2025 மே 21, புதன்கிழமை

Dell பங்காளர் விருதுகள் நிகழ்வில் சிங்கர் கௌரவிப்பு

Editorial   / 2018 ஏப்ரல் 24 , மு.ப. 09:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிங்கர் ஸ்ரீ லங்கா பீஎல்சி, அண்மையில் இடம்பெற்ற DellEMC பங்காளர் விருதுகள் நிகழ்வில் 2018 ஆம் நிதியாண்டுக்கான நுகர்வோருக்கான மிகச் சிறந்த கணினி விநியோகத்தர் என்ற விருதை வென்றுள்ளது. தாஜ் சமுத்ரா ஹோட்டலில் இடம்பெற்ற இந்த  விருது வழங்கும் நிகழ்வில், உள்நாட்டு மற்றும் சர்வதேச தகவல் தொழில்நுட்பத் துறை சார்ந்த முன்னணி பிரபலங்கள் கலந்து கொண்டனர்.   

2018 நிதியாண்டில் நுகர்வோர் பிரிவின் கீழ், Dell வர்த்தகத்துக்கு சிங்கர் நிறுவனம் ஆற்றியுள்ள மிகச் சிறந்த பங்களிப்பின் பெறுபேறாக ‘நுகர்வோருக்கான மிகச் சிறந்த கணினி விநியோகத்தர்’ என்ற விருதை அது தனதாக்கியுள்ளது. சில்லறை வர்த்தகம் மற்றும் முகவர் விநியோகம் ஆகியன தொடர்புபட்ட நுகர்வோர் பிரிவின் கீழ், அதியுச்ச பங்களிப்பை சிங்கர் ஸ்ரீ லங்கா பீஎல்சி நிறுவனம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

நுகர்வோருக்கான மிகச் சிறந்த கணினி விநியோகத்தர் விருதுக்குப் புறம்பாக, சிங்கர் ஸ்ரீலங்கா பீஎல்சி நிறுவனத்தின் சிரேஷ்ட பிராந்திய முகாமையாளரான சரித பெரேரா, 2018 ஆம் நிதியாண்டுக்கான ‘நுகர்வோருக்கான மிகச் சிறந்த கணினி விற்பனை ஆளணி நபர் (விநியோகம்)’ விருதையும் வென்று நாட்டில் முன்னிலை வகிக்கும் வர்த்தக நாமத்தைப் பொறுத்தவரையில் அந்த இரவுப்பொழுதை மிகவும் விமரிசையானதாக மாற்றியமைத்துள்ளார்.   

சிங்கர் ஸ்ரீ லங்கா பீஎல்சி நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் பணிப்பாளரான குமார் சமரசிங்க கூறுகையில், “நாட்டில் முதலாவது ஸ்தானத்தில் திகழும் நுகர்வோர் வர்த்தக நாமம் என்ற வகையில், சிங்கர் ஸ்ரீ லங்கா நிறுவனத்தின் வலுவான விநியோக வலையமைப்பு மற்றும் நாடளாவிய ரீதியிலான மிகச் சிறந்த விற்பனைக்குப் பின்னரான சேவை வலையமைப்பு ஆகியவற்றை மீளவும் வலியுறுத்துவதுடன், சிங்கரின் மூலமாக சர்வதேச வர்த்தக நாமமான DELL இனை இலங்கை மக்களும் அனுபவிப்பதற்கு ஊக்குவிப்புகள் உள்ளிட்ட அதன் தனித்துவமான சலுகைகள் வழிகோலியுள்ளன. இந்த உச்ச சாதனையையிட்டு, நாம் பெருமை கொள்வதுடன், DELL வழங்கல்களை அனைத்து இலங்கை மக்களுக்கும் நாம் தொடர்ந்தும் அறிமுகம் செய்வோம்”  என்று குறிப்பிட்டார்.   

2014 ஆம் ஆண்டில் சிங்கர் மற்றும் DELL நிறுவனங்கள் பங்காளராக ஒன்றிணைந்ததுடன், குறுகிய தொழிற்பாட்டுக் காலத்துக்குள் இலங்கையில் DELL விற்பனையில் துரித வளர்ச்சியை சிங்கர் வெளிப்படுத்தியுள்ளதுடன், அதன் பெறுபேறாக, இலங்கையில் அதன் ஒட்டுமொத்த சந்தைப்பங்கில் அதிகரிப்பை ஏற்படுத்தியுள்ளது.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .