Editorial / 2019 ஜனவரி 10 , பி.ப. 09:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
சென்ரல் இன்டஸ்டீஸ் பிஎல்சி, தனது புதிய சுவிட்ச்கள், சொக்கட்களை, Krypton முன்னணி தெரிவு வர்த்தக நாமத்தின் கீழ் அறிமுகம் செய்துள்ளது.
‘Krypton பரந்த Dolly முன்னணி தெரிவுகள்’ சுவிட்ச்கள், சொக்கட்கள் உலகத் தரம் வாய்ந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த அறிமுக நிகழ்வு சென்ரல் இன்டஸ்டீஸ் பிஎல்சியின் பிரதம நிறைவேற்று அதிகாரி மயூர ரூபதுங்கவின் பங்குபற்றலுடன் இடம்பெற்றது. இதில் Krypton விற்பனைச் செயலணியினரும் நிர்வாகத்தினரும் கலந்து கொண்டனர்.

இலத்திரனியல் சாதனங்களுக்கான உள்நாட்டு, சர்வதேச தரங்களுக்கமைய உற்பத்தி செய்யப்பட்டுள்ளதுடன், தற்கால சூழலில் காணப்படும் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையிலும் அமைந்துள்ளது.
இந்தப் பரந்த Dolly சுவிட்ச்கள், சொக்கட்கள் பொருத்திய பின்னர், முன்புறமாக கழற்றிக் கொள்ளக்கூடிய வசதியைக் கொண்டுள்ளன. இதன் காரணமாகப் பாவனையாளர்கள் அவற்றை இலகுவாகத் துப்பரவு செய்து கொள்ளலாம். இந்த சுவிட்ச்கள், சொக்கட்களை சுவரில் பொருத்திக் கொள்வதும் இலகுவாகும். முன்னணித் தெரிவுகளில் அடங்கும் சாதனங்கள் அனைத்தும் மிகவும் மெல்லிய பேஸ்களில் தயாரிக்கப்பட்டுள்ளதால் வயரிங் செய்யும் நடவடிக்கையும் இலகுவாக்கப்பட்டுள்ளது.
சென்ரல் இன்டஸ்டீஸ் பிஎல்சியின் பிரதம நிறைவேற்று அதிகாரி மயூர ரூபதுங்க கருத்து தெரிவிக்கையில், “Krypton வர்த்தக நாமத்தின் கீழ் எமது நிறுவனம் அறிமுகம் செய்திருந்த மின்சாதனங்கள் கடந்த பத்து ஆண்டுகளில் மில்லியன் கணக்கான மக்களின் வரவேற்பை பெற்றுள்ளன. இன்று நாம் பரந்த Dolly சுவிட்ச்கள், சொக்கட்களை அறிமுகம் செய்வதனூடாக Krypton வர்த்தக நாமத்தின் மீது எமது வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை நிலை நிறுத்திக் கொள்ளவும் உதவியாக அமைந்திருக்கும்” என்றார்.
8 hours ago
8 hours ago
20 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
20 Mar 2026