Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Editorial / 2019 ஜூன் 06 , மு.ப. 08:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
மாற்றுத்திறன் படைத்தவர்கள் ஏனையவர்களுக்கு சமமாகவும் நாட்டின் அபிவிருத்திக்கு பங்களிப்புச் செலுத்துபவர்களாகவும் வலுப்படுத்தும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட CBL சஹன் செவன ரணால, கடுவளை பகுதியில் அமைந்துள்ள ‘ஹோப்’ குக்கீஸ் தயாரிக்கப்படும் புதிய இடத்துக்கு மாற்றப்பட்டது.
முன்னர் இருந்ததைவிட விசாலமான இடப்பரப்பைக் கொண்டுள்ள இந்தப் புதிய வசதியை CBL குழுமத்தின் தலைவர் ரம்யா விக்ரமசிங்க திறந்துவைத்தார். இந்தப் புதிய தொழிற்சாலையில் மாற்றுவலுவடைய 18 பேர் பணியாற்றுகின்றனர்.
இந்தப் புதிய வசதியானது, நிலக்கடலை குக்கீஸ், பட்டர் குக்கீஸ், சொக்லட் சிப் குக்கீஸ், சிசேம் குக்கீஸ் மற்றும் கோக்கனட் குக்கீஸ் போன்ற சுவையிலான வேறுபட்ட ‘ஹோப் குக்கீஸ்’ உற்பத்தியை தொடர்ந்தும் மேற்கொள்ளும்.
சஹன் செவனவில் பணியாற்றுபவர்களுக்கு ஆட்ரிசன் குக்கீஸ் உற்பத்திகள் மற்றும் நிபுணர்களின் கீழான குக்கீஸ் தயாரிப்பு போன்றன தொடர்பில் CBL பணியாளர்களின் மேற்பார்வையில் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. ஒட்டுமொத்தமான உற்பத்தியும் உயர்ந்த தரத்தில் இருப்பதை உறுதிப்படுத்துவதற்காக மாற்றுவலுவுடையவர்களுக்குப் பயிற்சி வழங்குவதற்காக விசேடமாக பயிற்றுவிக்கப்பட்ட குழுவொன்று செயற்படுகிறது.
‘ஹோப் குக்கீஸ்’ தயாரிப்புக்குத் தேவையான தரமான முன்னணி மூலப்பொருட்களை CBL வழங்கி வருவதுடன், உற்பத்திகளின் சந்தைப்படுத்தல்கள் மற்றும் விநியோகத்துக்குப் பொறுப்பாக உள்ளது. நாடு முழுவதிலும் உள்ள முன்னணி சுப்பர் மார்க்கட்டுக்கள் மற்றும் பலசரக்குக் கடைகளில் இந்த உற்பத்திகள் கிடைக்கப்பெறுகின்றன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .