Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2017 நவம்பர் 20 , பி.ப. 05:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
99X Technology தனது தொடர்ச்சியான செயற்பாடுகளுக்காக, 2017 தேசிய ஏற்றுமதியாளர் சம்மேளன விருதுகள் வழங்கும் நிகழ்வில், வியாபார மற்றும் நிபுணத்துவ சேவைகள் பிரிவில் தங்க விருதை சுவீகரித்திருந்தது.
இந்த வருடாந்த மதிப்பீட்டினூடாக, இலங்கையின் தேசிய பொருளாதாரத்துக்கு அந்நியச் செலாவணியை பெற்றுக்கொடுப்பதனூடாக பங்களிப்பை வழங்கும் சிறந்த ஏற்றுமதி நிறுவனங்களை கௌரவிப்பதை சம்மேளனம் வழமையாக கொண்டுள்ளது.
99X Technology இன் இணை ஸ்தாபகரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான மனோ சேகரம் தெரிவிக்கையில், “இலங்கையின் தகவல் தொழில்நுட்பத்துறையில் முன்னோடி எனும் வகையில், புத்தாக்கம் தொடர்பில் அதிகளவு கவனம் செலுத்தி, சர்வதேச சந்தையில் எமது மென்பொருள் தீர்வுகளின் ஏற்றுமதியூடாக அடையாளம் பதிப்பது பற்றி அதிகளவு கவனம் செலுத்தி வருகிறோம். ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் அவுஸ்திரேலியா போன்ற பிராந்தியங்களுக்கு எமது ஏற்றுமதிகள் மேற்கொள்ளப்படுகின்றன. தேசிய ஏற்றுமதியாளர் சம்மேளனம் போன்ற கீர்த்தி பெற்ற அமைப்பொன்றிடமிருந்து எமது முயற்சிகளுக்கு கௌரவிப்பு கிடைத்துள்ளமை, எமக்கு பெரும் ஊக்குவிப்பாக அமைந்துள்ளது. எதிர்வரும் ஆண்டுகளில் பெருமளவு ஏற்றுமதி வருமானமீட்டல்கள் ஊடாக, நாட்டுக்கு மேலும் வளமூட்ட நாம் எதிர்பார்த்துள்ளோம்” என்றார்.
இந்த ஆண்டு 99X Technology தங்க விருதை இந்தப்பிரிவில் வெற்றியீட்டியுள்ள மூன்றாவது வருடமாக அமைந்துள்ளதுடன், 2012 மற்றும் 2014இல் தங்க விருதை பெற்றிருந்தது. கடந்த ஆண்டில், வியாபார சிறப்பு மற்றும் நாட்டின் பொருளாதாரத்தில் பங்களிப்பு வழங்கியிருந்தமைக்காக தேசிய வியாபார சிறப்புகள் விருதுகள் வழங்கும் நிகழ்வில் 99X Technologyக்கு தேசிய வர்த்தக சம்மேளனம் விருது வழங்கியிருந்தது.
NCE ஏற்றுமதி விருதுகளுக்காக தெரிவு செய்யும் செயன்முறை கடுமையான ஆய்வுகளை கொண்டுள்ளன. சந்தை விஸ்தரிப்பு மற்றும் பொருட்கள் அபிவிருத்தி, பெறுமதி சேர்ப்பு, சட்ட விதிமுறைகளை பின்பற்றல், வினைத்திறன் வாய்ந்த நிர்வாக செயற்பாடுகள், தர முகாமைத்துவ நடவடிக்கைகள் மற்றும் சூழல் பாதுகாப்பு கட்டமைப்புகளை செயற்படுத்தல் மற்றும் சந்தைப்புத்தாக்கம் மற்றும் பல இதில் அடங்கியுள்ளன.
44 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
2 hours ago