2024 மே 21, செவ்வாய்க்கிழமை

Golden Tower வதிவிடத் தொகுதிக்கு SLT-MOBITEL ஃபைபர் வசதி

Freelancer   / 2023 செப்டெம்பர் 18 , மு.ப. 08:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

SLT-MOBITEL, Golden Tower (Pvt) Ltd. உடன் புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளது. இல. 11, பொஸ்வெல் பிளேஸ், கொழும்பு 6 எனும் முகவரியில் நிர்மாணிக்கப்படும் வதிவிடத் தொகுதிக்கு ஃபைபர் இணைப்பு வசதியை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டிருந்தது.

SLT நுகர்வோர் வியாபார ஆதரவு பொது முகாமையாளர் புஷ்பகுமார சமரசிங்க மற்றும் Golden Tower PVT LTD. பணிப்பாளர் சச்சிதானந்தன் ஸ்ரீஜயன் ஆகியோர் இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டதுடன், இந்நிகழ்வில் இரு நிறுவனங்களினதும் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இந்த உடன்படிக்கையின் பிரகாரம், Golden Tower வதிவிடத் தொகுதியைச் சேர்ந்தவர்களுக்கு SLT-MOBITEL இன் மேம்படுத்தப்பட்ட ஃபைபர் இணைப்புகளையும், பரிபூரண தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப தீர்வுகளையும் அனுபவிக்க முடியும். அதனூடாக, அவர்களுக்கு வேகமான மற்றும் அதிகளவு தங்கியிருக்கக்கூடிய இணைய வேகங்களையும் பெற்றுக் கொள்ள முடியும்.

இந்த பங்காண்மை தொடர்பில் SLT நுகர்வோர் வியாபார ஆதரவு பொது முகாமையாளர் புஷ்பகுமார சமரசிங்க கருத்துத் தெரிவிக்கையில், “Golden Tower உடன் கைகோர்த்து, நவீன ஃபைபர் இணைப்பு வசதிகளையும், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப தீர்வுகளையும் வசிப்போருக்கு பெற்றுக் கொடுக்க முன்வந்துள்ளதையிட்டு நாம் மகிழ்ச்சியடைகின்றோம். எமது மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, நாட்டின் சகல பாகங்களிலும் டிஜிட்டல் மாற்றத்தை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு SLT-MOBITEL ஐச் சேர்ந்த நாம் எம்மை அர்ப்பணித்துள்ளோம். அந்தப் பயணத்தில் இந்த பங்காண்மை மற்றுமொரு அங்கமாகும்.” என்றார்.

Golden Tower PVT LTD இன் பணிப்பாளர் சச்சிதானந்தன் ஸ்ரீஜயன் கருத்துத் தெரிவிக்கையில், “நவீன ஃபைபர் இணைப்பு மற்றும் தகவல் தொடர்பாடல் தீர்வுகள் போன்றவற்றினூடாக எமது வசிப்போரின் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் SLT-MOBITEL உடன் கைகோர்த்துள்ளதையிட்டு நாம் மகிழ்ச்சியடைகின்றோம். வசிப்போருக்கு இந்த பங்காண்மை பெருமளவு பெறுமதியை ஏற்படுத்திக் கொடுக்கும் என்பதுடன், அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் எனவும் நாம் எதிர்பார்க்கின்றோம்.” என்றார்.

Golden Tower உடன் SLT-MOBITEL பங்காண்மையை ஏற்படுத்தியுள்ளமையானது, வாடிக்கையாளர்களுக்கு நவீன தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப தீர்வுகளை பெற்றுக் கொடுப்பதற்கான நிறுவனத்தின் அர்ப்பணிப்புக்கு மற்றுமொரு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளதுடன், இலங்கையின் டிஜிட்டல் மாற்றியமைப்பு பயணத்துக்கான பங்களிப்பின் அங்கமாகவும் அமைந்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .