Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2016 ஒக்டோபர் 25 , பி.ப. 06:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாடசாலை சிறுவர்கள் மத்தியில் தொழில்பாடசாலை சிறுவர்கள் மத்தியில் தொழில் மற்றும் ஆளுமை விருத்தியை இலக்காகக் கொண்டு, Fashion Bug அண்மையில் இரு வர்த்தக சமூகப் பொறுப்புணர்வுச் செயற்றிட்டங்களை முன்னெடுத்துள்ளது.
இச்செயற்றிட்டங்களில் 800க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு, தமது எதிர்கால தொழில் வாழ்க்கையில் வெற்றி காண்பதற்கு உதவுகின்ற வகையில், பொருத்தமானத் தொழிலைத் தேர்ந்தெடுப்பது மற்றும் ஆளுமையை விருத்தி செய்வது தொடர்பில் விலைமதிப்பற்ற ஆலோசனைகளைப் பெற்றுள்ளனர்.
Fashion Bug நிறுவனத்துக்கு விருதை வென்று கொடுத்த “Sisu DiriMaga” என்ற அண்மையச் செயற்றிட்டமும் இதில் உள்ளடங்கியிருந்ததுடன், இதுவரை நாடெங்கிலுமுள்ள 15,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் அதன் மூலமாகப் பயனடைந்துள்ளனர். இம்முறை கண்டி பதியுதீன் பெண்கள் பாடசாலையில் “SisuDiriMaga” நிகழ்வு ஏற்பாடுச் செய்யப்பட்டிருந்ததுடன், 400 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் அதில் பங்குபற்றியிருந்தனர்.
Winsys Ne tworks & Training Institute என்ற பயிற்சி நிலையத்தின் பணிப்பாளர் சபைத் தலைவரான சியாம் ஆப்தீன் இந்தத் தொழில் வழிகாட்டல் நிகழ்வுகளை நடாத்தியதுடன், Fashion Bug இன் பிரதிப் பொது முகாமையாளரான கலாநிதி ஃபராஸ் ஹமீட், மனித வளங்கள் மேம்பாட்டு முகாமையாளரான நாமல் எக்கநாயக்க, சிரேஷ்ட சந்தைப்படுத்தல் அதிகாரியான இஷான் கொடமான்ன, பிராந்திய முகாமையாளரான ஃபைஷாட் மொஹமட் அடங்கலாக அந்நிறுவனத்தின் பல்வேறு பிரதிநிதிகளும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். எதிர்காலத்தைத் திட்டமிடுதல் மற்றும் அடையக்கூடிய இலக்குகளை நிர்ணயித்தல் போன்றவற்றின் முக்கியத்துவம் இந்நிகழ்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Fashion Bug தனது Sisu DiriMaga தொண்டு அமைப்பினூடாக நடாத்தப்படுகின்ற இந்நிகழ்வுகள் மூலமாக நாடெங்கிலும் 100,000 க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு நற்பயனளிக்கும் இலக்கைக் கொண்டுள்ளது.
21 minute ago
25 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
25 minute ago
1 hours ago
1 hours ago