2025 ஜூலை 30, புதன்கிழமை

NTB அட்டை வைத்திருப்போருக்கு வெகுமதிகள்

Gavitha   / 2016 நவம்பர் 21 , பி.ப. 07:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி இலங்கையில் காணப்படும் முன்னணி விற்பனை நிலையங்களுடன் கைகோர்த்து, வங்கியின் American Express (AMEX) மற்றும் MasterCard கார்ட் உரிமையாளர்களுக்கு சேமிப்புகளையும், சௌகரியமான கொடுப்பனவுத் திட்டங்களையும் வெகுமதிகளையும் வழங்க முன்வந்துள்ளது.  

வருட நிறைவை எதிர்நோக்கியுள்ள வேளையில், செலவீனம் என்பது பெருமளவு அதிகரிக்கக்கூடும், வாழ்க்கைத்தர மேம்படுத்தல்கள், வருட இறுதி கொண்டாட்டங்கள் விடுமுறைகள் போன்றன இதில் அடங்கியுள்ளன. நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கியினால் விசேடமாக வடிவமைக்கப்பட்ட பருவ கால கொடுப்பனவுத் திட்டத்தில், பெருமளவு சேமிப்புகளை நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கியின் American Express மற்றும் MasterCard அட்டை உரிமையாளர்களுக்குப் பெற்றுக்கொடுக்க முன்வந்துள்ளது. இதனூடாக இவ்வருட இறுதியில் வெவ்வேறு செலவுகளை சமாளித்துக்கொள்ள உதவியாக அமைந்திருக்கும்.  

நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கியின் கார்ட்கள் பிரிவின் தலைமை அதிகாரி நிமேஷ் பெர்னாண்டோ கருத்துத்தெரிவிக்கையில், “பெரும்பாலானோருக்கு விடுமுறைக்காலம் என்பது செலவீனம் நிறைந்த பருவமாகும். எதிர்பாராத செலவீனங்கள் மற்றும் வெவ்வேறான எதிர்பார்ப்புகள் மற்றும் தீர்மானங்கள் ஆகியன வருட நிறைவுடன் பிணைந்துள்ளன. எமது அட்டை உரிமையாளரின் வாழ்க்கைமுறை மற்றும் எதிர்பார்ப்புகள் ஆகியவற்றைப் புரிந்து கொண்டு, நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கியினால் விசேடமான நிகழ்ச்சித்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது, இதனூடாக அவர்களின் வாழ்க்கையை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு பல அனுகூலங்களையும், சேமிப்புகளையும் பெற்றுக்கொடுக்க முடிந்துள்ளது” என்றார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .