Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
S.Sekar / 2021 மார்ச் 08 , பி.ப. 12:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
Ruhunu Hospital இலங்கையில் தனியார் துறையின் அதிநவீன குருதிக்குழாய் சத்திரசிகிச்சை மையத்தை திறந்து வைத்துள்ளதுடன், தென் மாகாணத்தில் தனது சேவைகளையும் விஸ்தரிக்கின்றது. புத்தாக்கமான விநியோக கட்டமைப்புடனான சேவையை வழங்கி, மருத்துவ சிகிச்சை நிபுணத்துவத்தை மேம்படுத்தும் அதேசமயம், குருதிக்குழாய் சிகிச்சையில் முன்னோடியாகத் திகழ்வதே அதன் இலக்கு. அத்துடன் முன்னணி தொழில்நுட்பங்கள் மற்றும் நுட்பங்களை உள்வாங்கி, அதியுச்ச சிகிச்சையை வழங்கும் வைத்தியசாலையாக மாற வேண்டும் என்ற திசையில் பயணித்து வருகின்றது.
குருதி நாள சத்திர சிகிச்சை நிபுணரான வைத்தியர் ரஞ்சுக உபயசிறி [MBBS (COL), MS (SL), MRCS(UK)] அவர்களின் தலைமையில் குருதிக்குழாய் அறுவைச்சிகிச்சை மையம் இயங்குகிறது. 10 ஆண்டுகளுக்கும் மேலாக கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் சேவையாற்றியுள்ள வைத்தியர் உபயசிறி அவர்கள், மிகுந்த கருணையும், கவனிப்பும் மிக்க சிகிச்சைகளை தாதியர் மற்றும் தொழில்நுட்பவியலாளர்கள் அடங்கிய அணியுடன் இணைந்து அனைத்து நோயாளர்களுக்கும் வழங்குவார். குருதிக்குழாய் நோயின் சிக்கலான தன்மையாக அது பெரும்பாலும் ஏனைய மருத்துவ வியாதிகளுடன் இணைந்ததாக காணப்படுவதுடன், வைத்தியர் உபயசிறி மற்றும் அவரது அணியினர் அதியுயர் தர மருத்துவப் பராமரிப்பினை வழங்குவர்.
அனைத்து உபகரண வசதிகளையும் கொண்ட மினி சத்திரசிகிச்சைக்கூடம், 6 நோயாளர் படுக்கைகள், கட்டணப்பட்டியலுக்கு பிரத்தியேக கருமபீடம், உயர்ந்த மட்டத்தில் சுத்தம் பேணப்படுகின்ற புண்ணைச் சுத்தப்படும் இடம், வைத்திய ஆலோசனை அறை, சௌகரியமான காத்திருக்கும் இடம் மற்றும் பாதச் சிகிச்சை மையம் ஆகியவற்றை இந்த குருதிக்குழாய் அறுவைச்சிகிச்சை மையம் கொண்டுள்ளது.
Ruhunu Hospital இணைத் தலைமை நிர்வாக அதிகாரியான ரவீன் விக்கிரமசிங்க இந்த சாதனைச் செயற்திட்டத்தை வழிநடாத்தியுள்ளதுடன், இது தொடர்பில் கருத்து வெளியிடுகையில், 'குருதிக்குழாய் வியாதியைக் கொண்ட நோயாளர்களுக்கு அதனை சிறப்பாகக் கண்டறிந்து, சிகிச்சையளித்து, குணப்படுத்துவதற்கு எமது புதிய குருதிக்குழாய் அறுவைச்சிகிச்சை மையம் எமக்கு இடமளிக்கும். எமது புதிய அதிநவீன சத்திர சிகிச்சை வசதிகள் மற்றும் வல்லுனர்களைக் கொண்ட அர்ப்பணிப்பு மிக்க அணி ஆகியவற்றுடன், குருதிக்குழாய் வியாதியைக் கொண்டுள்ள நோயாளர்களுக்கு தென் மாகாணத்தில் முதன்முறையாக இத்தகையதொரு சேவையை வழங்க நாம் தயாராக உள்ளோம். குருதிக்குழாய் அறுவைச்சிகிச்சை மையமொன்றை ஸ்தாபிக்க வேண்டியமைக்கான முக்கியத்துவத்தை நான் கண்கூடாகக் கண்டுள்ளேன். 10 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்துடன் தெற்காசியாவிலேயே நன்மதிப்புப் பெற்ற குருதிக்குழாய் அறுவைச் சிகிச்சை நிபுணரான ரஞ்சுக அவர்களை இந்த மையத்தை தலைமைதாங்கி கொண்டு நடாத்துவதற்காக நியமித்துள்ளோம்,' என்று குறிப்பிட்டார்.
இணைத் தலைமை நிர்வாக அதிகாரியான ரவீன் விக்கிரமசிங்க இந்த குருதிக்குழாய் அறுவைச்சிகிச்சை மையத்தில் கிடைக்கப்பெறும் உயர் ரக அறுவைச்சிகிச்சை சேவைகள் தொடர்பில் மேலும் கூறுகையில், 'மிகவும் விரும்பப்படுகின்ற மருத்துவ வல்லுனர்களால் angioplasty/angiography, stenting, embolectomy, bypass சத்திரசிகிச்சைகள், அவயவங்களை அகற்றுதல் (amputation) மற்றும் carotid சத்திரசிகிச்சைகள் அடங்கலான பல்வேறு புதிய விசேட அறுவைச்சிகிச்சை சேவைகளையும் நாம் ஆரம்பித்துள்ளோம்,' என்று குறிப்பிட்டார்.
குதிக்கால் வலிக்கான சிகிச்சை, நீரிழிவுப் பாதச் சிகிச்சை மற்றும் பாதக் குறைபாடுகளுக்கு சிகிச்சை, கணுக்கால் இயலாமை, பாத வளைவு வலி, தட்டையான பாதம் மற்றும் கீழ்நோக்கி வளைந்திருக்கும் கால்விரல் (hammertoes) உள்ளிட்ட பாத சிகிச்சைகளையும் இந்த மையம் வழங்குகின்றது.
29 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
2 hours ago
2 hours ago