Editorial / 2026 ஜனவரி 06 , மு.ப. 10:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொமர்ஷல் வங்கியானது சுற்றுலாவை சார்ந்த தொழில்களை வலுப்படுத்தவும், வெளிநாட்டு பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்தவும் தொடர்ந்து மேற்கொள்ளும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, Mastercard உடன் இணைந்து, இணையதள கட்டணங்களுக்கான இலங்கையின் முதலாவது மாறும் நாணய மாற்று (Dynamic Currency Conversion – DCC) வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இது நாட்டின் டிஜிட்டல் கட்டணத் துறையில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது.
Mastercard பணம் செலுத்தும் நுழைவாயில் சேவைகள் (MPGS) தளத்தின் மூலம் செயல்படுத்தப்படும் இந்த புதிய DCC வசதி, இலங்கை வர்த்தகர்களிடமிருந்து இணையதளம் மூலம் கொள்வனவு செய்யும் சர்வதேச அட்டைதாரர்கள், கட்டணம் செலுத்தும்போது தமது சொந்த நாணயத்தில் பணம் செலுத்த அனுமதிக்கிறது.
இலங்கையில் இணையதள கட்டணங்களுக்காக முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த தனித்துவமான வசதியானது, வெளிநாட்டுப் பயணிகள் நம்பிக்கையுடன் இணையதளத்தில் முன்பதிவு செய்து கட்டணம் செலுத்துவதை இலகுவாக்குவதன் மூலம், உள்ளூர் வர்த்தகர்கள் தமது தொழிலை வளர்த்துக்கொள்ள உதவுவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.
மாறும் நாணய மாற்று (DCC) வசதியுடன் Mastercard பணம் செலுத்தும் நுழைவாயில் சேவைகள் (MPGS) செயல்படுத்தப்படுவதன் மூலம், குறிப்பாக பயணம், விருந்தோம்பல் மற்றும் ஓய்வு நேரத் துறைகளில் செயல்படும் இலங்கை வர்த்தகர்கள், விமானப் பயணம், தங்குமிடம் மற்றும் அதனுடன் தொடர்புடைய சேவைகளுக்கான முன்பதிவுகளை மேற்கொள்ளும் வெளிநாட்டு வாடிக்கையாளர்களுக்கு மேலும் வெளிப்படையான கட்டணச் செலுத்தும் அனுபவத்தை வழங்க முடியும்.
இந்த புதிய மைல்கல் தொடர்பாக கொமர்ஷல் வங்கியின் முகாமைத்துவப் பணிப்பாளர் / பிரதம நிறைவேற்று அதிகாரி திரு. சனத் மனதுங்க அவர்கள் தெரிவிக்கையில்:'டிஜிட்டல் புத்தாக்கங்களில் எப்போதும் முன்னணியில் இருந்து வந்துள்ளோம். Mastercard பணம் செலுத்தும் நுழைவாயிலுக்காக இலங்கையின் முதல் மாறும் நாணய மாற்று (DCC) சேவையை அறிமுகப்படுத்தியிருப்பது, வர்த்தகர்களுக்கும் தேசிய பொருளாதாரத்திற்கும் நாம் மேற்கொள்ளும் உறுதியான அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகிறது. Mastercard உடன் மேற்கொள்ளப்பட்ட இந்தப் பங்குடைமையானது, எமது வர்த்தகர்களுக்கு போட்டித் திறன், புதிய வருமான வாய்ப்பு மற்றும் ஒவ்வொரு சர்வதேச வாடிக்கையாளருக்கும் வெளிப்படையானதும் வசதியானதுமான உலகத் தரமான கட்டண அனுபவத்தையும் வழங்க எம்மை தயார்ப்படுத்துகிறது. இது, அதிகமான டிஜிட்டல் வெளிநாட்டு வருவாயை ஈர்ப்பதற்கும், சுற்றுலாவை மேம்படுத்துவதற்குமான இலங்கையின் முயற்சிகளை ஆதரிக்கும் ஒரு முக்கியமான படியாகும்.'
