Editorial / 2020 ஜூலை 05 , பி.ப. 04:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
BIC Vietnam இன் மேற்பார்வைக் குழுவில் அங்கத்தவராக Fairfax இன்சூரன்ஸின் பிரதம நிதி அதிகாரியாக ரவிசங்கர் விக்னேஸ்வரன் நியமிக்கப்பட்டு உள்ளார். நிதித் துறையில் தகைமை வாய்ந்த நிபுணரான ரவிசங்கர், ஏழு வருடங்களுக்கு மேலாக, Fairfax இன்சூரன்ஸ் நிறுவனத்தில் பணியாற்றியு உள்ளார்.
BIC (Bank for Investment and Development of Vietnam Insurance Company) வியட்நாம் என்பது, வியட்நாமிலுள்ள மாபெரும் முதலீட்டு வங்கியுடன் Fairfax கைகோர்த்து நிறுவப்பட்ட இணைக் காப்புறுதி நிறுவனமாகும். 100மில்லியன் டொலர்கள் வியாபாரத்துடன் வேகமாக வளர்ச்சியடைந்து வரும் BIC, 26 கிளைகள், 158 விற்பனை அலுவலகங்கள், 1,500க்கும் அதிகமான காப்புறுதி முகவர்களைத் தன்வசம் கொண்டுள்ளது.
இந்த நியமனம் தொடர்பில், ரவிசங்கர் கருத்துத் தெரிவிக்கையில், “BIC Vietnam இன் மேற்பார்வை சபையில் அங்கத்தவராக நியமிக்கப்பட்டு உள்ளதையிட்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன். Fairfax நிறுவனத்தில் நாம் முன்னெடுக்கும் பிரத்தியேகமான செயற்பாடுகளுக்கு மேலும் சான்று பகரும் வகையில் இந்த வாய்ப்பை நான் கருதுவதுடன், கண்டிப்பாகச் சிறந்த சவாலாகவும் அமைந்திருக்கும் எனவும் கருதுகின்றேன்” என்றார்.
பங்குதாரர்களால் மேற்பார்வைப் பணிப்பாளர் சபை நியமிக்கப்படுவதுடன், இவர்கள் பணிப்பாளர் சபையை விட உயர்ந்த மட்டத்தைச் சேர்ந்ததாக உள்ளது. மொத்தமாக ஐந்து அங்கத்தவர்கள் இந்தக் குழுவில் காணப்படுவதுடன், இந்தக் குழுவின் தலைமை அதிகாரியாக ரவிசங்கர், Fairfax சார்பாகத் தம்மைப் பிரதிநிதித்துவம் செய்கின்றார். பொதுப் பங்காளர்களால் குறிப்பிடப்படும் பொறுப்புகள், செயற்பாடுகள் ஆகியவற்றை மேற்பார்வை பணிப்பாளர் சபை முன்னெடுக்க எதிர்பார்க்கப்படும்.
43 minute ago
44 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
44 minute ago
1 hours ago
1 hours ago