மே 27 , பி.ப. 11:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிங்கர் ஸ்ரீ லங்கா பீஎல்சி, இலங்கையில் ASUS மடிகணினிகளுக்கான நுகர்வோர் notebook விநியோகத்தராகவும் மற்றும் பிரத்தியேகமான பாரிய சில்லறை விற்பனைச் சங்கிலியாகவும் (Large Format Retailer - LFR) நியமனம் செய்யப்பட்டுள்ளது.  

இந்த உடன்படிக்கை தொடர்பில் அறிவிப்பை வெளியிடுவதற்காக அண்மையில் கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில், பல்வேறு நவீன ASUS மடிகணினிகளும் அறிமுகம் செய்து வைக்கப்பட்டிருந்தன. சிங்கர் ஸ்ரீ லங்கா பீஎல்சி நிறுவனத்தின் குழும பிரதம நிறைவேற்று அதிகாரியான அசோக பீரிஸ், சிங்கர் ஸ்ரீ லங்கா பீஎல்சி நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் பணிப்பாளரான குமார் சமரசிங்க, சிங்கர் முகாமைத்துவ அணியின் ஏனைய பல சிரேஷ்ட அதிகாரிகள், ASUS அணியின் சார்பில் உள்நாட்டு உற்பத்தி முகாமையாளரான லைலா லின், இலங்கை மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளுக்கான முகாமையாளரான இஷ்கி இர்ஷாத், வர்த்தகத்துறை மற்றும் LFR பிரிவு முகாமையாளரான கசுன் அந்ரமானகே ஆகியோர் இந்நிகழ்வில் சமூகமளித்திருந்தனர்.  

இன்றைய மற்றும் நாளைய ஸ்மார்ட் வாழ்க்கைக்கான உற்பத்திகளைத் தோற்றுவிப்பதில் கவனம் செலுத்தியவாறு, ஒரு மாபெரும் பல்தேசிய கணினி வன்பொருள் நிறுவனமாக ASUS திகழ்ந்து வருகின்றது. 
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .