Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Editorial / 2019 பெப்ரவரி 07 , மு.ப. 10:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
டிஜிட்டல் ஹெல்த் (பிரைவட்) லிமிட்டட் மூலம் இயக்கப்படும் Doc990 இன் முழுமையான துணை நிறுவனமான இலங்கையின் பிரதான இணைப்பு வழங்குனரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி, Doc990 mobile app அல்லது www.doc.lk எனும் இணையத்தளத்தின் ஊடாக, வைத்தியர்களை செனல் செய்யும் போது, சேவைக் கட்டணங்களை முழுமையான கழிவாக வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது,
Doc990 என்பது இலங்கையிலுள்ள வாடிக்கையாளர்களுக்கு அத்தியாவசிய மருத்துவ சேவைகளை வழங்குவதற்கும் திறன்பேசிகள், TAB உள்ளிட்ட சாதனங்களிலிருந்தும் எளிதில் அணுகக்கூடிய ஒருங்கிணைந்த மொபைல், ஒன்லைன் அடிப்படையிலான தீர்வாகும்.
தற்போது Doc990 இணையத்தளத்தின் ஊடாக மருத்துவ ஆலோசனைகளுக்கான தொலைதூர ஆலோசகர்களுக்கான தொலைக்காட்சி சேவையிலும் தொலைபேசி மூலம் தொடர்புக்கொள்வதற்கும் மருந்துகள் வழங்குவதற்கும் விநியோகிப்பதற்கும் மருத்துவ அறிக்கைகளை அணுகுவதற்கும் முக்கிய ஆய்வுகூடங்களின் அறிக்கைகளையும் பெற்றுக்கொள்ள முடியும்.
வாடிக்கையாளர்கள் Apple App Store அல்லது Google Play Store க்கு சென்று Doc990 mobile app ஐ பதிவிறக்கம் செய்துக்கொள்வதன் மூலமும் அல்லது www.doc.lk எனும் இணையத்தளத்துக்குச் செல்வதன் மூலமும் இந்தச் சலுகையைப் பெற்றுக்கொள்ள முடியும்.
இந்த இணையத்தளத்தில் பதிவு செய்வதன் மூலமாக, எந்தவொரு வைத்தியரையும் முன்பதிவு செய்யும் சேவைக் கட்டணங்களை இலவசமாகப் பெற்றுக்கொள்ள முடியும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .