Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Editorial / 2019 ஜூன் 17 , மு.ப. 05:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
Hutch, சம்பத் வங்கியுடன் இணைந்து, மிகவும் இலகுவான வழியில் தவறவிடப்பட்ட அழைப்பு (missed call) ஊடாக வாடிக்கையாளர்கள் உடனடி ரீலோட்களைப் பெற்றுக்கொள்வதற்கு வசதியை ஏற்படுத்தியுள்ளது.
“Missed Call Reload” வசதியானது சம்பத் வங்கியால் வடிவமைக்கப்பட்டுள்ளதுடன், வாடிக்கையாளர்கள் 458 என்ற இலக்கத்தை அழைத்து, துண்டிப்பதன் மூலமாக மிக இலகுவாக, எந்நேரமும் தமது சம்பத் வங்கிக் கணக்கிலிருந்து தங்களுடைய Hutch இணைப்புக்கு உடனடியாக மீள்நிரப்பல் செய்யும் வகையில் பாவனையாளர் சிநேகபூர்வமான வசதியாக இது காணப்படுகின்றது.
தவற விடப்பட்ட அழைப்பு அறிவிப்பு கிடைக்கப்பெறும் சமயத்தில் முற்கூட்டியே நிர்ணயிக்கப்பட்ட ரூ. 100 என்ற மீள்நிரப்பு தொகை உடனடியாகவே வாடிக்கையாளரது மொபைல் கணக்குக்கு வரவு வைக்கப்படுவதுடன், சம்பத் வங்கிக் கணக்கிலிருந்து தானாகவே கழிக்கப்படும். இந்த வழிமுறை மூலமாக ஒன்றுக்கு மேற்பட்ட மீள்நிரப்பல் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.
இந்த வசதியை அறிமுகப்படுத்துவது தொடர்பில் Hutch நிறுவனத்தின் கையகப்படுத்தல், விநியோகத் துறை உதவிப் பொது முகாமையாளரான மெல்றோய் தோமஸ் கருத்து வெளியிடுகையில், “தவறவிடப்பட்ட அழைப்பு முறை மூலமாக எமது வாடிக்கையாளர்களுக்கு இப்புதிய மீள்நிரப்பல் வசதியை அறிமுகப்படுத்துவதற்காக சம்பத் வங்கியுடன் இணைவதையிட்டு Hutch மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளதுடன், அவர்கள் தங்களுடைய மொபைல் கணக்கில் சௌகரியமான மற்றும் திறன் மிக்க வழியில் மீள்நிரப்பலை மேற்கொள்ளும் வசதியாக இது அமையும் என நம்புகின்றோம்” என்று குறிப்பிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
53 minute ago
2 hours ago
3 hours ago
4 hours ago