Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஜூன் 27 , மு.ப. 07:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிங்கர் ஸ்ரீ லங்கா பிஎல்சி, ORELIT இன் பயன்பாட்டுக்கான 500 அலகுகளை விற்பனை செய்து, இலங்கையில் அதிகூடிய Intel NUC (Next Unit of Computing) விற்பனையை ஈட்டியுள்ளது.
ORELIT நிறுவனம், காலியில் புதிதாகத் திறந்துள்ள தனது கிளையின் வர்த்தகத் தொழிற்பாட்டு நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்துவதற்காக அதிநவீன NUC சாதனங்களைக் கொள்வனவு செய்துள்ளது.
Intel NUC குடும்பத்தின் புத்தம்புதிய அங்கத்தவர்களாக இணைந்துள்ள இச்சாதனங்கள், 6th generation Intel Core processor களைக் கொண்டு கட்டமைக்கப்பட்டுள்ளதுடன், வர்த்தக அலுவலகங்கள், வீட்டு அலுவலகங்கள், டிஜிட்டல் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு, வீட்டு பொழுதுபோக்கு, விளையாட்டு (gaming) மாநாட்டு மண்டப ஒன்றிணைப்பு மற்றும் டிஜிட்டல் விளம்பரம் போன்ற தேவைப்பாடுகளுக்கு மிகவும் பொருத்தமானவை.
Intel இனால் மிகச் சிறப்பாக கட்டமைக்கப்பட்டு, சீராக்கப்பட்டுள்ள இச்சாதனங்கள் 3 வருட உத்தரவாதத்துடனும், சிங்கர் ஸ்ரீ லங்காவின் புகழ்பெற்ற வாடிக்கையாளர் உதவு சேவையுடனும் கிடைக்கப்பெறுகின்றன.
இச்சாதனை விற்பனையை சிங்கர் ஸ்ரீ லங்காவின் வர்த்தக விற்பனைப் பிரிவு ஈட்டியுள்ளது. இப்பிரிவு வழங்கும் உலகத்தரம் வாய்ந்த உற்பத்தி வரிசையானது, சிங்கர் நிறுவனத்தின் புகழ்பெற்ற மிகச் சிறந்த விற்பனைக்குப் பின்னரான சேவையின் பக்கபலத்துடன், சர்வதேச பெரு நிறுவனங்களிடமிருந்து கிடைக்கப்பெறும் அதியுயர் தர உற்பத்திகளை விநியோகிக்க வேண்டும் என்பதில் நிறுவனம் கொண்டுள்ள அர்ப்பணிப்புடனான ஈடுபாட்டைக் காண்பிக்கின்றது.
Orel Corporation Ltd இன் ஓர் அங்கமாக 2010 ஆம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள ORELIT உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் வெளிச்சேவையமர்வு மற்றும் ஆலோசனை சேவைகளை வழங்கி வருகின்றது.
செலவுகளைக் குறைத்து, தரத்தை மேம்படுத்தும் உத்தரவாதத்துடன், இலங்கையிலிருந்து தகவல் தொழில்நுட்ப செயலாக்க சேவைகள், வர்த்தகத் தொழிற்பாடுகளை வெளிச்சேவையமர்த்தும் தீர்வுகளை வழங்குவதில் அது நிபுணத்துவம் பெற்றுள்ளது.
இலங்கையில் தொழிற்படும் மிகப் பாரிய KPO/BPO நிறுவனமாக ORELIT அறியப்பட்டுள்ளதுடன், KPO (அறிவு வெளிச்சேவையமர்வு), BPO (வர்த்தக தொழிற்பாடுகள் வெளிச்சேவையமர்வு), தகவல் தொழில்நுட்ப சேவைகள், மென்பொருள், வன்பொருள், வலையமைப்பு, மொபைல் மற்றும் இணைய வடிவமைப்பு, அபிவிருத்தித் துறைகளுடன், தீர்வுகள் பிரிவு, செயற்திட்டங்கள் பிரிவையும் உள்ளடக்கியதாக தகவல் தொழில்நுட்பம் தொடர்புபட்ட ஒட்டுமொத்த வர்த்தக சேவைகளையும் வழங்கி வருகின்ற உள்நாட்டு வர்த்தக நிறுவனமாகவும் திகழ்ந்து வருகின்றது.
6 minute ago
39 minute ago
44 minute ago
21 Jul 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
39 minute ago
44 minute ago
21 Jul 2025