2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

DSI மெகா 2016 ஷொப்பிங் விழா

Kogilavani   / 2016 டிசெம்பர் 29 , மு.ப. 05:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

DSI மெகா 2016 நிகழ்வு அண்மையில் ஆரம்பமாகியது. இந்நிகழ்வானது இல. 257, ஹைலெவல் வீதி, மஹரகமவில் அமைந்துள்ள டி.சம்சன் அன்ட் சன்ஸ் பிரைவெட் லிமிட்டெட்டின் தலைமை அலுவலகக் கட்டடத்தொகுதியில் இடம்பெற்றதுடன் களியாட்டத்துடன் கூடிய விநோத திருவிழாவாக நடைபெற்றது. DSI Mega 2016 நிகழ்வில் பிரதம அதிதிகளாக டி.சம்சன் அன்ட் சன்ஸ் நிறுவனத்தின் தலைவரான நந்ததாஸ ராஜபக்ஷ, டி.சம்சன் அன்ட் சன்ஸ் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளரான துஷித்த ராஜபக்ஷ இந்நிறுவனத்தின் பணிப்பாளரான கௌசல்யா பெரேரா, டி.சம்சன் அன்ட் சன்ஸ் நிறுவன பிரதம செயற்பாட்டுத்திறன் அதிகாரியான ருவான் கன்னங்கர ஆகியோர் பங்கேற்றனர்.   DSI Mega 2016 இம்மாதம் 30ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

கொழும்பில் அமைந்துள்ள முதன்மையான வணிக மற்றும் ஷொப்பிங் நிலையமானது இலவச பார்க்கிங் வசதியை வழங்குவதுடன் பாதணிகள், ஆடை, இலத்திரனியல் உபகரணங்கள், அலைபேசிகள், கணினிகள், மோட்டார் சைக்கிள்கள், மௌன்டன் சைக்கிள்கள், கூரைத் தீர்வுகள், சூரிய கல சக்தித் தீர்வுகள், உணவு, குடிபான வகைகள் மற்றும் நிதியியல் சேவைகள் என அனைத்தையும் உள்ளடக்கியதாக உள்ளதுடன் இவை அனைத்தையும் குறைந்த விலைகள், விசேட விலைக்கழிவுகள், விசேட சலுகைகளில் பெற்றுக்கொள்ளலாம்.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X