Editorial / 2020 ஜூலை 01 , மு.ப. 11:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
SINGER, தனது புதிய இணையத்தளத்தை அண்மையில் அறிமுகப்படுத்தியது. இது சீரானதும், வசதியானதுமான இணைப்பை ஏற்படுத்துவதன் மூலம் வாடிக்கையாளர்களுக்குச் சிறந்த சேவையைப் பெற்றுக் கொடுப்பதை இதனூடாக உறுதி செய்துள்ளதாக SINGER அறிவித்துள்ளது.
SINGER, தொடர்ந்தும் தனது வர்த்தக நாமத்தின் வாக்குறுதிக்கு உண்மையாக விளங்குவதுடன், இலத்திரனியல் வர்த்தக உலகில், தனது இருப்பையும் விஸ்தரித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

இப் புதிய தளமானது, எந்தவொரு சாதனத்திலும் தடையின்றி இயங்கத்தக்கவாறான வடிவமைப்பைக் கொண்டதாகும். இது வேகமானதும், வசதியானதுமான இணையப் பாவனை அனுபவத்தைப் பாவனையாளர்களுக்கு வழங்குவதுடன், டிஜிட்டல் வெளியில் பயணிக்க மிக முக்கியமானதாக விளங்குகின்றது.
இந்த இணையத்தளமானது, பாவனையாளர்கள் தமது விருப்பத்துக்குரிய தயாரிப்புகளை பார்வையிட்டுக்கொண்டிருக்கும் போது, இலகுவாக ‘ஒன்லைன் ஒர்டரை’ மேற்கொள்வதற்கு ஏதுவாக அமையும், இலகுவானதும் மிக விரைவானதுமான ஒரு கொள்வனவு முறைமையை உள்ளடக்கியுள்ளது.
ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் தனித்துவமான ‘ஒன்லைன்’ அனுபவத்தை வழங்கும் பொருட்டு, தயாரிப்புகளைப் பார்வையிடுதல், தயாரிப்புகளைக் கொள்வனவு செய்தல், ஓடர்களை வழங்குதல், இலகுவான checkout செயன்முறை, பாதுகாப்பான கட்டணம் செலுத்தும் முறைகள் போன்ற பல்வேறு நோக்கங்களை இலகுவாக்கும் வகையில் இப் புதிய இணையத்தளமானது வடிவமைக்கப்பட்டுள்ளது.
41 minute ago
42 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
42 minute ago
1 hours ago
1 hours ago