Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2023 ஜூலை 17 , மு.ப. 05:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
Ruhunu Hospital, தனது சிகிச்சை வசதிகளில் புதிய மேம்படுத்தல்களாக - King's Court மற்றும் Presidential Suite ஆகிய ஆடம்பர சிகிச்சை அறைகளைத் திறந்துள்ளதாக அறிவித்துள்ளது. இந்த அதி-சொகுசு சிகிச்சை அறைகள் உயர் வகுப்பு சுகாதாரப் பராமரிப்பு அனுபவத்தை வழங்குவதுடன், அதிசிறந்த சௌகரியம் மற்றும் சொகுசு ஆகியவற்றின் இணைப்பையும் கொண்டுள்ளன.
சுகாதாரப் பராமரிப்பு உடல்நலம் மற்றும் வசதியில் மிகச் சிறந்ததைத் தவிர வேறு எதற்கும் முக்கியத்துவம் அளிக்காத நோயாளர்களுக்கு இந்த அதிசொகுசு சிகிச்சை அறைகள் மிகச்சிறந்தவை. தங்கள் அந்தரங்கத்திற்கு மதிப்பளிக்கும் மற்றும் அமைதியான மற்றும் ஆடம்பரமான சூழலில் சிகிச்சையைப் பெற்றுக்கொள்ள விரும்பும் நோயாளர்களுக்கு இவை நேர்த்தியானவை. நீங்கள் உள்நாட்டவராக இருந்தாலும் சரி அல்லது சர்வதேச நோயாளராக இருந்தாலும் சரி, Ruhunu Hospital இன் King's Court மற்றும் Presidential Suite ஆகியவை நிகரற்ற சுகாதாரப் பராமரிப்பு அனுபவத்தை வழங்குகின்றன.
மாபிள் பதிக்கப்பட்ட தரையுடன் கூடிய இருக்கை அறை, சாப்பாட்டு அறை, சமையலறை, நோயாளியின் படுக்கை, துணைக்கு நிற்பவரின் படுக்கை, பெண்களுக்கான ஓய்வறை மற்றும் ஒரு குளியல் தொட்டி ஆகியவற்றைக் கொண்டுள்ளன. இந்த சொகுசு அறைகள் ஆடம்பரமான மற்றும் அந்தரங்கமான சூழலில் விசேட கவனிப்புத் தேவைப்படும் நோயாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இரண்டு வகையான சொகுசு அறைகளும் 1000 சதுர அடிக்கு மேல் இடவசதியைக் கொண்டுள்ளன. Ruhunu Hospital இல் இந்த இரண்டு வகையான அதிசொகுசு அறைகளுக்கும் பிரத்தியேகமாக நியமிக்கப்பட்ட மருத்துவ வல்லுநர்கள் மற்றும் தொண்டு சேவகர்கள் அடங்கிய பிரத்தியேக அணி உள்ளது.
Ruhunu Hospital Pvt Ltd இன் இணைப் பிரதம நிறைவேற்று அதிகாரிகளான ரவீன் விக்ரமசிங்க மற்றும் ஜனித் லியனகே ஆகியோர் இது தொடர்பில் கருத்து வெளியிடுகையில், 'நோயாளர்களுக்கு அதிசொகுசு மற்றும் ஆறுதலின் நிகரற்ற அனுபவத்தை வழங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். எமது மருத்துவமனை தனது நோயாளர்களுக்கு அதிசிறந்த சுகாதார சேவைகளை வழங்க உறுதிபூண்டுள்ளது. Ruhunu Hospital ஆனது அதிசிறந்த சுகாதாரப் பராமரிப்பு மற்றும் அதிசொகுசு வசதியைக் கோரும் நோயாளர்கள் நாட வேண்டிய இடமாக மாறுவதற்கு தயாராக உள்ளது. நோயாளர்கள் மருத்துவமனையின் வைத்தியர்கள் மற்றும் தாதியரின் நிபுணத்துவ அணியிடமிருந்து தனிப்பயனாக்கப்பட்ட மருத்துவ சேவையைப் பெறலாம். இவை அனைத்தும் செழுமையான சொகுசு அறைகளின் உள்ளே வழங்கப்படுகின்றன. அடுத்த கட்டமாக நாங்கள் சர்வதேச மற்றும் உள்நாட்டு மருத்துவ சுற்றுலாத்துறையில் கவனம் செலுத்தி Ruhunu Hospital ஐ சுகாதாரப் பராமரிப்பில் உலகளாவிய செயல்பாட்டாளராக மேம்படுத்துவோம்,' என்று குறிப்பிட்டார்.
23 minute ago
27 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
27 minute ago
2 hours ago