Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2016 ஒக்டோபர் 18 , மு.ப. 02:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
புதிதாக சந்தையில் மீள் அறிமுகம் செய்யப்பட்ட Wild Elephant பானம், இளைஞர்கள் மத்தியில் அதிகளவு ஈடுபாட்டை கொண்டதாகும். இளைஞர்களுக்காக இலங்கையில் முன்னெடுக்கப்படும் வெவ்வேறு செயற்பாடுகளுடன் Wild Elephant பானம் தற்போது இணைந்து செயற்படுகிறது. இதனூடாக அவர்களுக்கு வலிமையயும், நம்பிக்கையும், சகல விடயங்களிலும் வெற்றியீட்டுதுக்கான தைரியத்தையும் பெற்றுக்கொடுக்கிறது.
இலங்கையின் மோட்டர் பந்தய விளையாட்டு போட்டிகளில் வளர்ந்து வரும் இளம் நட்சத்திரங்களைக் கொண்ட அணியான Hellibees Racing வலுவூட்டும் பங்காளராக Wild Elephant கைகோர்த்துள்ளது. இளம் சாரதிகளுக்காகக் கொண்டுள்ள Hellibees Racing என்பது படிப்படியாகக் குறுகிய காலப்பகுதியில் வளர்ச்சியடைந்துள்ளது. உள்ளூர் பந்தயக் களத்தில் பெருமளவு வரவேற்பையும் பெற்றுள்ளது.
Hellibees Racing உடனான புதிய பங்காண்மையின் ஊடாக, உள்நாட்டுப் பந்தய சாரதிகளின் ஆளுமை வளர்ச்சியில் தலைமைத்துவம் வகிக்கும் வாய்ப்பு Wild Elephantக்கு கிடைத்துள்ளது. அத்துடன், துறையில் காணப்படும் இளைஞர்களைக் கவர்வது, ஈடுபடுத்துவது போன்றவற்றையும் Hellibees Racing அணியுடன் இணைந்து Wild Elephant முன்னெடுக்கிறது.
Wild Elephant உடனான பங்காண்மை என்பது, இலங்கையின் பந்தயக் துறையில் Wild Elephant ஈடுபட்டுள்ள முதலாவது தடவை அல்ல என்பதுடன், பல ஆண்டுகளாக எலிபன்ட் ஹவுஸ் பானங்கள் மற்றும் Wild Elephant ஆகியன இலங்கையி புகழ்பெற்ற பல பந்தயங்களுக்கு அனுசரணை வழங்கியுள்ளன. இதில், Gunner Super Cross, அண்மையில் நடைபெற்ற வலவே சுப்பர் குரொஸ் 2016 மற்றும் விரைவில் நடைபெறவுள்ள கொமான்டோ சலேன்ஜ் ஆகியன உள்ளடங்குகின்றன.
Hellibees Racing ஸ்தாபகர் முராட் இஸ்மைல் கருத்துத் தெரிவிக்கையில், “2015 மே 17ஆம் திகதி நாம் எமது பயணத்தை 2 மோட்டார் சைக்கிள்கள், 2 நிகழ்ச்சிகள் மற்றும் 2 வெற்றிகளுடன் ஆரம்பித்திருந்தோம். ஒரு வருடத்துக்கு சற்று அதிகமான காலப்பகுதியினுள் தற்போது 20க்கும் அதிகமான கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களை நாம் கொண்டுள்ளதுடன், 50க்கும் அதிகமான வீரர்கள், 20க்கும் அதிகமான அனுசரணையாளர்கள் மற்றும் பங்காளர்களையும் நாம் கொண்டுள்ளோம். குறுகிய காலத்தில் இது சிறந்த வளர்ச்சியாகும்’ என்றார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “உண்மையான விளையாட்டு வீர, விராங்கனையாக உயர்ந்த மட்டத்தில் தமது திறமைகளை வெளிப்படுத்தச் செய்வது என்பது எமது பிரதான இலக்காகும். ஒழுக்கம், செயன்முறை, பயிற்சி, அர்ப்பணிப்பு போன்றவற்றினூடாக உள்நாட்டு ரேசிங் துறையில் புரட்சியை ஏற்படுத்த நாம் திட்டமிட்டுள்ளோம்ற. எமது எதிர்வரும் பந்தயங்களுக்கு அனுசரணை வழங்க எம்முடன் இணைந்துள்ள Wild Elephant நாமத்துக்கு நான் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார்.
13 minute ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
3 hours ago
4 hours ago