Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
S.Sekar / 2021 பெப்ரவரி 12 , மு.ப. 08:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையின் கலப்பு அபிவிருத்தி நிர்மாணத் திட்டமான Cinnamon Life, அதன் நிர்மாணப் பணிகளில் மற்றுமொரு படியை பூர்த்தி செய்துள்ளதாக அறிவித்துள்ளது. அதன் செயற்திட்ட அலுவலகம் மற்றும் ‘The Suites’ வதிவிட டவர்களுக்கான Certificate of Conformity (COC) பெற்றுள்ளதாக அறிவித்துள்ளது.
தற்போது நிலவும் தொற்றுப் பரவலுடனான சவால்கள் நிறைந்த சூழ்நிலையிலும், Cinnamon Life செயற்திட்டம் இடைவிடாது முன்னேற்றத்தை பதிவு செய்வதை காண முடிகின்றது.
இரு நிர்மாணத் தொகுதிகளுக்கும் முழுமையானதும் இறுதியானதுமான சான்றிதழ் கிடைத்துள்ள நிலையில், சகல நிர்மாணப் பணிகளும் பொருத்தமான விதிமுறைகளின் பிரகாரம் அமைந்துள்ளதையும் சகல பாதுகாப்பு வழிகாட்டல்களும் பின்பற்றப்பட்டுள்ளதையும் உறுதி செய்யப்பட்டுள்ளது. 2021 மார்ச் மாதமளவில் Cinnamon Life இலுள்ள ‘The Suites’ மற்றும் ‘The Offices’ ஐ உரிமையாளர்களிடம் கையளிப்பதற்கு John Keells Properties அணி தற்போது தயாராகிய வண்ணமுள்ளது.
ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் சொத்துக்கள் குழுமத்தின் பிரிவுத் தலைவர் நயன மாவில்மட கருத்துத் தெரிவிக்கையில், 'தேசிய ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த இந்தத் திட்டத்தை பூர்த்தி செய்வது தொடர்பில் கடந்து வந்த வரலாற்றுப் பாதையை எடுத்துக் கொண்டால், அதில் நாம் எதிர்கொண்ட சவால்களுக்கு சலிக்காமல் மீண்டெழுந்து இந்தத் திட்டத்தை பூர்த்தி செய்வதற்கு எமது அணியினர் காண்பித்த அர்ப்பணிப்பை கருதும் போது நாம் மிகவும் பெருமை கொள்ள வேண்டியுள்ளது. இன்று நாம் நிர்மாணிக்கும் இந்த தொகுதி, கொழும்பின் வானுயர்ந்த கட்டடங்களில் புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை. அத்துடன், இலங்கையர்கள் மாத்திரமன்றி, முழு தெற்காசிய பிராந்தியத்தைச் சேர்ந்தவர்களினதும் வாழ்க்கைத்தரம், வணிகம் மற்றும் வியாபார அனுபவத்தை மாற்றியமைப்பதாக அமைந்திருக்கும். தொற்றுப் பரவல் காரணமாக பெருமளவு கட்டுப்பாடுகள் எழுந்த போதிலும், நாம் தொடர்ச்சியாக பணிகளை பாதுகாப்பான முறையில் முன்னெடுத்திருந்தோம்.' என்றார்.
18 minute ago
58 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
58 minute ago
1 hours ago
2 hours ago