Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2016 நவம்பர் 21 , பி.ப. 10:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
தெற்காசிய தொழில்நுட்ப மற்றும் மருத்துவ கல்வியகத்தின் (SAITM) தனது நான்காவது பட்டமளிப்பு விழாவையும், 1ஆவது மற்றும் 2ஆவது தொகுதி MBBS கற்கையைப் பூர்த்தி செய்த மாணவர்களுக்கானப் பட்டமளிப்பு விழாவையும் ஏற்பாடு செய்திருந்தது. இந்த நிகழ்வு கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வின் பிரதம அதிதியாக பிரித்தானிய மருத்துவ சம்மேளனத்தின் தலைவரான பேராசிரியர் சேர். சபாரத்தினம் அருள்குமரன் பங்கேற்றிருந்தார்.
சிறப்பு அதிதிகளாக சுகாதார, போஷாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் கலாநிதி. ராஜித சேனாரத்ன, சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க, உயர் கல்வி இராஜாங்க அமைச்சர் மோஹன்லால் கிரேரு மற்றும் இலங்கை மற்றும் மாலைதீவுகளின் ரஷ்ய உயர்ஸ்தானிகர் அலெக்ஸான்டர் ஏ. கர்சாவா ஆகியேர் பங்கேற்றிருந்தனர்.
விசேட விருந்தினர்களாக, ரஷ்யாவின் Nizhny Novgorod அரசாங்க மருத்துவ கல்வியகத்தின் உபவேந்தர் பேராசிரியர். சேர்கெய் நிகொலெவிச் சைபுசர், ரஷ்யாவின் NNSMAஇன் முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் புலனொவ், ரஷ்யாவின் NNSMA இன் மருத்துவ பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் எலினா இவனொவ்னா, ரஷ்யாவின் NNSMAஇன் சத்திர சிகிச்சைகள் பிரிவின் தலைமை அதிகாரி பேராசிரியர் விளாடிமிர் சகய்னொவ் மற்றும் சீனாவின் யங்கட்சி பல்கலைக்கழகத்தின் சர்வதேச பரிமாற்றல் மற்றும் கூட்டாண்மை அமைப்பின் பதில் பணிப்பாளர் பேராசிரியர். ஹு அயிஃபாங் மற்றும் சீனாவின் யங்க்ட்சி பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ் பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் சவு சொங்ளின் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .