Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2016 ஜனவரி 19 , மு.ப. 07:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
பஹ்ரேனின் முன்னணி பணப்பரிமாற்ற சேவையான EzRemit சேவையைப் பயன்படுத்துபவர்கள் கொமர்ஷல் வங்கி ஊடாக இலங்கைக்கு உடனடியாகப் பணப்பரிமாற்றத்தை மேற்கொள்ளும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இரு நிறுவனங்களினதும் இணைய வழி செயற்பாடு ஒருங்கிணைக்கப்பட்டுள்ளதன் மூலமே இந்த வாய்ப்பு வாடிக்கையாளர்களுக்கு கிட்டியுள்ளது.
இந்தப் புதிய விருத்தியானது பஹ்ரேனில் கொமர்ஷல் வங்கியின் வெளிநாட்டு நாணய பரி-மாற்றம் சேவையை மேலும் ஸ்திரப்படுத்தி உள்ளது. எண்ணெய் வளம் மிக்க பாரசீக வளைகுடா பிரதேசத்தில் வாழும் பெரும் தொகையான இலங்கையர்களுக்கு, இது ஒரு மகத்தான வாய்ப்பாக அமைந்துள்ளது. பஹ்ரேன் நிதிக் கம்பனியான BFC யின் நாணய பரிமாற்று சேவையான ExRemit பெரும்பாலான இலங்கையர்களுக்கு நாணய பரிமாற்ற சேவையை வழங்கி வருகின்றது. பஹ்ரேனில் ExRemit 39 கிளைகளைக் கொண்டுள்ளது.
இந்த இணைய வழி ஒருங்கிணைப்பின் விளைவாக ExRemit மூலம் பணம் அனுப்புகின்றவர்களும் அவற்றைப் பெற்றுக் கொள்கின்றவர்களும் ஆக்கபூர்வமான சேவையைப் பெற முடிகின்றது. பணம் பெறுகின்றவர்கள் நேரடியாக தமது வங்கிக் கணக்குக்கு பணத்தைப் பெற்றுக் கொள்ளமுடியும். அவ்வாறு பணம் கணக்கில் பெறப்பட்ட ஒரு சிலநிமிடங்களிலேயே அதை நாடு முழுவதும் உள்ள கொமர்ஷல் வங்கியின் 246 கிளைகள் ஊடாகப் பெற்றுக் கொள்ளவும் முடியும்.
மேலும் இந்தச் சேவை ஊடாக வங்கி விடுமுறை தினங்கள் உட்பட வருடம் 365 நாட்களும் 24 மணிநேரமும் பணத்தைப் பெறலாம்.
2003இல் தொடங்கப்பட்ட ExRemit சேவை பஹ்ரேனில் விருத்தி அடைந்து வரும் புலம்பெயர்ந்த சமூகத்தவர்களின் பணப்பரிமாற்ற தேவை கருதி தொடங்கப்பட்டது. இன்று ExRemit உலகில் 30க்கும் மேற்பட்ட நாடுகளில் 4,000க்கும் அதிகமான முகவராண்மைகளைக் கொண்டு செயற்படுகின்றது. அதி நவீன தொழில்நுட்பத்துடன் நம்பத்தகுந்த சேவையை பரந்த நிபுணத்துவத்துடன் வழங்கி வருகின்றது. ExRemit சேவையானது மிகவும் பாதுகாப்பானதும் நம்பிக்கையானதும் ஆக்கபூர்வமானதும் ஆகும்.
கொமர்ஷல் வங்கியின் வெளிநாட்டுச் செயற்பாடுகள் பங்களாதேஷில் 18 கிளைகளைக் கொண்டதாகவும், மியன்மாரில் யங்கூனில் பிரதிநிதிகள் அலுவலக செயற்பாடுகளைக் கொண்டதாகவும் காணப்படுகின்றது. 2015 செப்டெம்பரில் மாலைதீவில் முதல் வரிசை வங்கியொன்றை முழு அளவில் திறப்பதற்கான உரிய அங்கிகாரத்தையும் வங்கி பெற்றுள்ளது.
3 hours ago
6 hours ago
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago
7 hours ago
8 hours ago