2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

CEAT டயர் உற்பத்தி நிறுவனத்தின் வீதிப் பாதுகாப்பு நிகழ்ச்சி

Kogilavani   / 2016 டிசெம்பர் 29 , மு.ப. 05:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

CEAT Kelani Holdings இலங்கை தனது 150ஆவது வீதிப் பாதுகாப்பு நிகழ்ச்சி அண்மையில் மிலாகிரிய சென்.போல்ஸ் மகளிர் பாடசாலையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியானது பொலிஸ் அதிகாரிகளின் வீதி பாதுகாப்பு பற்றிய காட்சியும் மாணவிகளுக்கு வீதிபாதுகாப்பு உபகரணங்களையும் பொருட்களையும் அன்பளிப்பு செய்தது.மேலும் வீதி பாதுகாப்பு பற்றிய ஒரு நாடகமும் இடம்பெற்றதுடன், மாணவிகளுக்கு வீதி பாதுகாப்பு கைநூல்களும் விநியோகிக்கப்பட்டது. இதனால், 400 மாணவிகள் பயன்பெற்றனர்.

CEAT கம்பனியின் “பாடசாலை பிள்ளைகளுக்கான வீதிப் பாதுகாப்பு சமுதாய உதவித் திட்டத்தில் மாணவர்கள், பெற்றோர், போக்குவரத்து சேவைகளை வழங்குவோர் பிரதானமாகப் பாடசாலை வேன் சாரதிகள் ஆகியோர் ஈடுபடுத்தப்படுவதுடன் கூம்புகள் உட்பட வாகனப் போக்குவரத்து அங்கிகள், பாதுகாப்பு ஜக்கெட்டுகள், போக்குவரத்து அடையாளக் குறிகள் மற்றும் உதவிப் பொருட்கள் அடங்கிய போக்குவரத்து முகாமைத்துவப் பொருட்கள் ஒவ்வொரு பாடசாலைக்கும் அன்பளிப்பு செய்யப்படுகின்றது.

இலங்கையில் வீதிப் பாதுகாப்பு பெரும் பிரச்சினையாகிவிட்டது என்று தெரிவித்த CEAT Kelani Holdings நிறுவன சந்தப்படுத்தல் பிரதி பொது முயாமயாளர் பிஷ்றி லத்திப் போக்குவரத்து விதிகளை அலட்சியம் செய்வதாலும், விதிகளை கடைப்பிடிக்காமையாலும் ஏற்படும் வீதி விபபத்துக்களால் மரணமடைவோரினதும் காயங்களுக்கு உள்ளாவோரினதும் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரித்து வருவதாக கூறினார்.

மோட்டார் வாகனப் போக்குவரத்துடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்ட பொருட்களை தயாரிப்பவர்கள் என்ற முறையில் இதற்கு திர்வுகாண நாம் ஏதாவது செய்ய வேண்டும் என்ற முதுயற்சியில் 7 வருடங்களுக்கு முன்னரே வீதிப் பாதுகாப்பு நிகழ்ச்சியை ஆரம்பித்தோம் என்றும் அவர் கூறினார்.

“Maga Yana Maga” என்ற தலைப்பில் 2009ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட இந்நிகழ்ச்சி இலங்கை மக்கள் மனதில் வீதிப் போக்குவரத்து விதிகளை பதியவைக்கும் நம்பிக்கையுடன் பாடசாலை மட்டத்தில் வீதி மற்றும் போக்குவரத்து பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதே நோக்கமாகும். இந்த நிகழ்ச்சி இன்று வரை நாட்டின் தென்மாகாணம், வடமாகாணம், வடமேல் மாகாணம், மத்திய மாகாணம், கிழக்கு மாகாணம் ஆகியவற்றில் நடத்தப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X