2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

OPPOஇல் சிரேஷ்ட நியமனங்கள்

Editorial   / 2018 ஜூன் 13 , மு.ப. 09:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

  OPPO தனது சர்வதேச வியாபாரம் மற்றும் இளம் திறமையாளர்களை மேம்படுத்தும் வகையில் புதிய தலைமைத்துவத்தை நிறுவியுள்ளதாக அறிவித்துள்ளது.    

முன்னர் சீனாவின் சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனை பிரிவின் பொறுப்பாளியாக கடமையாற்றிய அலென் வு, தற்போது OPPO சர்வதேச வியாபாரங்களுக்கு பொறுப்பாளியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

தனது புதிய பதவியில், முழு சர்வதேச வியாபாரங்களையும் அலென் மேற்பார்வை செய்வதுடன், சீனாவுக்கு வெளியே ஏனைய நாடுகளில் வளர்ச்சியை பதிவு செய்வதற்கான பொறுப்பதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். OPPO பிரதம நிறைவேற்று அதிகாரி டோனி சென் அவர்களின் மேற்பார்வையின் கீழ் அலென் வு இயங்குவார்.

டோனி சென் கருத்துத் தெரிவிக்கையில், “சர்வதேச வியாபாரம் என்பது மூலோபாய பங்கை வகிப்பதுடன், OPPO இல் அதிகளவு பெறுமதியையும் கொண்டுள்ளது.

அதுபோன்று, OPPO இல் இளம் திறமைசாலிகளை தயார்ப்படுத்துவதில் நாம் எம்மை அர்ப்பணித்துள்ளதுடன், பதவி ஊக்குவிப்புகளையும் வழங்க முன்வந்துள்ளோம். OPPO இன் பிரதம நிறைவேற்று அதிகாரிகளில் ஒருவரான அலென், சந்தைப்படுத்தலில் அதிக அனுபவம் வாய்ந்தவர் என்பதுடன், நுகர்வோர் உள்ளார்ந்த தகவல்கள் பலதையும் கொண்டுள்ளார். எதிர்வரும் ஆண்டுகளில் OPPOஇன் வளர்ச்சியில் அவர்களின் தொடர்ச்சியான பங்களிப்பை எதிர்பார்க்கிறோம்’ என்றார்.

OPPO உடன் 2006இல் இணைந்து கொண்ட அலென் வு, விநியோக வலையமைப்பு கட்டியெழுப்பல் பிரிவு மற்றும் மொபைல் தயாரிப்பு சந்தைப்படுத்தல் பிரிவின் பொறுப்பாளராக கடமையாற்றியிருந்தார். சீனாவுக்கான சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனை ஆகியவற்றின் பொறுப்பாளராக கடமையாற்றிய காலப்பகுதியில், சீனாவில் முதல்தர ஸ்மார்ட்/போன் வர்த்தக நாமமாக OPPO தெரிவாகியிருந்தது.

வர்த்தக நாம கட்டியெழுப்பல் மற்றும் விற்பனை வினைத்திறனிலும் உயர் வரவேற்பை பெற்றிருந்தது. தனது புதிய பதவியில், உலகின் முன்னணி ஸ்மார்ட்/போன் வர்த்தக நாமத்துக்கு OPPO ஐ தரமுயர்த்த அலென் பணியாற்றுவார் என்பதுடன், புதிய சந்தைகளுக்கு விஸ்தரிப்புகளை மேற்கொள்ளவும் உதவுவார். அத்துடன் ஏற்கெனவே காணப்படும் சர்வதேச வியாபாரங்களை மேலும் கட்டியெழுப்பிக் கொள்ள பங்களிப்பு வழங்குவார்.

OPPO இந்தியா தலைவராக சார்ள்ஸ் வொங் நியமிக்கப்பட்டுள்ளதுடன், இவரும் அலென் வு அவர்களின் மேற்பார்வையின் கீழ் இயங்குவார். இந்தியாவில் நிறுவனத்தின் வளர்ச்சி நிகழ்ச்சி நிரலை பூர்த்தி செய்வது தொடர்பில் இவர் கவனம் செலுத்துவார். சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனை பிரிவில் சுமார் இரண்டு தசாப்த கால அனுபவத்தை சார்ள்ஸ் கொண்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .