Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
Editorial / 2018 மே 29 , பி.ப. 08:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
SLIIT, தனது வியாபார முகாமைத்துவ முதுமானி (MBA) கற்கையை அறிமுகம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது.
உயர் கல்வி அமைச்சின் அனுமதியுடன் முன்னெடுக்கப்படும் இந்தப் புதிய MBA கற்கை எதிர்வரும் ஜுலை மாதம் SLIIT Business School இல் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதனூடாக நிறைவேற்று அதிகாரிகள், சிரேஷ்ட தலைவர்கள் மற்றும் முகாமையாளர்கள் போன்றவர்களுக்கு அவசியமான அறிவு மற்றும் முகாமைத்துவ திறன்களைப் பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கும்.
SLIIT-MBA அறிமுகம் தொடர்பில் SLIIT இன் பிரதம நிறைவேற்று அதிகாரியும் உப வேந்தருமான பேராசிரியர். லலித் கமகே கருத்துத் தெரிவிக்கையில், “MBA கற்கையை வடிவமைப்பதற்கு துறையின் நிபுணர்கள் அடங்கலாக முக்கிய பங்காளர்களுடன் இணைந்து நாம் பணியாற்றியுள்ளோம். இது எமது மாணவர்களுக்கு சிறந்த அறிவை பெற்றுக் கொள்ள உதவியாக அமைந்திருக்கும் என்பதுடன், உயர் மட்ட பகுப்பாய்வு மற்றும் முகாமைத்துவ திறன்களை பெற்றுக் கொள்வதற்கும் ஏதுவாக அமைந்திருக்கும். இதனூடாக இன்றைய மாற்றமடைந்து வரும் உறுதியற்ற வியாபார சூழலில் அவர்களுக்கு நிலைபேறாண்மை, புத்தாக்கம் மற்றும் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு அவசியமான தலைமைப் பொறுப்புகளை ஏற்கக்கூடிய தகைமை கிடைக்கும்” என்றார்.
இந்நிகழ்வின் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட கனடாவின் கார்ல்டன் பல்கலைக்கழகத்தின் Sprott School of Business இன் இணை பீடாதிபதி பேராசிரியர் மைக்கல் ரொட் கருத்துத் தெரிவிக்கையில், “சுதந்திரமான உலகில், மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய பொறுப்பான முகாமையாளர்கள் எமக்குத் தேவை. SLIIT உடன் இணைந்து இந்த அனுபவத்தைப் பெற்றுக் கொடுப்பதற்கு நாம் முன்வந்துள்ளதையிட்டு மிகவும் பெருமையடைகிறோம். எமது இரு உயர் கல்வி நிலையங்களினதும் நிபுணத்துவங்களை ஒன்றிணைத்து வழங்குகிறோம்” என்றார்.
புதிய MBA கற்கையை அறிமுகம் செய்து, வர்த்தக பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் சமந்த தெளிஜ்ஜாகொட கருத்துத் தெரிவிக்கையில், “நிறைவேற்று கல்வி போன்ற எமது வலிமையான பிரிவுகளை ஒன்றிணைக்க முடிந்ததையிட்டு நாம் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். எமது MBA கற்கையை ஆரம்பிப்பதற்கு இது முக்கிய பங்களிப்பை வழங்கியிருந்தது. எமது மாணவர்களுக்கு ஆய்வு, கொள்கை மற்றும் தலைமைத்துவ ஆளுமைகளை பெற்றுக் கொடுத்து, அவர்களின் தொழில் நிலைகளில் உயர்ந்த ஸ்தானத்துக்கு செல்வதற்கான வாய்ப்பு வழங்கப்படும்” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
26 minute ago
37 minute ago