Mastercard இன் இலங்கை மற்றும் மாலைதீவு நாடுகளுக்கான வதிவிட முகாமையாளர் திரு. சந்துன் ஹப்புகொட அவர்கள் தெரிவிக்கையில்: 'இந்த மைல்கல்லை முன்னோடியாக உருவாக்கியதற்காக கொமர்ஷல் வங்கியை Mastercard வாழ்த்துகிறது. மாறும் நாணய மாற்று (DCC) அறிமுகமானது, உலகளாவிய கட்டணத் துறையின் சிறந்த நடைமுறைகளை இலங்கைக்கு கொண்டு வந்து, சர்வதேச அட்டைதாரர்களுக்கு கட்டணம் செலுத்தும் போது தெரிவு சுதந்திரத்தையும் வெளிப்படைத்தன்மையையும் வழங்குகிறது. இடர் முகாமைத்துவ பரிவர்த்தனை (Transaction Risk Management – TRM) போன்ற மேம்பட்ட அம்சங்கள் உட்பட, Mastercard பணம் செலுத்தும் நுழைவாயில் (MPGS) தளத்தின் முழுமையான திறன்களையும் இந்த வங்கி சிறப்பாகப் பயன்படுத்தியுள்ளது. சிறிய தொழில்கள் முதல் கட்டண ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் வசதி வழங்குநர்கள் போன்ற சிக்கலான வர்த்தக மாதிரிகள் வரை, அனைத்து அளவிலான வர்த்தகர்களுக்கும் MPGS ஒரு பல்துறை தீர்வாக செயல்படுகிறது. FEXCO மற்றும் Euronet போன்ற கூட்டாளர்களுடன் மேற்கொள்ளப்பட்ட இடையற்ற ஒத்துழைப்பு மற்றும் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பின் விளைவாகவே, சந்தைக்கு மிக அவசியமான இந்தத் தீர்வு இன்று நிஜமாகியுள்ளது.'
இணையதள கட்டணங்களுக்காக DCC வசதியை விரிவுபடுத்துவதன் மூலம், உலகளாவிய ந-வர்த்தக தரங்களுக்கு இணையான, உலகத் தரமான கட்டணச் செலுத்தும் அனுபவத்தை இலங்கை வர்த்தகர்கள் வழங்க இந்த வங்கி உதவுகிறது. அதே நேரத்தில், சர்வதேச வாடிக்கையாளர்களுக்கு செலவுகள் குறித்த தெளிவையும், அவர்கள் எவ்வாறு கட்டணம் செலுத்த விரும்புகிறார்கள் என்பதில் அதிக கட்டுப்பாட்டையும் வழங்குகிறது.
இலங்கையில் அமெரிக்க டொலர் 1 பில்லியனுக்கும் அதிகமான சந்தை மூலதனத்தைக் கொண்ட முதலாவது வங்கியாகவும் உலகின் தலைசிறந்த 1000 வங்கிகளின் பட்டியலில் முதன் முதலாக உள்ளடக்கப்பட்ட இலங்கையின் வங்கியாகவும் திகழும் கொமர்ஷல் வங்கி, கொழும்பு பங்குச் சந்தையில் (CSE) வங்கித் துறையில் அதிக சந்தை மூலதனத்தைக் கொண்டுள்ளது. மிகப்பெரிய தனியார் துறை கடன் வழங்குநராகவும், SME துறைக்கு மிகப்பெரிய கடன் வழங்குநராகவும், டிஜிட்டல் புத்தாக்கங்களில் முன்னணியும் வகிக்கும் கொமர்ஷல் வங்கியானது, இலங்கையின் முதலாவது 100% கார்பன்-நடுநிலை பேணும் வங்கியுமாகும்.
கொமர்ஷல் வங்கியானது நாடு முழுவதும் தந்திரோபாயரீதியாக அமைக்கப்பட்ட கிளைகள் மற்றும் தானியங்கி இயந்திரங்களின் வலையமைப்பைச் செயற்படுத்திவருகின்றது. மேலும், பங்களாதேஷில் 20 கிளைகள், மாலைதீவில் பெரும்பான்மையான பங்குகளைக் கொண்ட ஒரு முழுமையான Tier I வங்கி, மியான்மாரில் ஒரு நுண்நிதி நிறுவனம் என சர்வதேச ரீதியில் பரந்தளவில் தடம் பதித்த இலங்கையின் வங்கியாகத் தன்னை நிலைநிறுத்தியுள்ளது. துபாய் சர்வதேச நிதியியல் மையத்தில் (DIFC) ஒரு பிரதிநிதி அலுவலகத்தை நிறுவுவதற்கு துபாய் சர்வதேச நிதியியல் சேவைகள் அதிகாரசபையிடமிருந்து அனுமதிபெற்றதுடன் இவ் மைல்கல்லை எட்டிய இலங்கையின் முதல் வங்கியாகத் தன்னைப் பதிவுசெய்துள்ளது. மேலும்,வங்கியின் முழுமையான உரித்துடைய துணை நிறுவனங்களான CBC Finance Ltd மற்றும் Commercial Insurance Brokers (Pvt) Limited ஆகியவையும் தங்கள் சொந்த கிளை வலையமைப்புகள் மூலம் பல்வேறு நிதிச் சேவைகளை வழங்குகின்றன.
7 hours ago
8 hours ago
14 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago
14 Jan 2026