Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2016 செப்டெம்பர் 01 , மு.ப. 03:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
RIL Property இனால் நிர்மாணிக்கப்படும் PARKLAND, இலங்கையின் கூட்டாண்மைத்துறையில் குறிப்பிடத்தக்களவு மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கமைய, அதன் 80 சதவீதமான அலுவலகப் பகுதிகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
கொழும்பின் மையப்பகுதியில் பார்க் வீதியில் அமைந்துள்ள இந்த அலுவலகத்தொகுதி, கொழும்பின் வேகமாக வளர்ந்துவரும் கூட்டாண்மை வியாபாரங்களின் தேவைகளை உள்வாங்கும் வகையில் அமைந்துள்ளது.
வாடகைக்காக அறிமுகம் செய்யப்பட்ட ஒரு சில மாத காலப்பகுதியினுள் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வியாபாரங்களிடமிருந்து PARKLAND அலுவலகத்தொகுதி மீது பெருமளவு வரவேற்பு காணப்பட்டிருந்தது. PARKLANDஇல் ACCA, BreadTalk Sri Lanka, DFN Technologies மற்றும் Hemas Maritime ஆகிய நிறுவனங்கள் தமது அலுவலகங்களை நிறுவுவதற்கு முன்வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
RIL Property (பிரைவெட்) லிமிட்டட் தலைவர் சுனில் விஜேசிங்க கருத்துத் தெரிவிக்கையில், 'கொழும்பு நகரில் உயர் தரம் வாய்ந்த அலுவலக இடவசதியை வழங்குவதையிட்டு நாம் மிகவும் பெருமையடைகிறோம். இதன் மூலம் எமது பெறுமதி வாய்ந்த வாடிக்கையாளர்களுக்கு உயர் தரமான நவீன வசதிகளைப் பெற்றுக்கொடுப்பதுடன், உயர் உட்கட்டமைப்பு வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுக்கிறோம்.
அதன் மூலமாக அவர்களின் தேவைகளைத் தன்னிறைவுபடுத்த முடிந்துள்ளது. குறுகிய காலப்பகுதியில் நாம் 80 சதவீதமான PARKLAND என்பது 22,000 சதுர அடி நிலப்பரப்பைக் கொண்ட ஒரே கட்டிடமாக அமைந்துள்ளதுடன், 22 மாடிகளைக் கொண்டமைந்துள்ளது.
இதில் நவீன தொழில்நுட்ப வசதிகள் மற்றும் புதிய இதர வசதிகள் உள்ளடக்கப்பட்டுள்ளன. மேலும், PARKLAND மூலமாக நிறுவனங்களின் ஊழியர்களுக்கு தமது வர்த்தகச் செயற்பாடுகளை வினைத்திறன் வாய்ந்த வகையிலும், சிக்கனமான வகையிலும் முன்னெடுத்துச் செல்வதற்கு அவசியமான சூழலை ஏற்படுத்தியுள்ளது.
35 minute ago
45 minute ago
58 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
45 minute ago
58 minute ago
3 hours ago